கருப்பாக இருக்கும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்! வியப்பூட்டும் சர்வே முடிவுகள்!

நமக்கு மட்டும் கேர்ள் ப்ரண்ட் கிடைக்க மாட்டேங்குதே? அவனுக்கு மட்டும் எப்படி கேர்ள் ப்ரண்ட் சிக்குறாங்க? என்பது பெரும்பாலான இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் எந்த மாதிரி ஆண்களைப் பிடிக்கும் என்று எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கருப்பான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனராம். கருப்பான ஆண்களே காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள். அதேசமயம், உயரமான, கம்பீரமான நகைச்சுவையாக பேசக்கூடிய ஆண்களையும் அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

கனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கருப்பான ஆண்களையே, விரும்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சர்வேயில் பெண்கள் கூறிய சில சுவாரஸ்யமான தகவல்களை படியுங்களேன்.

கருப்பான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது மிக பெரிய முட்டாள்தனம். கருப்பாக இருப்பவர்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பெண்களுடன் பேசும்போது கூச்சம், பயம் இருக்க கூடாது. தைரியமும் ஓரளவு திமிரும் உள்ள ஆண்ககளைதான் பெண்களுக்கு பிடிக்கும்.

தன்னம்பிக்கையும் வலிமையும் கொண்ட ஆண்களைதான் பெண்கள் விரும்புகிறார்கள்.பெண்கள் ஆண்களிடன் விரும்புவது ஆண்மை, கம்பீரம் இவற்றைதான். பெண்ணின் மீது உண்மையான அக்கறை காட்ட வேண்டும். அவள் உடல்நலம், மனநலம் பற்றி தேவைப்படும்போது கேட்கவேண்டும். தானாக போய் தேவை இல்லாத உதவிகளை செய்யாமல், தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.

உண்மையாக இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும். நான் ரொம்ப அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடிக்க கூடாது. அலட்டுகிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. தேவைப்படும்போது சந்தேகங்கள், ஐடியாக்கள் கேட்டு அவர்களின் முக்கியதுவத்தை காட்டவேண்டும். அவர்கள் செயல்களை தேவைப்படும்போது பாராட்ட வேண்டும்.

நேரில் பேசுவதற்கு வந்தால், செய்து கொண்டிருக்கும் வேலையையோ அல்லது போனையோ நிறுத்தி அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும். கேர்ள் பிரண்ட் வேண்டும் என்பவர்கள் பெண்கள் பேசும்போது பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவர்கள் பேசும் போது நன்றாக கவனிக்க வேண்டும். அப்புறம் எப்பொழுதாவது அதே பேச்சு வரும்போது நான் கவனிக்கவில்லை, எனக்கு தெரியாது என்று சொதப்பிவிடகூடாது. அதேசமயம் ஆனால் அவர்கள் அழகை பற்றியோ அவர்களை எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதை பற்றி, பொய் என்றாலும் நிறைய சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இயல்பான நகைச்சுவை பேச்சு பெண்களுக்கு பிடிக்கும். அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கோமாளியாக செயல்படக்கூடாது. குறும்பான பேச்சு பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் அது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது. செக்ஸ் பற்றி பேசும்போது பேச்சானது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். அநாவசியமாக மிக அருகில் செல்வதோ, தொட்டு பேசுவதோ கூடாது.

பெண்கள் மிகவும் பொஸசிவ்னெஸ் உள்ளவர்கள். அதனால் மற்ற பெண்களை புகழ்ந்தோ, அதிகம் பாராட்டியோ பேச கூடாது. எனக்கு நிறைய கேர்ள் பிரன்ட் உண்டு என்று சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்...

4 comments:

சக்கபிகரை மடக்குவது எப்படி? ஆணழகர்கள் ஆலோசனைக்கு அனுகவும்.

வணக்கம் அண்ணே...

வளரும் கருப்புநிற இளைஞர்கள் தலைவனே!!!

பெண்களே உசார்..... கருப்பு ஆண் அழகர்கள் படைகள் உங்களை நோக்கி....

வாழ்த்துக்கள்.....

THALAIVA SCIENCE PATHHI SOLLITHAANGANNA NEENGA CHEMISRY PATHI SOLLI THARINGA...ENNA THALAIVA...

sathya ithu en pathivu illai. thavira chemistryum science thaan

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More