காலை தேனீர் : சிந்தனை துளிகள்

ஒருசமயம் கண்ணாடி குடுவையில் பழரசம் தழும்ப தழும்ப நிரப்பி சீடன் ஒருவன் தன் குருவிடம் கொண்டு வந்து கொடுத்தான். குருவோ ஒரு குறிப்பை மிக மும்முறமாக எழுதிக்கொண்டிருந்தார். இதனால் சீடன் வரவை கவனிக்காமல் எழுதிக்கொண்டே இருந்தார். சீடனும் குருவின் கவனம் சிதறும் என கருதி அமைதியாக காத்திருந்தான்.

வெகு நேரமாகியும் குரு பழரசத்தை வாங்காமல் கவனியாமால் இருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியே பறந்து வந்த  புறா ஒன்று தனது இறக்கைகளால் பழரச குடுவையை தட்டிவிட்டு விட்டது. கீழே விழுந்த குடுவை சிதறி அதிலிருந்த பழரசம் குருவின் உடல் மற்றும் எழுதிக்கொண்டிருந்த பிரதியில் கலந்து அனைத்தும் அழிந்து போயிற்று. கோபமுற்ற குரு  சீடனை பார்த்து முட்டாளே உனது அஜாக்கரதையால்  என் சாபத்துக்கு ஆளாகி விட்டால் கல்லாக மாறி போ என சாபமிட்டார். 

சீடனோ செய்வதறியாது குருவிடம்  நடந்த விசயத்தை அழுதபடி கூறினான். தவறிழைத்தது தானல்ல என்றான். 

குரு  அந்த சமாதானத்தை ஏற்காமல் சென்று விட்டார். 

இதில் யாருடையது பெரிய தவறு ..?

..... உங்களுக்கு  தோன்றும் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் .....

இன்றைய  நாளின் இரவில் பின்னூட்டத்தில் பதில் அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..!!
இதோ இன்றைய காலை தேனீரின் சிந்தனை துளிகள் ...

  • காட்சிகளால் வரையப்படும் ஓவியம் தான் வாழ்க்கை,, இதில் வண்ணங்களை  தீட்டுவது நேரங்கள் ஆகும். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட்டிருக்கும் நேரத்தை வீனடித்தால் ஓவியம் கலை இழந்துவிடும்.
  • மூச்சடக்கி முத்தெடுப்பதால் பலன் ஒன்றுமில்லை, அதை ரசிக்க வைக்க தெரியா விட்டால்,
  • ஒளி சிதறி விடினும் வானவில்லாய் தோன்றும். தோல்வி கூட அப்படித்தான். முழுமையாக புரிந்து கொண்டால் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும்,
  • ஒவ்வொரு நாளின் இருளையும் பார்த்து பயப்படுபவனுக்கு தெரியாது, பார்வையற்றவனின் தைரியம் பற்றி.
  • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - தந்தை பெரியார்
இனைய நாள் இனிய நாளாக அமைய அனைவருக்கும் தொழிற்களம் குழுவின் வாழ்த்துகள்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More