காலைத் தேனீர் - இன்றைய சிந்தனைத் துளிகள்!!!!அதிகாலையில் எழுவது  நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் மிகவும் நன்மை தரக்கூடியது...

நம்மை நாமே உற்சாகப்படுத்துவதை விட நம்பால் அக்கறை கொண்டவர்கள் நம்மை  உற்சாகப்படுத்தினால் அந்த நாள் நமக்கு மிகவும் பயனுள்ள நாளாக மட்டுமில்லாமல் மகிழ்ச்சிகரமான நாளாகவும் இருக்கும் தானே....

எனவே தினமும் காலையில் இந்த சிந்தனை துளிகளின் வாயிலாக உங்களிடம் உரையாடுவது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது....

இதோ சில துளிகள்......

  • பேசும் முன் கேளுங்கள்., எழுதும் முன் யோசியுங்கள்., செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.....
  • சில சமயம் இழப்பு தான் பெரும் ஆதாயமாக இருக்கும்...
  • நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்....
  • ஒரு துளி பேனா மை பத்து லட்சம் பேரை சிந்திக்க வைக்கிறது...
  •  முடியாதது என்று எதுவும் இல்லை.! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை...!
இத்துடன் ஒரு நீதிக்கதையும் உங்களுக்காக....
(பிடிச்சிருக்கு தானே....)

சிறுவனின் தன்னம்பிக்கை


        ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.
உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.


நன்றிகளுடன் விடை பெறுவது......
நமது தொழிற்களம்...

3 comments:

இன்றைய காலைத் தேநீர் சுறுசுறு என்று இருக்கிறது.
கதை மனதில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது.
எங்களை தொடர்ந்து உற்சாகமூட்டுவதற்கு நன்றி!

ஆகா,அண்ணனுக்கு கார் உண்டு.

தேநீர் ஸ்ட்ராங் , சுவை , சூப்பர் !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More