உருளைக்கிழங்கு: தெரியாத விஷயங்கள்!உருளைக்கிழங்கை ரசித்து ருசிக்காதவர்கள் உண்டா? சிப்ஸ், பொறியல், போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட், பூரி மசால் என்று அணு அணுவாக  அனுபவித்தாலும் அதைச் சாப்பிடும்போது மனதிற்குள் ஒரு சின்ன குற்ற உணர்ச்சி ஐயோ! குண்டாகிவிட்டால் என்ன செய்வது?’ என்று. இல்லையா?

உடம்பு இளைக்க வேண்டும் என்று உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை கண்ணால் பார்க்கவும் மாட்டார்கள். அதன் பெயரைக் காதால் கேட்கவும் மாட்டார்கள். கையால் அதைத் தொட்டு வாங்கவும் மாட்டார்கள். அப்படியொரு தீண்டாமை அதனிடத்தில்!

இவர்களுக்காகவே இந்தச் செய்தி: உருளைக்கிழங்கை சூப்பர் உணவுஎன்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

வாழைப்பழம், புரோக்கோலி, பீட்ரூட், பட்டர் ப்ரூட் (avocado) ஆகியவற்றை விட உருளைக்கிழங்கு உடம்பிற்கு நன்மை பயக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

முக்கியமாக வேகவைத்த உருளைகிழங்கில் (Baked or jacket potato) ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப் போல 5½  அடங்கு அதிக நார்ச்சத்து இருக்கிறது. பட்டர் ஃப்ரூட்டில் இருக்கும் சிவிட்டமினை விட அதிக சிவைட்டமின் இருக்கிறது.. நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் கொட்டை வகைகள், விதை வித்துக்களை விட உருளைக்கிழங்கில் செலினியம் என்கிற தாதுப் பொருள் அதிகம் காணக் கிடைக்கிறது.

இரண்டு வேளை வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு நன்மை செய்வது போலவே, நம் உணவில் உருளைக்கிழங்கின் பங்களிப்பும் அதிகம் என்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் போது, வேறு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்று கூகிள்தேடு பொறியில் தேடியபோது மேற்சொன்ன ஜாக்கட் பொடேடோஎப்படி செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. 

இதோ அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

கன்வெக்ஷன் (convection oven) அவன், மைக்ரோவேவ் அவன், பார்பிக்யு (Barbeque) க்ரில் அல்லது  நேரடியாக நெருப்பிலும் உருளைக்கிழங்கை வேகவைக்கலாம். நீர் தேவையில்லை. இப்படி வேகவைத்த உருளைக்கிழங்கு வெளியில் கரகரப்பாகவும் உள்ளே மெத்துமெத்தென்று இருக்கும். இதனை வெண்ணெய், தக்காளி, இறால், சீஸ், மற்றும் ஹாம் (Ham)  உடன் சாப்பிடலாம்.

சமைப்பதற்கு முன் கிழங்கை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். மேலிருக்கும் கண்கள், அழுக்குகள் போக அலம்பித் துடைத்து விட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் கொஞ்சம் உப்பு வேண்டுமானால் சேர்த்து கிழங்கின் மேல் தடவி வேக வைக்கலாம். இதனால் மேல் தோல் கரகரப்பாக இருக்கும். சமைக்கப்படும் போது ஃபோர்க் அல்லது கத்தியால் கிழங்கைக் கீறுவது அதன் உள்ளிருக்கும் நீராவி வெளியேற உதவும்.

உருளைக்கிழங்கை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றியும் வேக வைக்கலாம். இதனால் உள்ளுக்குள் இருக்கும் ஈரத்தன்மை போவதில்லை. ஆனால் மேல்தோல் இந்த முறையில் கரகரப்பு ஆவதில்லை. பார்பிக்யு (Barbeque) க்ரிலில் சமைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைத்தால் மேல்தோல் கருகாமல் இருக்கும். முழு உருளைக்கிழங்கை கரி அடுப்பில் நெருப்புத் தணல்களுக்கு இடையில் புதைத்து வைத்தும் சமைக்கலாம். ஆனால் மேல்தோல் கருகி சாப்பிட முடியாமல் போய்விடும்.

