முகத்து தழும்புகளை எளிதாக சரி செய்யலாம்!

அழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுக்கள் இருந்தாலே கவலை சூழ்ந்து கொள்ளும். இதனுடன் பரு வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் ரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர். இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி. பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எழுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிரவைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்த நாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.

எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை பருக்களின் தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள். மல்லி,மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவிவைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்திற்கு இரண்டுமுறை இவ்வாறு செய்யலாம் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

அதேபோல் சந்தனப் பவுடருடன் கருப்பு உளுந்து பவுடரை கலந்து அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல செய்யவும். இந்தக் கலவையை இரவில் உறங்கும் போது அப்ளை செய்துவிட்டு மறுநாள் காலையில் கழுவலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

துளசி இலையை எடுத்து நன்கு காய வைத்து பொடி செய்து அதில் மஞ்சள் தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய் விடும்.

வெந்தைய கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.

சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பாலித்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும.

1 comments:

ஆமா,என்னமாதிரிஆம்பளைங்க முகத்த அழகாக வழியே இல்லையா?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More