இந்திய தேர்தல் ஆணையம்

2006 ஆம் ஆண்டிலிருந்து...
மேற்சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு, வாக்குச்சாவடி பகுதியில் (ஒருபாகம்) நிரந்தர அடிப்படையில் அலுவலர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்று 2006-ல் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. இவர், இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பாகத்தின் (Part) (பாகம் என்பது சட்டமன்ற தொகுதிக்கட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமும் அதற்குட்பட்ட சில குக்கிராமங்களை  உள்ளடக்கி ஒரு பாகமாக கருதப்படுகிறது. அந்த வருவாய் கிராமத்தின் பெயர் அப்பாகத்தின் பெயராகவும், அப்பாகத்திற்கு ஒரு எண்ணும் வழங்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பயன்படுத்தப்படுகிறது.) வாக்காளர் பட்டியல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் தொடர்பான சரியான தகவலைச் சேகரிப்பார், சேர்க்கை, நீக்கம், மாற்றம் தொடர்பான தகவலை சேகரித்து வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இந்த அலுவலர் அளிப்பார். இவருக்கு, வாக்கு சாவடி நிலை அலுவலர் (Booth level officer ) என்று பெயரிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் முன் ஒப்புதலைப் பெற்ற பின்னர், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 13 (B) (2) ஆம் பிரிவின் கீழ், வாக்காளர் பதிவு அதிகாரியால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் நியமன கால அளவில், வாக்குச்சாவடி நிலை அலுவலர், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 13CC பிரிவின்படி இந்திய தேர்தல் ஆணையத்தின்/மாநில தலைமைதேர்தல் அதிகாரியின்/சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியின் (மாவட்ட ஆட்சியர்) / சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியின் (வருவாய் கோட்ட அலுவலர்) / சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் (வட்டாட்சியர்) கட்டுப்பாடு, மேற்பார்வை, ஒழுங்கு முறையின் கீழ் பணியாற்றுவார்.
மேற்கூறிய அதிகாரிகளின் கீழ் மக்களுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியாற்றும் போது நடைமுறையில் ஏற்படுகிற சிக்கல்களை மீறி நேர்மையாய் பணியாற்றுவது என்பது இயலாத காரியமாக மாறுகிறது. பெரும்பாலான கிராமப்புற வாசிகள் பிழைப்புக்காக வெளி மாவட்டங்களில் வசிக்கக் கூடியர்களாய் இருக்கும் பட்சத்தில் தங்களின் பூர்வீக இருப்பிடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்க்கும் படி விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிரந்தரமாக வசிப்பது என்னவோ வெளிமாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இப்படி வசிக்கும் பட்சத்தில் இவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது என்பது இயலாத காரியமாகிறது. ஆனால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது.  பாஸ்போட், குடும்ப அட்டைபெற, வங்கியில் கணக்கு துவங்க, என இன்னும் பல இடங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை சான்றாக இணைக்கக் கோருகிறார்கள்.
இதானால் மக்கள் குறுக்குவழியில் பணம் கொடுத்தோ அல்லது அதிகாரியை மிரட்டியோ, வாக்காளர் அடையாள அட்டை பெற முயற்சி செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட கூடிய ஒன்றாகும். இப்படி பெரும் வாக்காளர் அட்டைகள் தனிநபரின் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தாலும், வாக்காளர் பட்டியலின் உண்மை தன்மையை போலியாக்குகிறது. பொதுமக்களும் அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து உண்மை நிலையின் படி வாக்காளர் அட்டை பெற விழிப்புணர்வு பெற்றாலொழிய வாக்காளர் பட்டியலின் உண்மை தன்மை என்பது கேள்வி குறியே......

1 comments:

மிகவும் அவசியமான, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More