உலகத்தின் முதல் கேமரா மற்றும் பைக்....... சில அரிய புகைப்படங்கள்!

உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885):'டைம்ளர் ரைடிங் கார்' என்று அழைக்கப்படும் இந்த வாகனத்தை ஜெர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர். இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய முதலாவது வாகனமாகவும் காணப்பட்டது.

உலகத்தின் முதலாவது டிஜிடல் கேமரா (1975):


1975 டிசம்பர்களில் கோடக் (kodak) நிறுவனத்தின் தொழிநுட்பவியலாளர்களால் 0.01 மெகா பிக்ஸல் கொண்ட முதலாவது டிஜிட்டல் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலேயே வீடியோக்களையும் பதிவு செய்ய முடிந்தது மேலும் பிடிக்கப் பட்ட புகைப்படங்களை விரைவாக பிரிண்ட் செய்யக்கூடிய வசதியையும் இது கொண்டிருந்தமை அப்போதிருந்த தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சியைக் காட்டுகிறது.


உலகத்தின் அதிக விலையுயர்ந்த சைக்கிள் (2008):


$ 1,14,464 (டாலர்) பெறுமதி கொண்ட சைக்கிளினை 'ஸ்கெண்டினேவியன் டிசைன்' நிறுவனம் 2008-களில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் விலையுயர்வுக்குக் காரணம் இதில் பயன்படுத்தப்ட்டுள்ள தட்டுக்கள் அனைத்தும் 24 காரட் தங்கமாகும். இந்த தயாரிப்புகளில் 5 மற்றுமே இதுவரை துபாய்,ரஷ்யா, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரசு போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்:

$ 2,75,000 (டொலர்) பெறுமதியான இம்மோட்டார் சைக்கிள் முற்று முழுவதுமாக டைட்டேனியத்தினால் செய்யப்பட்டுள்ளது. 


1 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More