தங்க மங்கைகள் !

தங்க மங்கைகள் !


                                            பெண் அழகா ? பொன் அழகா ? 

இது கண்டிப்பாக ஒலிம்பிக்  பந்தயம் , தங்கப்பதக்கம்
பற்றிய பதிவு அல்ல. வெறும் தலைப்பை மட்டும் பார்த்து
அவசரமாக ஊகித்து  ஏமாந்தவர்கள
இப்போது இந்த படத்தை பார்த்து ஒரு முடிவிற்கு
வந்து இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

உனக்குத் தங்க மனசு என்று எத்தனை நாட்களுக்குத் தான்
வெறும் வாயால் புகழ்ந்து  கொண்டு இருப்பது மனைவியை ?
தங்கம் வெறும் பெயரிலோ, மனதிலோ மட்டும் இல்லாமல்
சேமிப்பிலும் சிறிது இருந்தால் தான் வீட்டிற்கு மட்டும் அல்ல
நாட்டிற்கும் மதிப்பு.

                                                              பொன்மகள் வந்தாள்


'karat - carat '  ------  வித்தியாசம் தெரியுமா நமக்கு ?

தங்கத்தின் பரிசுத்தம் காரட் என்ற குறியீட்டின் மூலம் குறிக்கப்படுவது ,
எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அவ்வளவாகத் தெரியாதது ,
பொன்னிற்கான 'karat '   என்றக் குறியீடிர்க்கும் , வைரத்திற்கான  'carat '
என்ற குறியீடிர்க்கும் உள்ள வித்தியாசம் .
உதாரணத்திர்க்கு 22 ' karat ' தங்கம்  என்பது  ஆபரணத் தங்கம் .
இங்கே ' karat ' என்பது அதன்  சுத்த  சதவீதத்தைக்  குறிக்கும் .
ஆனால் வைரத்தில் 'carat ' என்பது அதன் எடையைக் குறிக்கும்.
வைரம் 5 'carat ' எடை என்றால் அது 1 கிராம்  தங்கத்தின் அளவிற்கு
சமம்.  
                                                       எடை - 55 kgs : நகைக்கு முன் 
                                                       எடை -  100  kgs  நகைக்குப் பின் '91 .6 '  தங்கம் என்பது என்ன ?

எந்த வித உலோகமும் கலக்காத தூய தங்கம் 24k
என்று குறிக்கப்படும் .
இதில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்து செய்யப்பட்டால் அது
ஆபரணத் தங்கம் . அதாவது 22 /24 என்ற பின்னத்தையே தசம பின்னமாக
மாற்றி 91 .6 என்கிறோம்.
18k தங்கம் என்பது 75 %  தூயத் தன்மைக் கொண்டதாக கருதப்படுகிறது.

                                                    simple  bridal  collection ? அதன் டிசைன்கள் , வகைகள் என்ன ?
தங்கத்தில் பல்வேறு கற்கள் பதித்தும் , லேசர் கட்டிங் செய்தும் , எனாமல்
பூச்சு பூசியும் , பல நுணுக்க வேலைப்பாடுகள் செய்தும் கண்ணையும்
கருத்தையும் கவரும் விதத்தில் ஆபரணங்கள் செய்கின்றனர்.
சிகப்பிற்கு காப்பர் ஆக்சைட் ,  நீலத்திற்கு கோபால்ட் ஆக்சைட் என்று
வேண்டும் நிறத்திற்கு ஏற்ப உலோகப் பூச்சு சேர்க்கின்றனர்.
அதற்கேற்றவாறு பெயரும் இடுகின்றனர் . குந்தன் , கல்கத்தா மாடல் , மீனாகாரி ,
காஷ்மீரா , கிளாசிக் , மணமகள் கலக்க்ஷன் என்று  வகைகள் அணிவகுப்பு நடத்துகின்றன.
அதை அணிந்து மாடல்களும் ஒய்யார 'பூனை நடை' நடக்கின்றனர்.
இதில் பல 'brands '  உண்டு . டிவைன்  , பெர்ஷியா , நக்ஷத்ரா , சாலிடர்
என்று இதன் பட்டியல் நீளம் .

தங்கமே   தங்கம்


முதலீடு எவ்வாறு ?

