இது இணை(ன்றைய) உலகம் - 5

சர்வத தொழில் நிறுவனங்களில் இணையத்தை பற்றின பார்வை :

ஒவ்வொரு  வளர்ந்து வரும் நிறுவனங்களும் தன் சந்தையை   விரிவுபடுத்துவதற்கு இன்று பெரும்பாலும் இணைய வழி விளம்பரங்களையே சார்ந்து இருக்கின்றன. 

காரணம் இணைய வழி விளம்பரங்கள் தங்கள் செலவுகளை குறைந்த பட்சமாக மாற்றி வரவுகளை இரட்டிப்பாக தருகின்றன.

சில ஆயிரம்  பிரதிகளில் வெளியாகும் செய்திதாளில் ஓரு சிறு விளம்பரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை சரியாக கணித்துவிட முடியாது. அதே போல காணொளி ஊடகங்களில் தான் செலவளிக்கும் தொகைக்கு எத்தனை வாடிக்கையாளர்காளை அந்த விளம்பரம் சென்றடைகிறது என்பதையும் சொல்லிவிட முடியாது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இணைய வழி விளம்பரங்கள் வேகமாக சாந்தையில் கால் பதிக்க தொடங்கிவிட்டன.

ஆம், இணைய வழி விளம்பரங்கள் தாம் செல்லும் பாதைகளில் எல்லாம் தன் வழித்தடத்தையும் பதித்து கொண்டே செல்லும், 

ஒவ்வொரு விளம்பரங்க்களும் எத்தனை முறை பார்வையளர்களை அடைந்திருக்கிறது, அதை ரசித்த பார்வையாளர்கள், அதன் மூலம் வாடிக்கையாளர்களாக மாறிய பார்வையாளர்கள் என ஒவ்வொரு விளம்பரத்தையும் அந்த விளம்பத்திற்கான தொகையயும் விளம்பரதாரர்கள்  தீர்மானிக்கவும் முடியும், அத்தகை தொழிற்நூட்ப வளர்சி தான் இணைய  வழி விளம்பரங்கள்.

விளம்பரங்கள் தன் கடமையை சரியாக செய்ய வேண்டுமெனில் அது தன் பார்வையாளர்களுக்கு சலிப்பூட்டாத வண்ணம் அடிக்கடி கண்களுக்கு தெரியும்படி அமைந்திருக்க வேண்டும், அத்தகைய வேலையை  சாலைகளில் செல்லும் போது அங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் சுவரொட்டிகளும், தடுப்பு சுவர் விளம்பார்ங்களும், பெரிய விளம்பர பலகைகளும் செய்கின்றன. ஆனால் அவ்வாறான விளம்பரங்கள் அதிக அளிவில் மக்களை ஈர்ப்பதற்கேற்ப அதிக அளவில் பொருட்செலவையும் ஏற்படுத்திவிடும்.

 சுமாராக ஒரு கிலோ மீட்டருக்குள் பார்வையாளர்களை ஈர்பதற்காக செய்யப்படும் சாலை வழி விளம்பரத்திற்கான செலவு எளிதாக சில லட்சங்களை தொட்டுவிடும்.

குறந்த பட்சமாக 32 முறை கண்ணில் படும் அனைத்து வண்ணங்களையும் ஆழ்மனது ரகசியமாக பதிவு செய்துவிடும். 

இந்த அழ்மனது கொள்கையை கொண்டே பெரும்பாலான  ஒரே மாதிராயான விளம்பரங்கள் அருகருகே வைக்கப்படுகிறது.

இப்படியாக, பார்வையாளர்களை ஈர்க்க செய்யப்படும்  எந்த ஒரு புறவழி விளம்பரங்களும் அதிக பொருட்செலவை உருவாக்கி விடுவாதால் இணைய வழி விளம்பரங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன.

ஒரு சிறிய உதாரணம் வேண்டுமெனில்,

நாம் அனைவருமே மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்துகிறோம். அப்படி  நமக்கு மின்னஞ்சல் சேவையை அளிப்பதற்கான காரணம் தான் என்ன..? கூகிள், யாகூ போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நமக்கு இந்த சேவையை இலவசமாக தருவதன் காரணம் என்ன..? ஒருவேளை ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்க ஒரு சிறு தொகை கட்டனமாக அளிக்க வேண்டும் என்றிருந்தாலும் மின்னஞ்சல் சேவை நிறுவனங்களுக்கு கனிசமான ஒரு தொகை சேரும், இப்படி இலவசமாக சேவை செய்ய இவர்களுக்கு என்ன இலாபம் இருக்கபோகிறது என்ற எண்ணம் உங்களுக்கு நிச்சயம் தோன்றியிருக்கும் அல்லவா.?
அடுத்தமுறை மின்னஞ்சல் திறக்கும் போது கவனித்து பாருங்கள், வலது, இடது, மேல், கீழ் என சிறு சிறு பெட்டிகளில் உங்களால் அதிகம் விரும்பபடும் விளம்பரங்கள் தலைகாட்டிகொண்டிருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறை  மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தும் போது அந்த விளம்பரங்கள் சப்தமே இல்லாம் உங்கள் ஆழ்மனதை சென்றடைந்திருக்கும் என்பதே உண்மை,

தமிழ் மேட்ரிமனி

என்றதுமே உங்களுக்கு ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்கள் உடனே ஞாபகத்திற்கு வருகிறதல்லவா..? இந்த  வித்தையை விளம்பரங்கள் பார்வையாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் மனதில் ஊடுருவ்வி  பதியவைப்பதால் தான்.

 ஆம், ஆழ்மனதோடு நெருங்கிய நண்பனாக  இணைய வழி விளம்பரங்கள் உறவு வைத்திருக்கின்றன.

இணைய வழி விளம்பரங்கள் பற்றிய ஒரு சிறு பார்வையை தொடர்ந்து காண்போம்..

1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More