எங்கும் தங்கும் நீ !
பூமிக்கு
செயற்கைக் கோள் 
இல்லாமலே
விரிந்த வானில் இருந்து
வானவில் வண்ண 
 ஒலிபரப்பு

அந்தியிலே அடர்  சிவப்பு
சந்தியிலே இளம் சிவப்பு
மத்தியிலே நீல வெளிர்ப்பு
புல்வெளியிலே பச்சை செழிப்பு

அடடா என்ன வனப்பு
இயற்கையின்
இனிய படப்பிடிப்பு
விழி  பெற்றதின் 
பாக்கியச் சிறப்பு

ஆதவனும் நீயே தானோ 
 என என்  பிரமிப்பு
உன் செவ்விதழ் சிரிப்பில் 
என் கர்வ மிதப்பு

நிலவு அடுத்த 
படையெடுப்பு
குளிரில் தேடினேன் 
கனமான உடுப்பு
மனத்தில் வந்தது 
காதல் கொந்தளிப்பு
கனவில் நீ வந்தாயடா
என்னே என் களிப்பு

அறிவேனடா  அப்பக்கம் 
உன் மோகத் துடிப்பு
மணநாளில் கற்று களிப்போம் 
காதல் படிப்பு  
கட்டுப்பாடு  கொள்வோம்
மனவேலி தடுப்பு

அடுத்து
தென்றல் காற்று கலைத்தது
 சேலை மடிப்பு
அது உன் அவதாரமே என 
 என்  நினைப்பு
வெட்கத்தில் சிவந்தது
கன்னக்கதுப்பு
எனக்குள் சில்லென்ற
 ஓர் சிலிர்ப்பு

எதிலும் உன் முகமே 
இடம்பிடிப்பு
தாலி வேலி தானே 
சமுதாயத்தின்  மதிப்பு
அதுவரை கொள்வேன்
உறங்காத விழிப்பு
சகிக்கவில்லை ஊராரின் 
சொல் இடிப்பு

விரைந்து  நீ வருவாய் 
அறிந்து என் தவிப்பு
எக்காலமும் சாதி மதம் 
என காதலுக்கு எதிர்ப்பு
இவை எலாம் அறியுமோ 
நம் அன்பு இதய உறுப்பு
இப்பேதங்களுக்கு நம்
மெய்க்காதலே ஒரே  தீர்ப்பு

ஈன்றோர்  உணர்ந்து 
அனுமத்தித்தலே 
காதலரின்  விருப்பு
மணம்  முடிந்த பின் 
வேண்டாமே வெறுப்பு
உமிழ வேண்டாமே 
வார்த்தைகளில்  நெருப்பு

உணர்வோமே என்றும் 
நாம்  நம் பொறுப்பு
இறுதி வரை அன்பாய் 
வாழ்ந்து  காட்டினால்
அதுதானே நம் காதல் 
வாழ்வின் சிறப்பு !
3 comments:

மன்னிக்கவும். கவிதை, கதை போன்ற இலக்கியம் சார்ந்த
துறைகளுக்கு இடம் இல்லை என்பது இப்போது புரிந்தது.
[ பழைய பதிவிலும் , தலைப்பு பகுதி கீழும் இருந்ததால்
உண்டு என்று தவறாக எண்ணி விட்டேன் ]
விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதை நீக்கி விட்டு
எங்களுக்கும் காரணத்தைத் தெரிவித்து விட்டால்
வருங்காலத்தில் அத்தவறுகள் நேரா வண்ணம்
பார்த்துக் கொள்வோம்.
நன்றி !

அன்புத் தோழிக்கு வணக்கம்....

நம் தளம் ஒரு தொழில் சார்ந்த தளம், இதில் வணிகம், சட்டம் மற்றும் ஆலோசனைகள், தொழில்நுட்பம், பொறியியல், விவசாயம் போன்ற எல்லா வகையான கருத்துகளையும் பதிவு செய்யலாம்....

உங்கள் பதிவின் இடையில் அல்லது முடிவில் கவிதைகள் இருக்கலாம்... ஆனால் பதிவு ஏதேனும் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருத்தல் நலம்..

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.....

நல்லது தோழி !
கவனத்தில் பதித்து விட்டேன்.!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More