முகப்புத்தகத்தின்(FACEBOOK) வழியாக உங்களது வலைதளத்தின் டிராபிக்கை (traffic) அதிகப்படுத்துவது எப்படி?

அனைவருக்கும் முகப்புத்தகம் பற்றி தெரிந்திருக்கும். சோசியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணியில் இருப்பது முகப்புத்தகம் தான் என்பதும் நாம் அறிந்த ஒன்றே. இதைப் பொழுதுபோக்காகப் பயன்படுத்துவோர் தான் அதிகம் எனலாம். ஆனால், முகப்புத்தகத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் எத்தனை நன்மைகள் உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலாக முகப்புத்தக கணக்கு வைத்திருப்பது நல்லதில்லை என்று நிறைய பெற்றோர் நினைப்பதுண்டு. ஆனால், முகப்புத்தகம் திறமைசாலிகளுக்கு ஒரு வரம் எனலாம்.

மாணவர்களுக்கு, தொழில் முனைவோருக்கு, எழுத்தாளர்களுக்கு, இப்படி அனைத்து தரப்பினருக்கும் முகப்புத்தகம் தரும் நன்மைகள் நிறைய உள்ளன. ஆனால், பெரும்பாலானோர், வெட்டியாக அரட்டை அடிப்பதற்கே முகப்புத்தகத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வேதனை தரும் செய்தி தானே? L 

சரி, பதிவர்களுக்கு முகப்புத்தகம் எந்த வகையில் உதவியாக இருக்கும்? இதோ பார்க்கலாம்:

நீங்கள் ஒரு வலைத்தளமோ (website), வலைப்பூவோ(blog) வைத்திருக்கிறீர்களா? ஆம் என்றால், உங்களுக்கு முகப்புத்தகம் உறுதியாக ஒரு வரம் தான். உங்களது வலைப்பூவிற்கோ அல்லது தளத்திற்கோ முகப்புத்தகப்பக்கம்(page) (profile அல்ல) உள்ளதா? ஆம் என்றால் நீங்கள் நான் சொல்லப்போகும் செய்தியை ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இல்லையா? பிரச்சனை இல்லை, இதோ சொல்கிறேன் கேளுங்கள்.

முகப்புத்தகத்தின் வழியாக உங்களது வலைதளத்தின் டிராபிக்கை (traffic) அதிகப்படுத்தலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  1. உங்களது தளத்திற்கு ஒரு முகப்புத்தகப் பக்கம் தொடங்குங்கள்.
  2. உங்களுக்கு வசதி இருந்தால், நீங்கள் உங்களது பக்கத்தை “promote” செய்ய பணம் செலுத்தி, உங்களது பக்கத்தை விளம்பரப்படுத்தலாம்.
" create page" என்று முகப்புத்தக
 "ஹோம் பேஜில்" இருக்கும்
 இணைப்பைத் திறந்தால்
இவ்வாறு வரும்.

உங்களது தளத்தை விளம்பரம் செய்யலாம்.

"promote" செய்யப்பட்ட பக்கங்களின்
விளம்பரங்கள்.
"promote" செய்வதால் என்ன பயன்?
உங்களது பக்கத்தை "promote" செய்வதன் மூலம் உங்களது பக்கத்தைப் பற்றிய விளம்பரம் முகப்புத்தகப் பயனாளர்களின் "home page"இல் வரும், இதன் மூலம் நிறைய பேர் உங்களது பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். 
---> 

இது இரண்டும் செய்த பிறகு, முதலில் உங்களது நண்பர்களுக்கு உங்களது பக்கத்தைப் பற்றி தெரியப்படுத்துங்கள். அதாவது, உங்களது முகப்புத்தக “profile” இல் இருக்கும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இதை நீங்கள் “invite friends” என்ற வசதியின் மூலம் செய்யலாம். உங்களது “profile” “page” இவை இரண்டையும் ஒரே e-mail i.d  கொடுத்தே தொடங்கலாம். அவ்வாறு செய்கையில் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். மேலும், உங்களது முகப்புத்தகப் பக்கத்தின் இணைப்பை உங்கள் தளத்திலும் இணைத்தல் வேண்டும்.

“profile”, “page” இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?

“profile” இது உங்களது நண்பர்களுக்காக நீங்கள் வைத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு “privacy” தரும். உங்களது ப்ரோபைளை page போல பயன்படுத்துவது சரியாக இருக்காது. அவ்வாறு பயன்படுத்தினால் உங்களுடைய “privacy” பறிபோக வாய்ப்பு உள்ளது.

“Page” என்பது யார் வேண்டுமானாலும் லைக் செய்து அதில் இருக்கும் செய்திகளை வாசிக்கலாம். (லைக் செய்யாமலும் வாசிக்கலாம்) இதில், “privacy” இருக்காது.

புகைப்படம் மூலம் பிரபலமாகலாம்:
நீங்கள் ஏதேனும் பதிவு எழுதினீர்களே ஆனால், அந்தப் பதிவிற்கு ஏற்றார் போல ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, அந்தப் புகைப்படத்தில் சிறிய விளம்பரம் போல செய்து, அதை முகப்புத்தகத்தில் "upload" செய்து, உங்களது நண்பர்களையும், உங்களது பக்கத்தின் ரசிகர்களையும் (“fans”) “tag” செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய பேர் உங்களது பதிவை வாசிக்க வாய்ப்பு உள்ளது. மறக்காமல் அந்தப் புகைப்படத்தோடு உங்களது பதிவின் இணைப்பையும்(URL) தர வேண்டும்.  ஆனால், “tag” செய்வதிலும் கவனம் தேவை, ஏனென்றால் நிறைய பேருக்கு தங்களை இவ்வாறு “tag” செய்வது பிடிப்பது கிடையாது.
இது போன்று விளம்பரங்களைத் தயார் செய்யலாம் 
 முகப்புத்தகம் மட்டும் அல்ல, google+, twitter, linked in, இது போன்று நிறைய சமூக தளங்களில் நீங்கள் உங்களது பதிவுகளுக்கு விளம்பரம் போலச் செய்யலாம்.

அட, என்ன உங்களது தளத்தையும் விளம்பரம் செய்யக் கிளம்பிவிட்டீர்களா? 

வாழ்த்துக்கள்! :) :) 

---------------------------

6 comments:

பயனுள்ள பதிவு

கடன் வாங்குவதை குறைத்துகொள்ளுங்கள் தொழில்நுட்ப பதிவரே..

இந்த பொன்னு இது கூட எழுதுமா..?

வாழ்த்துகள் சகோதரி!!

எனக்குக்கூட முகப் புத்தகத்தில் ஒரு பேஜ் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை. ஆரம்பித்தும் விட்டேன். பல சந்தேகங்கள், குழப்பங்கள் - அப்படியே பாதியில் விட்டுவிட்டேன்.
உங்கள் பதிவை நிதானமாகப் படித்து விட்டு மறுபடி முயற்சிக்கிறேன்.

ஒரு சந்தேகம் கேட்கலாமா?
தமிழ் பதிவர் விளம்பரத்தில் உங்கள் வலைபதிவு பற்றி எழுதி இருக்கிறீர்களே, அது எப்படி?

இந்த விஷயங்களில் நான் ரொம்பவும் கற்றுக் குட்டி. கோபிக்காதீர்கள்!

பயனுள்ள தகவல்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ள பதிவு....!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More