வெற்றி பாதையில் சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ்........

   இந்த நிறுவனத்தின் தலைவர் திரு.எ.லிங்குசாமி அவர்கள், இவர் துணைவியர் திருமதி. L.மகேஸ்வரி.. குறைந்த கல்வி தகுதி கொண்ட இவர் ஒரு சிறந்த நிறுவனத்தின் முதலாளி என்ற உயர்வை அடைந்திருக்கிறார் என்றால் மிகை ஆகாது. நம்மிடம் அவருடைந வளர்ச்சியை பற்றி அவரே பகிர்ந்து கொண்ட உண்மைகள்....

* நான் கடந்த 18 ஆண்டு காலமாக ஓரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன்.
* நான் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமான பாதைகள். அதை நான்     கடக்க எனக்கு உறுதுணையாக இருந்தது ''நல்ல ஒழுக்கம்'',  ''நட்பண்புகள்'', ''நல்லெண்ணங்கள்'' மற்றும் ''வாடிக்கையாளர்களிடம் நாம் அணுக வேண்டி முறை'', ''நல்ல விதமான பணப்பரிமாற்றங்கள்'', ''பொருளின் தரம்'' ஆகியவை.இவர் அன்பான, பண்பான நல்ல மனிதனாக வாழக்காரணமானவர் ஒருவர், அவர் ஜவுளி தொடர்புடைய சங்கத்தில் முன்னாள் செயலாளராக பணியாற்றிய திரு M..கந்தசாமி முதலியார் அவர்கள்.

அவரிடம் இருந்த நற்குணங்களை கண்டு, இவர், திரு.M.கந்தசாமி அவர்களை, அவருடைய குரு ஸதானத்தில் உயர்த்தி வைத்திருக்கிறார்.

திரு. A..லிங்குசாமி அவர்கள் கடந்த 18 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த 18 வருட தொழில் அணுபவத்தாலும், உழைப்பாலும்,  சின்ன முதலீட்டில் தன் சொந்த நிறுவனமான சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ்-என்ற நிறுவனத்தை கடந்த 1982-ம் வருடம் இதே முகவரியில் தொடங்கினார்.

அவர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நல்லதொரு நிறுவனமாய் இயங்க, அவர் கடின உழைப்பையே கல்வி பட்டமாய் பெற்றிருக்கிறார்.

அவரிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கும், அவருக்கும் உள்ள உறவுஒரு சகோதரத்தனம் வாய்ந்த உறவாய் மதித்து பணியாளரிடையே உயர்ந்த மனிதனாய் விழங்குகிறார்......

வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென ஓரிடம் பிடித்து, வளர்ச்சி பெற்ற நிறுவனமாய், பெண்களுக்கான ஆடைகளில் இந்த நிறுவனம் சிறந்த நிறுவணம் என்ற பெயர் பெற்றுள்ளது.

வாழ்விலும், அவர் துறையிலும் A..லிங்குசாமி அவருக்கு நிகர் அவரே என்றால் அது மிகையாகாது .

அவர் வாழ்விலும், துறையிலும் மேன்மேலும் வளர்ந்து வர அவர் உண்மையான உழைப்புக்கு உலமார நன்றி.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More