மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்

இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் காரணங்களுக்காக மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்குகிறது.
 1. தவறான புகைப்படம்
 2. விண்ணப்பதாரரின் பெயரில் எழுத்து பிழை
 3. விண்ணப்பதாரரின் உறவினர் பெயரில் எழுத்து பிழை
 4. உறவுமுறை தவறாகக் குறிப்பிடப்பட்டிருத்தல்
 5. வயது தவறாக குறிப்பிடப்பட்டிருத்தல்
 6. முகவரி தவறாக குறிப்பிடப்பட்டிருத்தல்
 7. முகவரி மாற்றம்
 8. அட்டை தொலைந்துவிட்டது
 9. பழைய அட்டைக்கு பதிலாக கையடக்க அட்டை வேண்டுதல்.

விண்ணப்பிக்கும் முறை

படிவம் 001சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் முழுமையாய் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். பாகம் மற்றும் வரிசை எண் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவை தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும். முகவரி மாற்றம் இழப்பு சிதைவு காரணமாக மீண்டும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு (அ) பழைய அட்டைக்கு பதிலாக, கையடக்க உறையில் வைக்கத்தக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு விண்ணப்பித்தால், அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மையங்களிலோ வரையறுக்கப்பட்ட தொகையை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்.

புகைப்படத்திற்கான ஆதாரமாக விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவைகள்(கீழ் வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று).
 1. கடவு சீட்டு
 2. ஓட்டுநர் உரிமம்
 3. வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை எண்
 4. மாநில மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் பணியாளர்களுக்கு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை.
 5. பதிவு செய்யப்பட்ட சொத்து பத்திரங்கள்
 6. பொதுதுறை வங்கி அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ்புத்தகம்.
 7. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கிய மாணவர் அடையாள அட்டை
 8. ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ்
 9. ஓய்வூதிய ஆவணங்கள்
 10. இரயில்வே அடையாள அட்டைகள்
 11. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான அடையாள அட்டை
 12. ஆயுத உரிமம், உடல் ஊனமுற்றோருக்கான சான்றிதழ்
 13. தொழிலாளர் நல அமைச்சகம், பீடி தொழிலாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை
 14. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அட்டைகள்
 15. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நகல் (வழங்கப்பட்டிருப்பின்)

புகைப்படத்தையும், பிறந்த தேதியையும் சரிபார்ப்பதற்காக, புகைப்படத்துடன் கூடிய மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை விண்ணப்படத்துடன் இணைக்கவும். ஆவணத்தில் தானே சாற்றொப்பமிட்டிருந்தால், இப்படிவத்தை நேரடியாக அளிக்கும் சமயத்தில் அதன் மூல நகலைக் காட்டவும்.

விண்ணப்படிவத்தை கீழ் காணும் அரசு வலைதளத்தில் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More