மனோரா (ஒரு சுற்றுலாத்தலம்)மனோரா
இது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.எங்கள் ஊர் பக்கம் உள்ள ஒரு சிறந்த சுற்றுலாத்தலம் இது..! சில நாட்கள் முன்னர் மனோரா வழியாக ஒரு திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது..! படம் புடிச்சு பதிவா போடலாமேன்னு...........!


மனோரா பற்றிஇது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கி .பி 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஆங்கில அரசுக்கு ஜால்ரா மன்னராக இருந்த இவர் ஆங்கிலேயர்களுக்கும் நெப்போலியனுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார் . 75 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்த உப்பரிகை போல் அமைந்த கோட்டைக்கு சரபோஜி மன்னர் ராணியுடன் சில சமயங்கள் வந்து போனதாக தகவல்கள் உண்டு. துப்பாக்கிகள்,மற்றும் ஏனைய ஆயுதங்கள் வைத்துகொள்ளும் இடமும் இங்கே உண்டு.


இருப்பிடம் மற்றும் செல்லும் வழி

பட்டுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டர் தொலைவில் சேதுபாவாசத்திரம் உள்ளது அங்கிருந்து இடது புறம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மனோரா உள்ளது .

பட்டுக்கோட்டையில் இருந்து மல்லி பட்டினம் வழியாக பஸ் வசதி உள்ளது.

கன்னியா குமரி -சென்னை கிழக்கு கடற்கரை சாலை இந்த மனோராவை ஒட்டியே செல்கிறது ..!

மனோரா பார்வை நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை விடுமுறை நாட்களிலோ மற்ற நாட்களிலோ மதியத்துக்கு பிறகு அங்கு செல்வது நல்லது..!

உட்புறம் உள்ள அகழி
மேலே செல்ல படிக்கட்டுஉள்ளே படிக்கட்டு
உட்பகுதிதற்போது இரண்டு அடுக்குவரைதான் மேலே ஏற அனுமதிக்க படுகிறார்கள்

கீழே உள்ள படம் மனோராவிலிருந்து கடற்கரைஇது கடற்கரையில் இருந்து மனோராஎல்லா படங்களும் செல் போனில் எடுத்தது..!
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள் ....!


.

6 comments:

அண்ணே அவசியம் போய் பார்த்துறேன்.
இதுபோல இடங்கள் பற்றி எழூதுங்க.

படங்களுடன் அருமையான விளக்கி இருக்கிர்கள்

மனோரா போகனும்னு ரொம்ப நாள் ஆசை...வேலை பளுவையும் கடந்து என்னை மனோரா அழைத்துச் சென்ற பதிவருக்கு நன்றி மனோரா பார்த்த திருப்பதி மனதிற்கு.

கருத்துக்கு நன்றி...மதுர கவி,அன்பு,தமிழ்ச்செல்வி...

இப்படி ஒரு இடம் இருப்பதே உங்கள் பதிவைப் பார்த்துத் தான் தெரிந்துக்கொண்டேன். அவசியம் போய் பார்க்கிறேன் - குடும்பத்துடன்!
அன்புடன்,
ரஞ்ஜனி

இப்படி ஒரு இடம் இருப்பதே உங்கள் பதிவைப் பார்த்துத் தான் தெரிந்துக்கொண்டேன். அவசியம் போய் பார்க்கிறேன் - குடும்பத்துடன்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More