உடனடியாக திடீர் என்று நகை வாங்குவது யாருக்கும் எளிதான காரியம்
அல்ல. எனவே மாதா மாதம் தங்கள் நம்பிக்கைக்கு உரிய
ஸ்தாபனத்தில் தங்கச்சீட்டு திட்டத்தில் சேருவது என்பது ஒரு
நல்ல வழியாகும் . ஆப் சீசன்  வரும் போது வாங்கலாம்
 விலையையும் கருத்தில் கொண்ட பின்.
[ தீபாவளி , பண்டிகைக் காலம் தவிர்த்து , ஆடி மாதம் போல ]
பொன்னை ஆபரணமாகச்  சேர்ப்பதற்குப் பதில்  நாணயங்களாகச்
சேர்ப்பது அதிக லாபம் பெற்றுத் தரும் .  இதில் சேதாரம் , செய்கூலி இல்லை.
டையிங்  சார்ஜஸ் மட்டும் சிறிது உண்டு. திரும்பத் தரும் போதும்
பெரிதாக எந்த கழிவும் இருக்காது.
இன்னொரு லாபகரமான சுலப வழி , கோல்ட் ETFஎன்ற பண்டுகளில் 
முதலீடு செய்வதுதான் . தங்கம் காகித உருவில் பத்திரமாக இருக்கும்.
ஆனாலும் அடிக்கடி அதை நல்ல விலை ஏறும் போது விற்று  தங்க
நாணயங்களாக அல்லது நகைகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவில்  கல்நகைகள்  அதிகம்  வாங்காமல்   இருப்பதும் , பாஷன் கருதி அதை அடிக்கடி மாற்றாமல் இருப்பதும் ஒரு புத்திசாலிதனமான முதலீடே.

பொன்னான வாய்ப்பு மணமகனுக்கு 


தங்கப் பராமரிப்பு :
 
பொதுவாக ஒப்பனை அனைத்தும் முடிந்த பிறகே , கடைசியில் தான் தங்கநகைகள் அணிய வேண்டும்.
கழட்டி வைத்தப் பின் உடனடியாக   உள்ளே வைக்காமல் 
வியர்வை ஈரம் போக ஆறிய பின் நன்றாக ஒரு மென்மையானத் துணி [பனியன் கிளாத்   போன்றவை]   கொண்டு துடைத்த பின் 
பெட்டியில் வைக்கவும். அவ்வப்போது சோப்பு கலந்த தண்ணீரால் டூத் பிரஷ் கொண்டு தேய்த்துக்  கழுவியும் வைக்க வேண்டும் . 
இது அன்றாடம் நாம் அணியும் தாலிச் சங்கிலி , செயின் , காதணி போன்றவற்றிற்குப் பொருந்தும்.
அப்படி வைக்கும் போதும் கல்பதித்தவைகள் ,வெள்ளி ஐட்டங்கள் ஆகியவற்றுடன் கலக்காமல்  தனியாக அதற்கென உள்ள பெட்டியில் மடங்காமல் வைக்கவும். 
விசேஷங்களுக்கு   வெளி ஊருக்கு எடுத்து செல்லும் போது
அதற்கென விற்கப்படும் 'ட்ராவல் பௌச்சுகள்' உள்ளன.அவற்றை வாங்கி உபயோகப்படுத்தவும்.  
   
அழகுப் பெண்ணே  - பொன்னே 

       

தங்கம்  ஒரு முதலீடு , சேமிப்பு , அழகு , ஆஸ்தி மட்டும் அல்ல
அதை பஸ்பமாகி உடல் வலிமைக்கும் பயன்படுத்துகின்றனர்  .
அழகு சாதன பொருட்களிலும் சேர்க்கின்றனர். முகக் க்ரீம்களிலும் , அழகுநிலையங்களில்     'கோல்டன் பாசியல் ' என்று தங்கமயமாகி விட்டனர் எங்கும்.
ஆனால் தற்போது எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும் 
தூய தங்கச்சரிகை கொண்ட பட்டுப்புடவைகள் கிடைக்கின்றனவா 
என்பது சந்தேகமாக உள்ளது.  
 காதுகளில் , மூக்கில் என தங்க நகைகள் அணியும் போது 
உடலில் உள்ள அக்கு பிரஷர் புள்ளிகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம்
மேம்படுத்தப்படுகிறது. எனவே ஆண்கள் நகை அலர்ஜி ,
பொன் போபியா விற்கு உட்படாமல் , ஏன் நீங்கள் தங்கப்பைத்தியமாக
 இருக்கிறீர்கள் என பெண்களைக் கேலி பேசாமல் அதன் அருமை உணர்ந்து
நீங்களும் பிரேஸ்லெட் , watch இன்னும் பல அணிகலன்கள்  அணிந்து
ப்ரியமானவர்களுக்கும் வாங்கி அணிவித்து
மகிழுங்கள். பிறகென்ன ,
எல்லா நாட்களும் மின்னும் பொன்னாட்கள் தான் .

அக்ஷயத்ரிதியை ஆபார்ல.. 


தங்கச் சுரங்கம் என்ற பெயர் பொருத்தம் தானா என்று இப்போது
சொல்லுங்கள் அன்பர்களே !.


 தங்க மங்கையே !

 

2 comments:

என்மனைவியிடம் கேட்டு சொல்கிறேன்.

மனைவிகள் அனைவரும் பொன் தான் அழகு
எனக் கூறுவார்களே !
கருத்திற்கு நன்றி !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More