அன்பின் சக்தி (2)     அன்பு என்றதும் இன்று எல்லோரும் தேவையற்றப் பேச்சோ, நேர விரயமோ என்று தான் நினைக்கின்றனர். ஏனெனில் அதை எதனுடனாவது ஓப்பிடு செய்துப் பார்ப்பதில் தான் பலர் இன்புறுகிறார்கள். காரணம் நம் மனம் இன்றைய பொருளாதார சூழலில் சிக்கி சோர்வுற்றிருக்கிறது. எனவே தான் அன்பை, அறிவிற்கும்,பணத்திற்கும், இன்னும் நிறைய விஷயங்களுக்கும் ஓப்பிடு செய்துப் பார்ப்பதிலேயே நம் மனம் முயல்கிறது.

     இருப்பினும் நம் எல்லோருடைய மனமுமே அன்பை நோக்கிய தேடலிலேயே தான் இருக்கிறது.” “என்ன தான் அன்பு செலுத்தினாலும் அதற்கு மதிப்பில்லை”“ என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஏமாற்றம் நாமெல்லாம் அன்பை மதிப்பீடு செய்ய முயல்வதனாலேயே நிகழ்கிறது.
     அன்பு மதிப்பீடு செய்ய முடியாத ஒரு ஆற்றல். ஒவ்வொரு மனமும் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் அது. மூச்சை இழுத்து வெளிவிடுவதைத் தான் நாம் எல்லோரும் செய்துக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் அந்தக் கலையை சரியாக செய்பவர்கள் அளவில்லாத ஆற்றலைப் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அந்த கலை தெரியாதவர்கள் நோயுற்று உடல் நலக் குறைப்பாடுகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
     இதேப் போல் அன்பைப் பேணிக் காப்பதும் ஒரு கலை தான். அது நிறையப் பேருக்கு தெரிவதில்லை. எனவே தான் அன்பைப் பற்றிய புரிதலின்மை இன்று சமூகத்தில் பெறுகி வருகிறது. அன்பு தான் உண்மையில் நமக்கு பேராற்றலைத் தரக் கூடிய நம்பிக்கையைத் தருகிறது. அந்த நம்பிக்கை தான் நம்மை இவ்வுலகில் வாழும் ஊக்கத்தைத் தருகிறது.
     சில வருடங்களுக்கு முன் இணையத்தில் ஒரு உண்மை சம்பவம் என்று ஒரு செய்தியைப் படித்தேன். ராணுவத்தில் போர் முனையில் வீரர்கள் எதிரிப்படையை எதிர்த்து போர் செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.
     ப்பொழுது எதிரிப் படை முன்னேறி வந்துவிடுகிறது. கேப்டனும் மற்ற வீரர்களும் அந்த இடத்தை விட்டு பின்னோக்கிச் செல்கிறார்கள். அப்பொழுது ஒரு வீரன் மட்டும் அங்கேயே நின்று யாரையோ தேடுகிறான். கேப்டன் கேட்டதற்கு தன் நண்பன் முன்னால் இருக்கிறான். ” “அவனை அழைத்து வர வேண்டும் “ என்று சொல்கிறான். தற்கு கேப்டன்” “இப்பொழுது முடியாது, பிறகு வரலாம்”“ என்று அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிடுகிறார்.
     தன் பிறகு சில மணி நேரங்களில்  வீரர்கள் எதிரிப்படையினரை விரட்டியடித்துவிடுகிறார்கள். அப்பொழுது தன் நண்பனை காப்பாற்ற செல்ல வேண்டுமென்று அந்த வீரன் கேப்டனிடம் அனுமதி கேட்கிறான். கேப்டன் நீ அங்கு செல்வது வீண், உன் நண்பன் இறந்திருப்பான் என்று சொல்கிறார். தற்கு அந்த வீரன் ” “இல்லை, அவன் இறந்திருக்க மாட்டான்.”“என்று சொல்லி ண்பனைத் தேடிச் செல்கிறான். தேடிச் சென்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வருகிறான்.
     கேப்டன் நண்பன் எங்கே என்று கேட்கிறார். அவன் இறந்துவிட்டதாக அந்த வீரன் சொல்கிறான். கேப்டன் கிண்டலாக நான் அப்பவே சொன்னேன் என்று சொல்கிறார். அதற்கு அந்த வீரன் சொன்னப் பதில் தான் உண்மையில் என்னை நெகிழ வைத்தது. இல்லை கேப்டன் நான் அங்கு செல்லும் பொழுது அவன் உயிரோடு இருந்தான். என்றான். கேப்டன் அதனால் பயனென்ன? என்று பொருள்முதல்வாத கேள்வியை அவன் முன் வைத்தார்.
     அந்த வீரனோ, இல்லை கேப்டன் நான் சென்றப் பொழுது அவன் உயிருடன் இருந்தான். என்னைப் பார்த்ததும், நீ என்னைக் காப்பாற்ற வருவாய் என்று எனக்குத் தெரியும் ண்பா! என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். எனக்கு அதுப் போதும் கேப்டன். என்றான் அந்த வீரன்.
ஒரு நண்பனுக்கு இறக்கும் தருவாயில் இன்னொரு நண்பன் அளிக்கும் மாபெரும் ஆனந்தம் இதை தவிர வேறெது இருக்க முடியும். இந்த இரண்டு நண்பர்களுக்கும் உள்ள் நம்பிக்கை தான் அந்த ஆனந்தத்தை இவர்களுக்கு அளித்தது. அந்த நம்பிக்கையை அளித்தது அன்பென்ற ஆற்றல் தான்.
     அந்த அன்பின் சக்தி தான்,தன் நண்பன் இறந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையை உண்மையாக்கியது. அந்த நம்பிக்கை தான் தன் நண்பன் நிச்சயம் வருவான் என்று இறக்கும் தருவாயிலும் ஒருவனை யோசிக்க வைத்திருக்கிறது. இறக்கும் தருவாயிலும் அன்பின் சக்தியே அவன் உயிரைப் பிடித்துவைத்திருந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.
     அன்பின் சக்தி அளவற்றது. அப்படியிருக்க அதன் அளவை மதிப்பீடு செய்ய முயல்வது எத்தனை அறியாமை. அன்பின் ஆற்றல் இன்னும் விரிவடையும்

2 comments:

அருமையான பதிவு

மிகவும் நெகிழ்வான நிகழ்வு..நல்ல பதிவு..பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More