இணை(ன்றை)ய உலகம் 6

ஆழ்மனதுடன்  தொடர்புடைய இணையவழி  விளம்பரங்கள் :  

    இணைய விளம்பரங்கள் தான்  உங்களுக்கே தெரியாமல் உங்களது ஆழ் மனதில் ஊடுருவி  உங்களுக்கு பிடித்தமான பொருட்களை உங்கள்  மனதில் உருவாக்குகின்றன. 

ஒரு சிறந்த மேஜிக் கலைஞரால் செய்யப்படும் அற்புதமான கண்கட்டு வித்தையை தான் உலகின் தலைச்சிறந்த விளம்பர  மேடையான  இணைய வழி விளம்பரங்கள் செய்கின்றன.

உங்களுக்கு தெரியுமா..? இன்று உலகில் பல மில்லியன் இணைய தளங்கள் உருவாக்க படுவதற்கான காரணமே, மக்களிடம் தங்களது விளம்பரங்களை கொண்டு செல்வதற்காக சர்வதேச சந்தை நிறுவனங்கள் தான் ஆகும்.

இணையதள பயனர்கள் அதிகரிப்பால்  உலகின் பல்வேறு சந்தை  நிறுவனங்களும் இணைய தள சந்தையை  கைப்பற்ற   போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.1998 ஆம்  வருடம் லாரிபேஜ் மற்றும் சேர்ஜி பிரின் என்ற இரு   நண்பரகளால் உருவாக்கப்பட்ட கூகிள் நிறுவனத்தின் அசூர வளர்ச்சி ஒன்றே இணையத்தின் இமாலய  வரலாற்றை உணர்த்திவிடும்.

கல்லூரியில் விளையாட்டாக  தங்களது இறுதி வருட கல்விக்கான புராஜெக்ட் தான் கூகிள் தேடு பொறி ஆகும்.

இதை வணிக ரீதியாக 1999 வருடத்தில் ஒரு பழைய கார்செட்டில் அலுவலம் அமைத்து உருபெற்றதே கூகிள் எனும் ஆகாய சூரன் ஆவான்.

வெறும் 13 வருடங்களில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 12 மற்றும் 13 வது இடத்தை இந்த நண்பர்கள் அடைய காரணம் கூகிள் இணையம் சார்ந்த ஒரு புதிய திட்டத்தை உலகிற்கு அறிமுகம்  செய்ததால் தான்.

இணையத்தை ஒரு முறை பயன்படுத்த துவங்கிவிட்டால் அது அப்படியே உங்களை ஆட்கொண்டுவிடும். இதை நன்குணர்ந்த சர்வதேச நிறுவனங்கள் இணையத்தில் தனக்கென்ற இடைத்தை அடைவதில் ஆயத்தமாகி வருகின்றன.ஒரு  நிலத்தையோ அல்லது தங்கத்தையோ வாங்கி வைத்தால் எப்படி சில வருடங்களில் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்துவிடுமோ அதை விட பல மடங்கு விலைகொடுக்க கூடியவை ஒவ்வொரு சிறந்த இணைய தளங்களும்.

இன்று உங்கள் நிறுவனத்திற்கான ஒரு இணையதளத்தை  நீங்கள் உருவாக்கும் பட்சத்தில் நிச்சயமாக உங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை   நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்பதே உண்மை.

இப்படியாக உங்களது இணையத்தையும் உங்களது விற்பனை அல்லது சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதற்காகவே  பல விதமான விளம்பர யுக்திகள் இணைய சந்தை நிறுவனங்களால்  கையாளப்பட்டு வருகின்றன.

அத்தகைய  இணைய  சந்தை நிறுவனங்கள் மிக நேர்த்தியாக தங்களது வாடிக்கையாளர்களின் விளம்பரங்களை  பார்வையாளர்களின் மனதுக்குள் பதிய வைத்துவிடுகின்றன.

எண்ணற்ற வடிவங்களில் இணையவழி  விளம்பரங்கள்  தன்  பார்வையாளர்களை   சென்றடைகின்றன, அதில் குறிப்பிடதக்க விளம்பரங்களாவன..,

  • மின்னஞ்சல் வழி விளம்பரங்கள்
  • விளம்பர பதாகைகள்
  • ஆய்வுகள் மற்றும் போட்டிகள்
  • கட்டுரைகள்  
  • தேடுபொறி விளம்பரங்கள்
  • சமூக வலைத்தளங்கள்
போன்றவைகள் குறிப்பிடத்தக்கவன ஆகும்.

இன்னும் விரிவாக ஒரு இணைய தளம் அல்லது பொருளை இணைய வழியில் சந்தைப்படுத்துவது பற்றி அறிவோம்

3 comments:

இணையதளம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் கட்டுரை.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More