காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது ஏன் அவசியமாகிறது? இந்த செய்தியைப் படிங்க.....

நாம் இப்போதெல்லாம் சென்னைக்கு அல்லது மற்ற ஊருக்கு போவது வருவது என்றால் கார்தான் சௌகரியமாக உள்ளது . நினைத்த நேரத்தில் அடைய குடும்பத்துடன் செல்ல / லக்கேஜ் கொண்டு செல்ல கார்தான் வசதி டோல்கேட் சாலைகள் மிகவும் சௌகரியமாக உள்ளது

ஆனால் முக்கியமான ஒரு விதியை கடைப்பிடிக்க மறக்கிறோம் கார் -ல், 'சீட் பெல்ட்' அணியாமல் ஓட்டுகிறோம் 

ஒரு உதாரண செய்தி:

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில், 'சீட் பெல்ட்' அணியாமல்   சென்றதால், தொழிலதிபர் இறந்தது தெரிய வந்துள்ளது. சென்னை, கே.கே.நகர், ஜீவனாதன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (35). தொழிலதிபர். இவர் ஜி.ஆர்., மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த, 29ம் தேதி மதியம், தன் போக்ஸ்வேகன் காரில், சென்னையிலிருந்து மதுரைக்கு, வியாபாரம் தொடர்பாக சென்று கொண்டிருந்தார்.  விழுப்புரம் பைபாஸ் ரோட்டிலுள்ள, கொட்டப்பாக்கத்து வேலி அருகே சென்ற போது, கார் நிலை தடுமாறி, ரோட்டின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி, விபத்துக்குள்ளானது. இதில், கார் தலை கீழாகப் புரண்டு, ரோட்டின் அடுத்த புறம் இருந்த தடுப்புக் கட்டையின் மீது மோதி நின்றது. காரை ஓட்டிச் சென்ற தொழிலதிபர் ராஜா, காரிலிருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இவ்விபத்து குறித்து போலீசாரிடம் விசாரித்த போது, கார் கொட்டபாக்கத்துவேலி அருகே வந்த போது, பெண் ஒருவர், ரோட்டை குறுக்கே கடக்க முயன்றார். அப்போது, திடீர் பிரேக் போட்டு வாகனத்தை வலது புறமாக ராஜா திருப்பியுள்ளார். இதில், கார் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளானது. அப்போது ராஜா, 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்ததால், கீழே விழுந்து படுகாயமடைந்து, இறந்தார். அவர், 'சீட் பெல்ட்' அணிந்திருந்தால், காருக்குள்ளேயே இருந்து லேசான காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பார். காரில் பயணம் செய்வோர், கண்டிப்பாக, சீட் பெல்ட்' அணிவது உயிருக்கு பாதுகாப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

நண்பர்களே
உங்களை காக்க 
உங்கள் குடும்பம் காக்கப்பட 
கார் -ல், 'சீட் பெல்ட்' அணியாமல் ஓட்டமாட்டோம் 
என்று உங்கள் உள்மனதில் பதிவு செய்க................................................
 

2 comments:

கார் -ல், 'சீட் பெல்ட்' அணியாமல் ஓட்டமாட்டோம்
என்று உங்கள் உள்மனதில் பதிவு செய்க................................................

பொது நல ஆலோசனைக்காகவே தொழிற்களத்தில் பதிந்த நண்பருக்கு நன்றி

அவசியம் கவனிக்கவும்.மறக்காம அக்காவ இறக்கிவிட்டுங்க.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More