இனி யாரும் பதிவிட முடியாது

     இத்தனை நாட்களாக தங்களுக்கு பிடித்த, தெரிந்த கருத்துக்களை மனம் விரும்பும் போதெல்லாம் பதிவிட்டு கொண்டிருந்தோம். இனி இந்த வசதியை முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

     சென்னை தமிழ் பதிவர்கள் சந்திப்பு வரை பதிவர்கள் ( அட தொழிற்களம் பதிவர்களுக்கு மட்டும் தாங்க இந்த பதிவு )  அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை முழுமையாக பரிசீலிக்காமல் வெளியிடும் உரிமையை தந்திருந்தோம்.

  இந்த இனிய நாளில் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.   வரும் செப்டம்பர் 1 முதல் தொழிற்களம் பகுதியில் முறைபடுத்தப்பட்ட பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இது குறித்த முறையான அறிவிப்பு தங்களது மின்னஞ்சலுக்கு நாளை ( 28.08.2012 செவ்வாய்) அனுப்பப்படும்.

கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவர்கள் தொழிற்களம் பிரிவில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் வெற்றிகரமாக சென்னையில் நடந்த தமிழ் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நூற்றிற்கும் மேற்பட்ட பதிவர்களில் பலர் நமது குழுவிடம் நேரடியாக பணிபுரியும் முறை பற்றி  கேட்டறிந்து விண்ணப்பித்துள்ளனர்.

நமது தொழிற்களம் குழுவானது மற்ற வலைத்தளங்களை விட தனி சிறப்பு வாய்ந்தது.

இதில் உதவி ஆசிரியர்கள் என்கின்ற மிக பெரிய அங்கீகாரத்தை சக தொழிற்கள பதிவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.

" உதவி ஆசிரியர்கள்  "

   பொதுவாக மக்கள் இருவருக்கு மட்டுமே கண்டிக்கும் உரிமையை கொடுத்திருக்கின்றனர். ஒருவர் காவலர், மற்றவர் ஆசிரியர் ஆவர். தப்பு செய்யும் பிள்ளையை கண்டிக்கும் தகப்பன் உரிமை ஆசிரிய பணிக்கு உண்டு.
அத்தகைய பெயரில் உங்களை கெளரவிக்கவே ஆசைப்படுகிறோம்.

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணிக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் மற்றும் விண்ணப்பிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் நாம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது இதுதான்.

  • உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை உணர்ந்து உங்களது படைப்புகள் அமையட்டும்.
  • தொழிற்களம் குறிப்பிடும் தலைப்புகளை தெளிவாக புரிந்து தகவல்கள் அடங்கிய பதிவுகளாக பதியுங்கள்.
  • உங்களுக்கு தெரிந்த நல்ல பதிவர்களையும் அறிமுகப்படுத்துங்கள்
  • நீங்கள் பதியும் அனைத்து  பதிவுகளும் மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையுமாறு பதியுங்கள்
  • வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து எழுதுங்கள்
  • தங்களுக்கு கொடுக்கப்படும் சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்


அனைவருக்கும் வாழ்த்துக்கள்

மேலும் தகவல்களுக்கு
+91 95 66 66 12 14
+91 95 66 66 12 15

13 comments:

ஆமாம் இன்னும் படமே போடவில்லையா? இதுவரை பார்த்தது முன்னோட்டம்தானா?(அதாங்க டிரைலர்) இனிமேதானா எல்லாம் ? அடபோங்கப்பூ.

வாழ்த்துகள்.

எல்லாம் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி...

நன்றி....திரு.தனபாலன் அவர்களே..

சிறப்பான விஷயம்.... வாழ்த்துக்கள்

சிறப்பானதொரு தகவல். தகவலுக்கு நன்றி. இதுகுறித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தேன்.. தங்களுடைய பதில் மின்னஞ்சல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை..

வலையுலகின் மாபெரும் சாதனை ..........நன்றி

நன்றி தங்கம் பழனி,,,

உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் வரவில்லை எனில் திரும்பவும் மின்னஞ்சல் செய்யுங்கள்..

cpedenews@gmail.com

என்ற முகவரிக்கு

நன்றி கோவை சகோதரி,,,

வழி மாறி வந்து விட்டேன் என்று நினைக்கிறன் .p (எனக்கு எல்லாம் இன்னும் எழுத்து திறமை வேண்டும் )பதிவுக்கு நன்றி

நன்றி asa asath,,

அடிக்கடி வருகை தாருங்கள்,,
கூகிள் சிறி உங்களுடையதா..?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More