பரிசுகள்


கவிதை போட்டி :

தலைப்பு: முகநூல் (Facebook)

(நாடி கவிதைகள் வலைப்பூவில்)

இரண்டாம் பரிசு பெறுபவர் தோழர் செழியன் 
"சுட்டெலியை முக நூலில்
உன் சுட்டு விரல் முத்தமிட,
இனிதே தொடங்குகிறாய்....
உன் காதல் உரையாடலை,
முகம் தெரியாத ஒருத்தியுடன்....
நினைவிருக்கட்டும்,

அவள் உன் உடன்பிறந்த
சகோதரியாய் கூட இருக்கலாம்....!


உண்மை அறியாதவரை
நீங்கள்,
வாழ்கின்ற மனிதர்கள்,


அறிந்தால்....!
வாழ்கின்ற பிணங்கள்...."


என்று அருமையாக முகநூலின் இன்னொரு பக்கத்தை படம் பிடித்து காட்டியுள்ளார்.

முதல் பரிசு பெறுபவர் தோழர் இக்பால் செல்வன்

"முகம் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருக்கின்றார்கள்
புதிய முகமூடிகளை
முகநூலில் !!!"


பரிசு பெற்ற இருவருக்கும் "நாடி கவிதை" வலைப்பூ சார்பாக  பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்

#அவர்கள் இருவருக்கும் தலா ஒரு புத்தகம் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் #

Read more: http://nadikavithai.blogspot.com/2012/07/blog-post_15.html#ixzz21PhcWRUO

2 comments:

தோழரே பரிசுப் போட்டியில் நாங்களும் கலந்துக்கலாமா?

பதிவில் ஒரு பரிசுப் போட்டி முடிவுகள்..

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பதிவை போடுமைய்யா....

நான் போட்டி நடத்தும் போது உங்களையும் கூப்புடுறேன். சரியா? கொஞ்சம் பொறுங்க , நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More