சென்னையில் உலாவரும் சில்லறைக் கில்லாடிகள்: உஷாரய்யா... உஷாரு!


போரூரில் எங்கள் கடைக்கு பக்கத்தில் இருப்பது, தங்கம் ஸ்டோர்ஸ். பென்சில், பேனா விற்கும் ஸ்டோர்களிலேயே பெரிய கடைதான். அந்த கடையில் வேலை செய்யும் பையன் எங்கள் கடைக்கு பதற்றத்துடன் வந்து, "அண்ணே, யாராச்சும் பிளாஸ்டிக் பை வாங்க வந்தாங்களா?" என்று கேட்டான். நான் "இல்லை" என்று சொன்னவுடன் அவன் சொன்ன தகவல் என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதாவது ஒரு ஆள் தங்கம் ஸ்டோரின் கடைக்கு போன் செய்து, "3000 ரூபாய்க்கு சில்லறை உள்ளது. வேண்டுமென்றால் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளான். அந்த கடையின் முதலாளி வேலை செய்யும் பையனிடம் ரூபாய் மூவாயிரத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார். 

அந்த பையனிடம் மூவாயிரத்தை வாங்கிக்கொண்டு, "சில்லறை எடுத்துப் போக பிளாஸ்டிக் பை வாங்கி வருகிறேன்" என்று சொல்லிச் சென்ற ஆள் எஸ்கேப்..... வெகு நேரமாக, காத்திருந்த பையன் எங்கள் கடைக்கு வந்து விவரத்தை சொன்னான். அவன் பயந்திருந்ததால், அவனது முதலாளியிடம் விபரத்தை சொல்லிவிட்டு, அவனை கடைக்கு அனுப்பி வைத்தேன். சில்லறை தட்டுப்பாடு எங்கள் பகுதியில் அதிகம் என்பதை சாதகமாக பயன்படுத்தி இதுபோன்று திருடுகின்றனர். 

கடந்த வருடம் இதே போன்று தான் எங்கள் கடையில் வேலை செய்த பையனும் ரூ.6000 கொடுத்து ஏமாந்திருக்கிறான் என்கிற விஷயம் இப்போதுதான் எனக்கே தெரிந்தது. இப்படியும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கவனமாக இருங்கள். இல்லையென்றால், உங்கள் வேட்டியையும் உருவிக் கொண்டு ஓடிவிடுவர்.......

2 comments:

ஆமா,ரூ.6000 யாருது? உங்கவேட்டி யாருகிட்ட இருக்குன்னு பாருங்க.

இப்படியும் ஏமாத்துராங்களா....?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More