புத்திசாலித் தலைமுறையை உருவாக்க முடியுமா?எனது ‘கருவிலே திரு!’  பதிவின் தொடர்ச்சிதான் இது. இந்தக் கட்டுரையில் யூதர்களைப் பற்றிய இன்னும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

யூதக் குழந்தைகளின் உணவு முறை:

பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் தீர்மானிக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளுகின்றனர்.

காலையில் பிரெட், அரிசியில் செய்யும் உணவுகளை சாப்பிடுவதில்லை. இவை சாப்பிடுவது தூக்கத்தைக் கொடுக்கும்; பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவரப் புரியாது என்பதால் பழங்களை சாப்பிடுகிறார்கள். முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, அதன் பிறகு மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகளின் உணவுகள் அமைகின்றன.

மொழி அறிவு:

யூதக் குழந்தைகளின் மொழி அறிவும் வியக்கத் தக்கது. ஒவ்வொரு குழந்தையும் 3 மொழிகள் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஹீப்ரு, அரபிக், ஆங்கில மொழிகளில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  
கருவிலேயே தாயின் இசையை கேட்டுக்கேட்டு வளர்வதால், குழந்தைப் பருவத்திலேயே பியானோ, வயலின் வாசிக்கப் பழகுகிறார்கள். குழந்தைகள் இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம்.

இசை, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுவதால் இசை அறிந்த யூதர்கள் மேதைகளாக இருக்கிறார்கள்.


யூதக் குழந்தைகளின் படிப்பு:

விஞ்ஞானப் பாடத்திற்கு முன்னுரிமை கொடுத்தாலும், வணிகக் கணிதத்தை (Business Mathematics) முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானப் பாடத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

போர்த்தளவாடங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயலாக்கங்கள் (ப்ரோஜெக்ட்ஸ்), புதிய பொருள் உற்பத்தி (Product Creation) என்று தாங்கள் ஏட்டில் கற்றதை நடைமுறையில் செய்து பார்க்கிறார்கள்.

வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருக்கும் யூதர்கள் அதற்கு உதவும் வணிகவியல் ஆசிரியர்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கிறார்கள்.

வணிகவியல் படிக்கும் மாணவர்கள் தாங்கள் செய்யும் செயலாக்கத் திட்டத்தை (project) நிஜத்தில் நடைமுறைப்படுத்தி அதில் லாபமும் ஈட்டிக் காண்பிக்க வேண்டும். 10 மாணவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து இந்த செயலாக்கத் திட்டத்தை நடைமுறையில் செய்து 10 மில்லியன் யு.எஸ். டாலர்கள் லாபம் சம்பாதித்தால்தான் தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம்: உலகப் புகழ்பெற்ற லீவாயிஸ் (Levis) பொருட்கள். இப்பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக் கழக வர்த்தகம் மற்றும் உடை வடிவமைப்பு மாணாக்கர்கள், ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவை.
உலக வர்த்தகம் பாதிக்குமேல் யூதர்கள் வசம் இருக்கும் ரகசியம் இப்போது புரிந்ததா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. பயன்தரும் வர்த்தக யோசனை யாரிடத்தில் இருந்தாலும், வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது.

இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ், கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.

இந்த நிறுவனம் யூத மருத்துவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் கொடுப்பதால் யூத மருத்துவர்கள் தனியாக தொழில் நடத்துகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் இதர நாடுகள் - ஒரு ஒப்பீடு:

இஸ்ரேல் மற்றும் ஜப்பான்

யூதர்கள் தலையை அசைத்து அசைத்து பிரார்த்தனை செய்வார்கள். ஜப்பானியர்களும் இப்படித்தான். அவர்கள் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். இப்படிச்செய்தால் மூளை நன்கு தூண்டி விடப்பட்டு மூளைக்கு அதிக பிராண வாயு கிடைக்கும். அதனால் மூளை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

ஜப்பானியர்கள் சுஷி (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) உணவை விரும்பி உண்பார்கள். இப்படி பல ஒற்றுமை இருப்பதும், இரண்டு இனங்களுமே சாம்பலிலிருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவை போல தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து வீறு கொண்டு எழுந்திருந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து இருப்பது தற்செயல் என்று சொல்லலாமா?

இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர்:
இஸ்ரேல் நாட்டைப்போல இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப் படுகிறது. சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மனிதர்களாகவே பார்க்கிறார்கள். ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்!

அரசாங்கம் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான்.

அமெரிக்காவில் இருக்கும் மன்ஹாட்டன் மாநிலத்தின் அளவே  இருக்கும் மிகச்சிறிய நாடாக இருந்தபோதும் சிங்கபூரில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இஸ்ரேல் – இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் மக்கள் எங்கு பார்த்தாலும் சிகரெட் பிடித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு பாக்கட் சிகரெட்டின் விலை வெறும் ௦.70 யு.எஸ். டாலர் தான்.

லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் மிகக் குறைந்த அளவில் பல்கலைக்கழகங்கள். பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். 

இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

இந்தியர்களாகிய நாமும் இவற்றைப்பற்றி சிந்திக்கலாம்.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலித் தலைமுறையை உருவாக்க முடியுமா?


4 comments:

விதைநெல்லின் தரத்தைவைத்து வெள்ளாமையை சொல்லும்வல்லமை நம்மிடம்உண்டு.

வேண்டாத பிசா , கோக் , டேடிங் போன்றவற்றை
மட்டும் சுலபத்தில் காப்பி அடிக்கும் நாம் இதை நோக்கி
எல்லாம் சிந்தித்து செயல்படுத்தும் நாளே நாம்
வல்லரசு ஆகும் நாள்.
அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள் !

ulakileye thamakentru naatai vilaikku vankia ore innam utharkal mattume

எல்லா வல்லமையையும் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? இது தான் பெரிய கேள்வி! நன்றி மதுரகவியாரே!

நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு சரி தோழி! என்றைக்கு நாம் விழித்துக் கொள்ளப் போகிறோம்?
உங்கள் பாராட்டுக்கு நன்றி!

ஹிட்லரால் கூண்டோடு அழிக்கப் பட்ட இனம் இப்போது வளர்ந்திருக்கும் வேகத்தைப் பாருங்கள்.
உங்கள் கருத்துரைக்கு நன்றி திரு புகழ் இனியன்!


Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More