காலை தேனீர் : சிந்தனை துளிகள்

 காலை வணக்கம் உறவுகளே!!

    எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதை விரும்பியும் சரியாக திட்டமிட்டும் செய்வீர்களேயானால் அந்த செயல் நிச்சயம் சிறப்பானதாக அமையும். நமது சக  பதிவர்களும் தொழிற்களத்தில் சிறப்பானமுறையில் தங்களது பங்களிப்பை தொடர்ந்து வருகிறார்கள். தொடர்ந்து ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டுவதும், தவறுகளை  சுட்டிக்காட்டுவதும் அதை திருத்திக்கொள்வாதுமாக ஒரு இனிய குடும்பமே  தொழிற்களம் குழுவிற்கு  கிடைத்திருப்பது பெறும் மகிழ்சியளிக்கிறது.

தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். சென்னை பதிவர் சந்திப்பில் விரைவில் நமது குடும்பத்தை பார்க்க மிகுந்த ஆசை எழுகிறது.இதோ இன்றைய  சிந்தனை துளிகள்  :
  • இதயமும் மூளையும் பெறும் வெற்றியை பொருத்தே மனிதன் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் அடையாளம் காணப்படுகின்றான். - தொழிற்களம் குழு
  • வெற்றியை அடைய கடக்க வேண்டிய ஒரே படிக்கட்டு தோல்வி. உங்கள் கண்ணில் அது தொடர்ந்து தென்படுகிறதென்றால் நிச்சயம் வெற்றியை நெருங்கிவிட்டீர்களென்றே அர்த்தம் - தொழிற்களம் குழு
  • இருட்டில் விரல் பிடித்து கூட்டிச்செல்வதை விட, விளக்கை கையில் கொடுத்து பின் தொடர்வது அதிகம் பயனளிக்கும் - தொழிற்களம் குழு
  • சரியானது எது என்பதை தெரிந்த பின்னும் அமையாய் இருப்பதற்கு  பெயரே  கோழைத்தனம் - எங்கேயோ படித்தது
  • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். - தந்தை பெரியார்

2 comments:

எல்லாருக்கும் வணக்கமுங்க, வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது எப்படி ? பயிற்ச்சிக்கு இங்குஅனுகவும்.

இணையத்தால் ஒன்றாய் இணைந்த
இதயங்களுக்கு இனிய காலை வணக்கம் !
சிந்தனை நன்று.
விரைவில் சந்திப்போம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More