சீரியசான பிரச்சனை ..
கடந்த இரண்டு வாரமாக விடுமுறையாக இருப்பதால் நூலகம் (நான் நல்லபிள்ளை ) அல்லது டிவி அல்லது சரண் என பொழுது போகின்றது . இந்த நேரத்தில் வீட்டில் சில சீரியல் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டி இருந்தது. அப்படி பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு .இந்த சீரியல்கள் பார்க்கும் போது தோன்றிய சந்தேகங்கள் , ஆத்திரங்கள் , கோவங்கள் ,வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 1. நல்ல நண்பனாக பழகி விட்டு அவனை அவன் மனைவியிடன் இருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒரு பெண் . நாளை எந்த பெண்ணாவது தனது கணவனின் தோழியை பார்த்ததால் சந்தேகம் வராதா ?
 2. பெற்ற மகனை கெடுக்க அனைத்து வழியிலும் முயலும் தம்பி மற்றும் அம்மா . ( ஒருவேளை இயக்குனர் அம்மா அப்படியோ அல்லது அவர் அண்ணனை இப்படிதான் கெடுக்க நினைகின்ராரோ ?) 
 3. கொழுந்தியாலை கொலை செய்யும் வில்லன் (யாருக்காது கொழுந்தியாலை கொல்ல மனம் வருமா ஹீ .. ஹீ )
 4. தன மகனும் மருமகளும் சேரக்கூடாது என மருமகள் இருக்கும் அறையை இரவில் பூட்டி வைக்கும் தாய் ( அப்ப பகலுல சேர்ந்துட்டா ?)
 5. கணவனை சந்தேகப்படும் மனைவி , மனைவியை சந்தேகப்படும் கணவன் .
 6. நிறைய தொடர்களில் கதாநாயகிக்கு இரண்டு கணவன் அல்லது ஏற்கனவே திர்மனமானவரின் மனைவியாக கதாநாயகி .
 7. ஏன் எல்லா சிரியாலும் பெண்களை மையமாக வைத்து வருகின்றது ?( நாதஸ்வரம் விதிவிலக்கு )
 8. ஏன் ஆண்கள் பெயரில் சிரியல் எடுத்தா ஓடாதா ?
 9. சினிமாவில் மட்டும் பார்த்த கற்பழிப்பு காட்சிகள் சீரியலிலும் ( செல்லமே மற்றும் நாதஸ்வரத்தில் )
 10. பச்ச குழந்தையை பெரிய மனுஷி போல பேச வைப்பது


சினிமாவுக்கு இருப்பது போல தொலைக்காட்சிக்கும் சென்சார் வேண்டும் ( ஹ்ம்ம் .. சினிமா சென்சார் மட்டும் பெருசா என்னத்த கிழிசாங்க ..). வீட்டில் உள்ள வர்களை கொஞ்ச கொஞ்ச மாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது இது . தயவு செய்து சிரியல் பார்ப்பதை குறையுங்கள்.மாற்று வழிகள் :

 1. காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
 2. கார்டுன் நெட்வொர்க் பாருங்கள்
 3. ஆன்மிக சேன்னல் பாருங்கள் ( நித்தியானதா வகை அல்ல )
 4. ஆங்கில காமெடி சேன்னல் பாருங்கள் ( பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு பாருங்கள் )
 5. எதுமே இல்லையா ன் ராஜபாட்டை  அல்லது தொழிற்களம்  பிளாக் படியுங்கள் .

4 comments:

பயனுள்ள கருத்து....

தொடருங்கள் நண்பரே....

நான் டீவி சீரியல் விட்டு ரொம்ப நாளாச்சு! நல்ல ஆலோசனை!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

மாற்று வழியில் நீங்கள் சொன்ன ஐந்தாவது கருத்து அருமை! என்னோட வலைபதிவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தம்பி!
நல்ல பதிவு, பாராட்டுகள்!

ராசா நமக்குஏன் இதுஎல்லாம்,நல்லபிள்ளைகள் ஆன நம்மளையே மாத்திடுவாங்க.ஆமா கதஎழுதனமா,களத்தகெடுத்தமான்னு போறதவிட்டு பாத்தீங்களா கீழ்பாக்கம்லெவலுக்கு கேட்கவிட்டுடாங்க.
ஆறாவதா நம்மளை சேர்க்கவில்லை அதான்...ஹி...ஹி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More