இன்று 2,30,000 மக்கள் கருகி உயிரிழந்த தினம்! நினைவு கூறுவோம்!

1945, ஆகஸ்ட் மாதம் , 6-ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இரண்டாம் உலகப்போர் முடிவுக்குவந்தது குறிப்பிடத்தக்கது.

“லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மையப் பகுதியில், அணுகுண்டை வீசியது. 

மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எரிந்து சாம்பலாயினர். மேலும் கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டனர். 

ஆசுவாசமாக அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். அணுகுண்டை சோதித்து பார்க்கவே இது நிகழ்த்தப்பட்டது என்று 16 மணி நேரத்துக்கு பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது தான் உலகிற்கு ஒரு நாடே அழிந்து உள்ளது தெரியவந்தது. 

ஆகஸ்ட் , 9 ஆம் தேதி , ஜப்பானின் நாகசாகி நகரின் மீது 2வது முறையாக அணுகுண்டு வீசப்பட்டது. நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.மிச்சம் இருந்த மக்களும் மாண்டனர் . கதிர்வீச்சால் இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. 

ஆறு நாட்கள் கழித்து, 1945 ஆகஸ்ட், 15ம் தேதி அன்று ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது.

2 ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அழிவு தினம் இன்று அனுசரிக்கபடுகிறது, அனால் இன்று ஜப்பானின் வளர்ச்சிக்கு பெரும் பகுதியாக இந்த நகரங்கள் திகழ்கின்றன என்றாலும் கதிர் வீச்சின் உபாதைகள் இன்னும் அங்கு அடங்கியபாடில்லை.ஹிரோஷிமா நகரத்தின் மேல் போடப்பட்ட 'லிட்டில் பாய்' எனும் அணுகுண்டு.

2 comments:

மனதை உறைய வைக்கும் நிகழ்வு இது.... இறந்தோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More