தமிழ் பதிவர்களுக்காக..

தமிழ் வலைப்பதிவுலகில் ஒரு புதிய அத்தியாயம் துவங்குகிறது.  

தமிழ் வலைப்பதிவர்களின் ஒட்டுமொத்த சங்கமம் 


வணக்கம் தமிழ் உறவுகளே!!

    எத்தனையோ கருத்துகளை நாம் பரிமாறி கொண்டு ஒரு புது உலகில் அன்பு பாராட்டிவருகிறோம்.

நாம் தமிழ் பதிவர்களாக ஒன்றினைந்து இன்னும் பல ஆக்கங்களை கொண்டு வருவோம்.


சென்னையில் பதிவர்கள் சந்திப்பு திருவிழா வரும் 26 ஆம் தேதி (26.08.2012) ஞாயிற்றுகிழமை சென்னை கோடம்பாக்கம் புண்ணியகோடி திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

  பெரும்பாலான நமது தமிழ் பதிவர்கள் இந்த சந்திப்பில் நேரடியாக கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் அறியாத தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த பதிவின் மூலமாக அழைப்பு விடுக்கிறோம்.

தொலைபேசியிலும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வரும் அனைத்து பதிவர்களுக்கும் நாம் நன்றி பட்டிருக்கிறோம்.

   இந்த சந்திப்பு நமக்கான ஒரு மாபெரும் எதிர்காலத்தை அடைய ஒரு முதல் அத்தியாயமாக இருக்கும் என்பது மட்டும் மக்கள்சந்தை.காம் இணையதளத்தின் சார்பாக உறுதி கூறுகிறோம்.

எத்தனையோ இடைவிடாத பணிகளுக்கு நடுவே இவ்விழாவை சிறப்பாக செய்ய முயற்சிகள் பல புரிந்து வரும் (தூரிகையின் தூறல்) திரு.மதுமதி, (வீடு திரும்பல்) திரு.மோகன்குமார்,  ( நான்பேச நினைப்பதெல்லாம் ) திரு.சென்னைபித்தன், (தேவதையின் கனவுகள்) செல்வி.தூயா, ( புலவர் கவிதைகள் ) திரு.புலவர் சா.ராமானுசம், (கவிதை வீதி ) திரு.செளந்தர், (வலைசரம்) திரு.சீனா, (தமிழ்வாசி) திரு.பிரகாஷ், திரு கேபில் சங்கர், (அட்ரா சக்க) திரு.சி.பி.செந்தில்குமார், (டீக்கடை) திரு.சிராஜுதீன்,  திரு.சங்கவி,  (பட்டிக்காட்டான் பட்டனத்தில்) திரு.ஜெயக்குமார், (அரசர்குளத்தான்) திரு.ரஹீம் கஸாலி, (மின்னல் வரிகள்) திரு.பாலகணேஷ், திரு.சுரேகா, (நண்டு நொரண்டு) திரு.ராஜசேகரன், (தீதும் நன்றும் பிறர்தர வாரா) திரு.ரமணி, (தென்றல்) திருமதி.சசிகல சங்கர், (மெட்ராஸ் பவன்) திரு.சிவக்குமார், (அஞ்சா சிங்கம்) திரு.செல்வின், (தோத்தவன்டா) திரு.ஆரூர் மூனா செந்தில், திரு.பிலாஸபி பிரபாகரன் மற்றும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் இந்த சமயத்தில் தொழிற்களம் குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

திரண்டு வாரீர் தமிழ் உறவுகளே!!!

உங்களுக்கு புதிய அத்தியாயத்தை நாங்கள் துவங்கி வைக்கிறோம்!!!

தமிழ் பதிவர்களுக்கு வருமானத்தை அளிக்கும் விதமான திட்டங்களை முதன் முதலாக மக்கள்சந்தை.காம் இணையத்தின் செயல்பாடுகளை  விளக்கவிருக்கும்  நமது மக்கள் சந்தை.காம் இணையத்தின்  நிறுவனர் திரு.சீனிவாசன்  அவர்களுக்கு நன்றிகள் கூற கடமைபட்டிருப்பது 

செள.அருணேஸ்வரன்
மற்றும்
தொழிற்களம் குழு

7 comments:

அண்னே,நிறைய பிக(பே)ரை பார்க்கலாம் என்று சொல்கிறார்களே?அப்ப என்னையும் கூட்டிகொண்டு போங்க.குஜிலிகுருஜி(அனுபவபதிவர்)? தம்பிக்கு இடம் உண்டா ?

சென்னையில் சந்திக்கலாம்

அனைவரையுமே வரவேற்கிறோம்..

சீனி கட்டாயாம் உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளோம்.

முதல் முதலாக இதுபோன்ற சந்திப்பில் கலந்துகொள்ள இருப்பதால் மிக மிக ஆவலுடன் இருக்கிறேன் - எல்லோரையும் சந்திக்க!

விழாவிற்கு வருகை தரும் தோழர்கள் தங்கள் வருகையை தயவு கூர்ந்து உறுதி செய்து கொள்ளுங்கள்..

kavimadhumathi@gmail.com

நானும் வருகிறேனே :)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More