மெழுகுவர்த்தியால் செல்போன் சார்ஜ் ஏற்றலாம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு முறையும் தடைகள் எதிர்படும் போதுதான் மனிதன் அதை சமாளிக்க புதிதாய் ஏதோ ஒன்றை கண்டு பிடிக்கிறான், இந்தியாவில் குறிப்பாய் இப்போதைய பிரச்சனை மின் பற்றாக்குறை தான். அதற்கேற்றவாறு அதனை சமாளிக்க பல கண்டு பிடிப்புகள் உருவாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய சோலார் மொபைல் சார்ஜரை திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் உருவாக்கி உள்ளார்.


திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டியன். இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிகிறார். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோலார் மொபைல் சார்ஜர் கருவியை உருவாக்கியுள்ளார். சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாவின் மேல்புறம் சோலார் பேனல் பதிக்கப்பட்டு, அதன் தொடர்பில் மொபைல் பேட்டரி, கன்டன்சர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் இந்த பேனலை வைக்கும் போது ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்பட்டு பேட்டரியில் பதிவாகிறது.
இதில் இருந்து உரிய பிளக் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வகையிலும் தனியாக சார்ஜரை வடிவமைத்துள்ளார். இந்த சார்ஜரை சூரிய ஒளியில் நேரடியாக வைக்க வேண்டியதில்லை. வீடு, கார், பஸ் உள்ளிட்ட எந்த இடத்திலும், இந்த சார்ஜரை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் கூட, சோலார் பேனில் படும் சிறிய வெளிச்சத்தின் மூலம் சார்ஜ் ஏறி விடுகிறது. இதற்கு சூரிய ஒளி அவசியம் இல்லை. அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் போதும், அந்த வெளிச்சத்தில் மொபைல் சார்ஜ் ஏறும் என்கிறார் ஜெயவீரபாண் டியன்.


இது குறித்து ஜெயவீரபாண்டியன் கூறுகையில், இந்த வகையான சார்ஜரை உருவாக்க எனக்கு ரூ.100 மட்டுமே செலவானது. கடையில் கிடைக்கும் சாதாரண பேட்டரி, கன்டன்சர் போன்ற பொருட்களை வைத்துத்தான் இதனை உருவாக்கினேன். செல்போன் வாங்கும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதனை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் சார்ஜ் பிரச்னை என்பதே இல்லாமல் போகும். மின்சாரமும் மிச்சப்படும் என்றார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் செல்போன் சார்ஜ் ஏற்றலாம்

பலரும் அறியாத இச்செய்தியை பகிர்ந்து தமிழனின் பெருமையை உலகுக்கு பரப்புவோம் !!
 
நன்றி: டீக்கடை பெஞ்ச்

5 comments:

அட, அருமையா இருக்கே.

ஆனால், இது பிரபலம் அடைவது கடினம் தான். நம்ம ஊர்காரங்க கண்டுபிடிக்கிறத நாம எங்க பெருசா மதிக்கிறோம்? :(

இது எங்க கிடைக்கும்?

எங்க கிடைக்கும்னு தெரியலை, தெரிஞ்சதும் உடனே பகிர்ந்துக்கறேன்

மூலிகைபெட்ரோல் ராமர்கிட்ட கேட்டமாதிரி செயல்விளக்கம்எல்லாம் கேட்டுடபோராங்க நம்மஅறிவுஜீவிக்கள்.

இனியாவது தமிழனின் புதிய கண்டுபிடிப்புகளை உலகறிய செய்வோம்...

தொடருங்கள் கதிர்...

நமது விரல்கள், வரும் தலைமுறைகளாவது விளிப்புடன் வாழ வழி செய்யட்டும்,,,

முடிந்தால் ஜெயவீரபாண்டியன் போன்றோரை நேரடியாக தொடர்புகொள்ள அனுமதி வாங்கிடுங்கள்.. நமது குழு இன்னும் அதிக தகவல்களை ஆதாரத்துடன் வெளிகொண்டு வரும்...

சூரிய மின்கலங்களை பயன்படுத்தி மின் சக்தி உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் தொடர்பாக தொலைகாட்சிகளில் அவ்வப்போது ஒளி பரப்பப்பட்டு வருகின்றன.

அந்த தொழில் நுட்பத்தை எந்த தொழில் முனைவோரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முனைவதில்லை.

காரணம் என்ன. அரசின் காலத்திற்கு ஒவ்வாத விதிமுறைகள், உரிமம் பெறுவதில் பல சிக்கல்கள்.அதை சந்தைப்படுத்துவதில் பல குறுக்கீடுகள் லஞ்சம்.

இவைகளை சீர்திருத்தினால்தான் இந்த கண்டு பிடிப்புகள் பயன்தரும்.
இல்லையேல். இன்றைய செய்தி(newspaper )நாளைய (wastepaper)கதிதான்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More