சமீபத்திய செய்தி:
உருளைக்கிழங்கு ஜூஸ் வயிற்றுப் புண்ணை ஆற்றும்!

மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உருளைக்கிழங்கில் இருக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த கிருமி எதிர்ப்பு மூலக்கூறு வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

உருளைக்கிழங்கில் இருக்கும் இந்த மூலக்கூறை ஜூஸ் வடிவில் தயாரித்து தினமும் உணவுடன் கூட எடுத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள்.

இப்படி ஒரு யோசனை வந்ததே ஓரு வேடிக்கையான நிகழ்ச்சி மூலம் தான். ஒரு ஞாயிறு அன்று, விஞ்ஞானி ஒருவர் தனது மதிய உணவிற்கு தனது ஆண் நண்பருடன் உருளைக்கிழங்கை ருசித்துக் கொண்டிருந்த போது ஆண் நண்பரின் பாட்டி வயிற்றுப்புண்களை சரி செய்ய அவர்கள் காலத்தில் உருளைக்கிழங்கை பயன்படுத்தியதாகக் கூறினாராம்.

அந்த விஞ்ஞானி உடனடியாக சந்தைக்குச் சென்று உருளைக்கிழங்கை வாங்கி வந்து ஆராயத் தொடங்கிவிட்டார்.

இந்த ஆராய்ச்சியில் இணைத்து பணியாற்றும் அயன் ராபர்ட்ஸ் கூறுகிறார்:

“முதல் முதலில் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், எனக்கு சிறிது ஐயம் இருந்தது. ஆனால் நமக்குத் தெரியாத பல சேர்மங்கள் காய்கறிகளில் இருக்கின்றன. இந்த ‘உருளைக்கிழங்கு ஜூஸ்’ வயிற்றுப்புண் வராமல் தவிர்க்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உதவும்”

“மக்களுக்கு பயன்படும் வகையில் எங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அமைவது எங்களுக்கு நிரம்ப உற்சாகத்தைக் கொடுக்கிறது. எங்களது பல வருட ஆராய்ச்சிகள் பலன் அளிக்க ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று வர்த்தக நிர்வாகி டாக்டர்  சுநீதா ஜோன்ஸ் கூறுகிறார்.
உருளைக்கிழங்கு ஜூஸ் வடிவில் வர கொஞ்ச நாட்கள் அல்லது வருடங்கள் ஆகலாம். 

அதுவரை......

பெரியோர்களே! தாய்மார்களே! உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!
5 comments:

அம்மாவிற்கு வணக்கம்!!!!

பல பயனுள்ள தகவல்களை தரும் அம்மாவிற்கு, உங்கள் அன்பு மகள் தரும் பரிசு, ஒரு சின்ன சிறப்புப் பெயர் ''தொழிற்களம் குழுவின் தகவல் பெட்டகம்''
பிடிச்சிருக்கா அம்மா?

என்றும் அன்புடன்.....
ரேவதி.

உ .கி யை போலவே உங்கள் பதிவும்
சுவையோ சுவை. அது முக அழகிற்கும் பயன்படுகிறது.
ஆனால் என்ன தான் சொல்லுங்கள்
' பிரெஞ்சு பிரைஸ் .. பிரெஞ்சு பிரைஸ் தான் ..
இல்லையா ? ஹிஹிஹி..

அன்பு மகள் கொடுக்கும் பரிசு மிக அருமை! மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுகிறேன்! வாழ்வின் முதல் விருது இது!நன்றி ரேவதி!
உங்கள் கருத்துரை மிகவும் சரி, ஸ்ரவாணி! சைவம், அசைவம் இரண்டினோடும் ஒத்துப் போகும் கிழங்கு இது ஒன்றுதான்.
நன்றி!

இதற்கு இணை இது தான் என்ற உங்கள் கருத்துரை மிகவும் சரி ஸ்ரவாணி!எழுதி முடிப்பதற்குள் 'enter' பட்டனை அழுத்தியதன் விளைவு இந்த இரண்டாவது கருத்துரை!

உருளைக் கிழங்கை பற்றிய அருமையான சுவையான தகவல்கள்!நன்றி!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More