உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது?

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.

தமிழ்-உலக மொழிக் 
குடும்பத்தின் தொன்மையான மொழி
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 1,71,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.

சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (7,50,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 5,00,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil Etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.

பாவாணர் தொடங்கிய இத்திட்டம், பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.

உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 5,00,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த 5,00,000 சொற்கள் பிறப்பிலக்கணத்தோடு வகைப்படுத்தப் பட்டு உள்ளது. அதன் சொற் பொருட்களை கணக்கில் கொண்டால் பத்து இலட்சங்களைத் தாண்டி விடும்.

3 comments:

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி...

வாழ்த்துக்கள்

TAMILAN ENDRU SOLLADA THALAI NIMIRNTHU NILLADA...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More