காலை தேநீர் : இன்றைய சிந்தனைத் துளிகள்

இன்றைய சிந்தனைத் துளிகள் :
  • அமைதியான வாழ்க்கைக்கு அவசியமான மூன்றுதன்மைகள்கேட்டல்பார்த்தல்மவுனமாயிருத்தல் –வால்டர் பேகாட்.
  • மன உறுதி உள்ளவன் மிகப்பெரிய கஷ்டங்களைக் கூடஎளிதாக தாண்டி வெற்றி பெற்று விடுவான் – ஆக்டன்சர்மர்.
  • சுலபமான காரியத்தைக் காட்டிலும் தடைகள்  நிறைந்தகஷ்டமான காரியத்தை செய்வதுதான் மெய்யான திருப்தி.
  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை.
  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்  ஒருமுறை நமது அலுவலகத்தில் நிறுவனருடன் பேசிக்கொண்டுருக்கும் போது இடையே நடந்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

  நமது தள நிறுவனர் திரு.சீனிவாசன் அய்யா அவர்கள் அருகில் இருந்த ஒரு விற்பனையாளரிடம் ஒரு ஜிலேபியை வழங்கினார். அந்த விற்பனையாளரோ ஏற்கனவே பல முறை பொருட்களை வழங்குவதில் தாமதம் செய்திருப்பதால் காசோலையை எப்படி வாங்குவது என்ற தயக்கத்துடனே வெகு நேரமாக நின்றுகொண்டிருந்தார். எனவே அந்த ஜிலேபியை சற்று தயக்கத்துடனே வாங்கினார். 

நாங்களும் ஆளுக்கொரு ஜிலேபியை சுவைத்துக்கொண்டிருக்கும் போதே, அந்த விற்பனையாளரை பார்த்து ஐயா சொன்னார். 

நண்பரே! நீங்கள் என்னை பல முறை காக்க வைத்திருக்கிறீர், உங்கள் தாமதத்தால் எனக்கு அன்றாட அலுவலல்கள் நீங்கள் சாப்பிடும் ஜிலேபியை போல் பல சிக்கல்களை சுத்தி வைத்திருக்கிறது..

( இப்போது அந்த விற்பனையாளர் தன் தவறுணர்ந்து சற்றே தளர்ந்திருந்தார். )

ஆனாலும் உங்கள் பணி இந்த ஜிலேபியின் சுவை போல இனிப்பாக இருப்பதால் இந்தாருங்கள் உங்களுக்கான காசோலை என்று தாமதியாமல் காசோலையையும் நீட்டினார்.

அவர் சற்றே அவமானத்துடனும் பின் மன மகிழ்சியுடனும் காசோலையை வாங்கிவிட்டு இனி இதுபோல தாமதம் ஆகாமல் பார்த்துகொள்கிறேன் என்று விடைபெற்றார்.

குறிப்பால் தவறை சுட்டிகாட்டிய விதமும் அவரின் நகைச்சுவை பாங்கும் அதிசயிக்க வைத்தது. 

இந்த நாளில் உங்கள் பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்புடன் துவங்குங்கள்.

வாழ்த்துகள்!!!

தொழிற்களம் குழு

3 comments:

நகைச்சுவையுடன், நல்லதொரு பாடத்தையும் கற்பித்து, கூடுதலாக ஜிலேபியையும் கொடுத்த திரு சீனிவாசனின் பண்பு வியக்க வைக்கிறது.
எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

அம்மாவிற்கு நன்றி.....

ஜிலேபி மாதிரி சுத்தி வ‌ளைச்சு ஒரு சுவையான த‌க‌வ‌லை த‌ந்து விட்டீர்க‌ள். அருமை.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More