வாக்காளர்பட்டியல்


தொடர்புடைய அரசமைப்பு மற்றும் சட்ட விதித்துறைகள்

  1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324 (1) ஆம் பிரிவின் கீழ் நாடாளுமன்றம் மற்றும் ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றம் ஆகியவற்றின் அனைத்துத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களின் தயாரிப்பின் மேற்பார்வை, நெறிப்படுத்தல், கட்டுபாடு ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் நிலைப்பெற்றுள்ளது.
  2. இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 325 – ஆம் பிரிவு, ஒவ்வொரு ஆட்சிப்பகுதி தொகுதிக்கும் ஒரு பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும் என்பதற்கும் அத்தகைய யாதொரு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மதம், இனம், சாதி அல்லது பாலினம் ஆகிய காரணங்களால் மட்டும் யாதொரு நபரும் தகுதியற்றவர் ஆக மாட்டார் என்பதற்கும் வகை செய்கிறது.
  3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆம் பிரிவின் கீழ், இந்திய குடிமகனாகவும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிற ஆண்டின் ஜனவரி முதல் தேதியன்று 18 வயதுக்குக் குறையாத வயதுடையவரும், இருப்பிடத்தில் வசிக்காதவர், மனநிலை சரியில்லாதவர், குற்றம் அல்லது ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கை காரணமாக அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தகுதியிழப்பு செய்யப்படாதவரும் ஆகிய ஒவ்வொரு நபரும், அத்தகைய யாதொரு தேர்தலில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு உரிமையுடையவராவர்.
1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநித்துவச் சட்டம் மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகள்

  1. அரசமைப்பு சட்டத்தின் 327-ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு (இணைப்பு 1.1), நாடாளுமன்றம், 1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை இயற்றியது. 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 28-ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளை இயற்றியுள்ளது.
4.1    1950 –ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 13எ முதல் 13சிசி வரையிலான பிரிவுகள், தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி முதலியோரின் நியமனம் தொடர்பான விதித்துறைகள் பற்றியதாகும் (இணைப்பு 1.2)
4.2    1950- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 13டி முதல் 25எ வரையிலான பிரிவுகள், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, திருத்தம் மற்றும் பதிவு செய்தலுக்கான நிபந்தனைகள் ஆகியவற்றுக்கு வகை செய்கிறது (இணைப்பு1.2)
4.3    1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20எ பிரிவு, வெளிநாட்டில் வசிக்கிற வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு விதித்துறைக்கு வகை செய்கிறது (இணைப்பு1.3)
4.4    1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 32-ஆம் பிரிவு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான அலுவல் சார்ந்து கடமையை மீறுவதற்கு, தண்டனை அளிப்பதற்கு வகை செய்கிறது. (இணைப்பு 1.2)
4.5 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் 4 முதல் 22 வரையிலான விதிகள் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு திருத்த நடவடிக்கையின் பல்வேறு நிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு வகை செய்கிறது. (இணைப்பு 1.4)
  4.6    1960 – ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதியைச் சேர்ந்த 8எ விதி, வெளிநாட்டில் வாழ்கிற வாக்காளர்களைப் பதிவு செய்கிற முறையை வகுக்கிறது (இணைப்பு 1.5)
  1. தேர்தல் ஆணையம், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றின் கீழ், அவ்வப்போது பல்வேறு கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது. மேலும், நிருவாக உத்தரவுகளையும் விளக்கங்களையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. (இணைப்பு 1.6 முதல் 1.13வரை)
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்

  1. 1951 –ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 11எ பிரிவு, குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் நடவடிக்கைளினால் ஏற்படுகிற தகுதியிழப்பைக் குறிப்பிடுகிறது. (இணைப்பு2)

3 comments:

இந்திய குடிமக்கள் அனைவரும் அறியவேண்டிய தகவல்.

மூன்று நாள் விடுப்பு எடுப்பவர்களுக்கான தண்டனை சட்டம் பற்றியும் சொல்லுங்கள் தமிழ்செல்வி...

// நல்ல தகவல்கள் //

பயனுள்ள தகவல்!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More