வாக்காளரைப் பதிவு செய்வதற்கான பொது விதிகள் - 1

எவரெல்லாம் ஒரு வாக்காளராக பதிவு செய்யப்படலாம் 
1950 – ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 19-ஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, சில வரையறைகளுக்கு உட்பட்டு,
(1) தகுதியேற்படுத்தும் நாளன்று 18 வயதுக்குக் குறையாத வயதுடைய, மற்றும்
(2) தொகுதியில் சாதாரணமாக வசிக்கிற ஒவ்வொரு நபரும் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாமைக்குக்கு காரணமான தகவின்மைகள் (Disqualifications): 
  1. 1950 – ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின்படி, கீழ்காணும் காரணங்களினால், ஒரு நபர், ஒரு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படுவதிலிருந்து தகுதியிழப்பு செய்யப்படுவார்
    1. அவர் ஒரு இந்தியக்குடிமகனாய் இல்லாத போது அல்லது
    2. அவர் மனநிலை சரியில்லாதவர் மற்றும் தகுதி வாய்ந்த நீதி மன்றத்தினால் அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்.
    3. ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான மற்றும் தேர்தல்கள் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பான யாதொரு சட்டத்தின் விதித்துறைகளின்கீழ் வாக்களிப்பதிலிருந்து தற்சமயத்திற்கு தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளவர்.(1951 – ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துனனவச் சட்டத்தின் பிரிவு 11A இணைப்பு – 2) 
    4. பதிவு செய்த பின்னர் அவ்வாறு தகுதியிழப்பு ஆகியுள்ள யாதொரு நபரின் பெயரும், அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உடனடியாக அடித்துவிடப்படும் (நீக்கப்படும்)
  1. 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 17மற்றும் 18 – ஆம் பிரிவுகளில் வகை செய்துள்ளவாறு, யாதொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் பெயர் பதிவு செய்யப்பட உரிமையற்றவராவார், அதே போல் யாதொரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையல் பதிவு செய்யப்படுவதற்கும் உரிமையற்றவராவார்.
சாதாரணமாக வசிப்பவர் (ordinarily resident)

சாதாரணமாக வசிப்பவர் (ordinarily resident)  என்பதன் பொருள் (1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20 –ஆம் பிரிவு)

    ஒரு நபர், உறங்குவதற்காக ஒர் இடத்தைப் பயன்படுத்தினால், அந்த நபர், அந்த இடத்தில் சாதாரணமாக வசிப்பவர் என்று கூறப்படுவார். அவர் , அந்த இடத்தில் உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் அந்த இடத்திற்கு வெளியே ஒர் இடத்திலும் உண்ணலாம். வழக்கமான அந்த வசிப்பிடத்தில் தற்காலிகமாக வசிக்காமை குறித்து கவலைப்படத்தேவையில்லை. அந்த இடத்தில் ஏதேனும் குறிப்பிட்ட காலத்திற்கு, இடைவெளி ஏதுமின்றி தொடர்ந்து வசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அலுவல் அல்லது வேலை அல்லது உல்லாசம் ஆகியவற்றுக்காக தற்காலிகமாக அந்த இடத்தில் இல்லாமற் போவதை, இயல்பான வசிப்பிடம் என்ற கருத்திற்கு இடையூறு செய்வதாகக் கருதக்கூடாது. 
(பணிபுரிபவர்கள் இது தெரியாமல் திருப்பூர், சென்னை, என்று அலுவல் காரணமாக செல்பவர்களின் விண்ணப்பங்களையும் கல்லூரியில் படிக்கவென்று வெளியூர் செல்பவர்களின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்வது வேதனைக்குரிய விடயம் தான்)

1 comments:

அருமையான தேவையான விளக்கம், வாழ்த்துக்கள் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More