அன்பால் வேலை வாங்குங்கள் - திருப்பூர் சரவணா சில்க்ஸ்

                நான் வேலைக்கு சேர்ந்து ஆறு வருசமா ஒருமுறை கூட என்னை திட்டினது கிடையாது எங்கள் மரியாதைக்குரிய ராயப்பன் அய்யா.. 


    பொதுவா பார்திங்கன எங்க கடையில வேலை செய்யுறவங்க எல்லோருமே எப்பவுமே முகம் மலர்ச்சிய இருக்க காரணம் எங்கள் நிறுவனத்தார் எங்களை எங்கள் போக்கில் வேலைவாங்குவதுதான். எங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த சந்தர்பத்தை நாங்களும் சரியா பயன்படுத்திக்கிட்டோம். எங்க கடையில மட்டும் ஒரு தடவ ஒருத்தர் வாடிக்கையாளரா உள்ள வந்தார்னா மறுமுறை நண்பரா தான் வருவார். அந்த் அளவுக்கு நாங்க அவங்க கிட்டே நல்ல முறையில் பழகுவோம். 


வாடிக்கையாளர் மனம் கோணாமல் நடந்துக்கங்கங்க\னு மட்டும் தான் எங்களுக்கு இருக்கிற ஒரே கட்டளை என்றவாறு தங்கள் பணிபுறியும் நிறுவனத்தை பற்றி அங்கே வேலை செய்யும் நபரே சொல்லும் ஒரு அற்புதமான நிறுவனம் தான் திருப்பு பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் & ஸ்டோர்ஸ்.திருப்பூரில் கடந்த 15 வருடங்களாக அசைக்க முடியாமல் கால் ஊன்றி இன்று மூன்று தளங்களிலும் சில்க்ஸ், ரெடிமேட்ஸ்னு அடுக்கி வைத்திருக்கிறார்கள்
சிரித்த முகம், கனிவான பார்வை அனைவரையும் அன்புடன் வரவேற்கும் குணம் இவற்றின் ஒட்டுமொத்தமான உருவம் தான் திருப்பூர் சரவண சில்க்ஸ் & ஸ்டோரின் உரிமையாளரான திரு. ராயப்பன் அய்யா அவர்கள்


வாடிக்கையாளர்கள் கிட்டே மட்டுமல்லங்க நம்ம கிட்ட வேலை செய்யுறவங்க கிட்டேயும் நாம அன்பா நடந்துகிட்டோம்னாலே போதுங்க,,, அவங்க நம்மல உசரத்துல வச்சு பார்த்துப்பாங்க என்று புன்னைகையோடு சொன்னார்

இவர்கள் சொந்த தயாரிப்பாக சுடர்மணி கதர் ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

ஒரு விற்பனையாளராக தாங்க நான் என் வாழ்கையை தொடங்கினேன். அப்பொல்லாம் இவ்வளவு மக்கள் திருப்பூர்ல இல்லை. எட்டாவது தான் நான் படிச்சிருக்கேன். அனுபவங்கள் மட்டுமே எனது படிப்பு. அனுபவமும் உழைப்பும் இருந்தாலே ஆண்டவன் நம்ம கூட வருவாங்க.

உறுதியான பேச்சு ஒரு சிறு புன்னுகையுடனே தொடர்ந்தார்.

கடையில் உள்ள அனைத்து வகைகளுமே தெளிவாகவும் அழகாகவும் பணிபெண்கள் அடுக்கி வைத்திருந்திருந்தனர்.

ஒரு நல்ல அனுபவம் அவருடன் பேசியபோது கிடைத்தது.

இனிமே கோபத்தை குறைச்சுக்கனும்ங்க...
3 comments:

அனுபவம் பேசுகிறது.அனைத்து வளங்களும் ஆண்டவன்அருள பிராத்திகிறேன்.

அனுபவம் பேசுகிறது.அனைத்து வளங்களும் ஆண்டவன்அருள பிராத்திகிறேன்.

//வாடிக்கையாளர்கள் கிட்டே மட்டுமல்லங்க நம்ம கிட்ட வேலை செய்யுறவங்க கிட்டேயும் நாம அன்பா நடந்துகிட்டோம்னாலே போதுங்க,,, அவங்க நம்மல உசரத்துல வச்சு பார்த்துப்பாங்க //
ஒரு கோடி பெறும் வார்த்தைகள்!
வாழ்க பல்லாண்டு!

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More