வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பம்

பெறப்பட்ட வாக்காளர் அட்டையில் வாக்காளரின் தகவல்கள் தவறாக இருப்பின் வாக்காளர் அதனை திருத்தம் செய்து வேறு வாக்காளர் அட்டை பெருவதற்கும் இந்திய தேர்தல் ஆணையம் வழி வகை செய்துள்ளது.

வாக்காளர் அட்டை திருத்தம் செய்ய படிவம் 8 ல் தகுந்த ஆதாராங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தொடர் திருத்தக் காலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் தேர்தல் பிரிவில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பம் எல்லா சரியான தகவல்களுடன் முழுமையாய் பூர்த்தி செய்தல் அவசியமாகும். கையொப்பத்திற்கு கீழ் உள்ள வரியில் அலைபேசி என் மற்றும், மின்னஞ்சல் முகவரி இருப்பின் குறிப்பிடுதல் வேண்டும்.

வாக்காளரின் தகவல்கள் கணிணியில் திருத்தப்பட்ட பின் வாக்காளர் பதிவு அலுவலரின் அங்கீகரிப்பிற்கு பிறகே வாக்காளர் அடையாள அட்டை அச்சிட இயலும். வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பதாரர் 001சி விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பித்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச கட்டணத்தை செலுத்துதல் அவசியமாகும்.

சுருக்கத்திருத்த காலங்களில் வாக்காளர் திருத்தப் படிவம் அந்தந்த கிராமங்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மூலம் பெறப்படும்.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பாக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் முகத்தின் முழுமையான முன்புற தோற்றத்தை காட்டுகின்ற கடவுசீட்டளவு புகைப்படத்துடன் விண்ணப்பிப்பது அவசியமாகும்.

வாக்காளர் திருத்த படிவத்தை கீழ் காணும் அரசு வலை தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2 comments:

பயனுள்ள பதிவு

பலருக்கும் பயன்படும் தகவல் நன்றி பகிர்தமைக்கு

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More