காலை தேநீர்-சிந்தனைத் துளிகள்...

அன்பருக்கு வணக்கம்...

தினமும் காலையில் ''காலை தேநீர்'' வழியாக உங்களை சந்திப்பதில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம்...

கண் விழிக்கும் போதே நம் மனதில் தோன்றும் முதல் எண்ணம், இந்த நாள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பது தான்...எனவே நாம் அனைவரும் நல்ல சிந்தனையுடன் காலை பொழுதை தொடங்க வேண்டும் என்பதே நமது தொழிற்குழுவின் முக்கிய நோக்கம் ஆகும்...

காலை தேநீரை பருகுவோம் வாருங்கள் தோழமைகளே!!!

  • நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்க்கு சமம்...
  • வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..
  • நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்...
  • வீணான எண்ணங்கள் நச்சக் கிருமிகள்.உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
  • இருளடைந்து கிடக்கிறதே என்று முணுமுணுப்பதை விடசிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேல்.
மேலும் கம்பெனிக்கு ஒரு சின்ன கதை...

கதை படித்து விட்டு தூங்கப் போயிடாதீங்க...(பிளீஸ்)

ஒரு ஊர்ல....

சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில்.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க" என்றார் வக்கீல்
செந்தில்நாயகம்.

"எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்"

"என்ன?""நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க. நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்கதான். ஆனா நான் சாகணும்னு நினைக்கமாட்டாங்களே. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்.

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார். நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது."

( நன்றி சூர்யகுமாரன்....)

என்றும் அன்புடன்....

நமது தொழிற்களம்...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More