செல்போன் தரும் ஆபத்துக்கள்.

முன்பெல்லாம் ஒரு காரியத்தை நாம் முடிக்க வேண்டுமென்றால், பஸ் அல்லது இரயில் பிடித்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டு செய்து முடிக்கும் ஒரு வேலையை இன்று ஒரு எஸ்.எம்.எஸ் செய்து முடித்துவிடுகிறது. தொழில்,கல்வி,போக்குவரத்து,விஞ்ஞானம் என அனைத்து துறையினருக்கும் செல்போன் மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான நன்மைகளை செய்யும் இந்த செல்போன் நமக்கு தெரியாமலேயே ஆயிரக்கணக்கான தீமைகளையும் செய்கின்றன என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

ஒரு வீட்டில் உள்ள முக்கிய பொருட்களான  ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், கடிகாரம், டிவிடி, கேமரா, போன்ற அனைத்து வசதிகளும் ஒரு நல்ல செல்போனில் அடங்கியிருக்கிறது. எனக்கு தெரிந்து இப்போது யாரும் கையில் கைக்கடிகாரம் கட்டுவதே இல்லை. எல்லோரும் செல்போனில் தான் மணி பார்க்கிறார்கள். எப்.எம். ரேடியோவை தனியாக யாரும் வாங்குவதே இல்லை. செல்போனில்தான் பாட்டு கேட்கிறார்கள். இது விஞ்ஞானத்தின் வளர்ச்சி., ஆனால் இதை அளவோடு பயன்படுத்துவதில்தான் நம் உடல்நலம் இருக்கிறது.

செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர். மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள் பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை. செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.

இன்று நடக்கும் பல விபத்துக்கள் செல்போனில் பேசிக்கொண்டோ அல்லது பாடல் கேட்டுக்கொண்டோ டிரைவிங் செய்வதனாலே ஏற்படுகின்றது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.  விபத்துக்களில் 10 சதவிகிதம் செல்போன் பயன்படுத்திக்கொண்டே வண்டி ஓட்டுவதால் ஏற்படுகிறது என அந்த ஆய்வு கூறுகின்றது. அதனாலேயே இந்தியா உள்பட பல நாடுகளில் செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

 செல்போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் செல்போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். செல்போனில் பேசும் போதும்,  எஸ்.எம்,/.எஸ் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது. மிக அவசியமான நேரங்களில் மட்டும் செல்போனை பயன்படுத்துங்கள்.

செல்போன்களை காதின் அருகே வைத்து நீண்ட நேரம் பேசுவதால் செல்போன் சூடாகி விடுகிறது. அப்போது அதில் இருந்து வெளியேறும் எலக்டிரோ மேக்னடிக் கதிர்வீச்சு, காதையொட்டி இருக்கும் மூளை பகுதி திசுக்களை பாதிக்கிறது.  கர்ப்பிணி பெண்களும் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு, அந்த பெண்ணின் வயிற்றில் உருவாகும் குழந்தையையும் பாதிக்கக் கூடும்.

கண்டிப்பாக நீண்ட நேரம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது டெலிபோனை பயன்படுத்துங்கள். டெலிபோனில் கதிர்வீச்சு மிக மிக குறைவு. பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. 


மேலும் செல்போனின் உதவியால்தான் பலவித புதுப்புது குற்றங்கள் இப்போது நடைபெறுகிறது. தீவிரவாதிகளுக்கு பெரிதும் கைகொடுப்பது செல்போன் தான். செல்போனில் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து மிரட்டுவது, ஆபாச படங்களை பார்ப்பது, வதந்தி எஸ்.எம்.எஸ்களை அனுப்புவது போன்ற பலவித குற்றங்கள் நடப்பது செல்போன் உதவியால்தான். ஆனாலும் இன்று பல குற்றவாளிகள் பிடிபடுவதும் செல்போனின் உதவியால்தான். 

எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பையும் ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்தலாம், அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். எனவே நம் எதிர்கால நலன் கருதி, செல்போனை ஆக்க வேலைகளுக்கு மட்டுமே, அதுவும் அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

5 comments:

அழகின் கீழ் ஆபத்து.(நெகட்டிவ் படங்களை தவிர்க்கலாம்)

கர்ணனின் கவசகுண்டலங்களைப் போல சிலர் காதிலேயே வைத்துக் கொண்டு அலைகிறார்களே, அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்தால் நன்றாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி!

மின்னணு சாதனங்கள் அனைத்தும் வெறும் அவசிய , அவசர
தேவைகளுக்கு மட்டுமே என்பதை உணர்ந்தால் போதும் .
இதில் புதிது புதிதாய் வரும் மாடல்களை மாற்றி
வீண் பெருமை , பகட்டு காட்டி மகிழ்பவரும் உள்ளனர்.
இது எல்லாம் நல்லதுக்கு இல்ல... அம்புட்டுதான்.

உண்மைதான், அறிவியலை , அறிவற்ற அவியலாய் ஆக்கிக்கொண்டே வருகின்றோம் , நல்ல பதிவு, நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More