பங்கு வர்த்தகம் மலர் -128

முதன் முறையாக கோவை சக்தி ,பங்குவர்த்தகம் மலர் தனது பாதத்தை தொழிற்களம் மடலில் அடியெடுத்து வைக்கிறது . தொழிற்களம் குழுவினருக்கு நன்றியும் ,வாசகர்களின் மேலான ஆதரவும் வேண்டி தொடரும் ,,,,,,,,,,,,,,,,

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5283.50 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5304.80 வரை உயர்ந்தது 5258.65 வரை கீழே சென்று 5299.40 முடிவடைந்தது.

  • நமது நிதியமைச்சர் பங்கு சந்தையை மேம்படுத்தவும் ,இன்சூரன்ஸ் துறையில் வளர்சிக்கான முக்கிய ஆலோசனைகளை பெறவும் , இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
  • இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவரும் ,அமெரிக்க நிதி சேவை பிரிவின் தலைவருமான திரு .ஹாஜி பாருக் தந்து பதவியை ராஜினாமா செய்து விப்ரோ  நிறுவனத்தில் இணைய போவதாக செய்திகள் கூறுகின்றன .
  • இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் இதுபற்றி கருத்து  தெரிவிக்க மறுத்துள்ளது .மேலும் கடந்த ஒரு ஆண்டில் முக்கிய பதவி வகித்த மூன்று உயர்ந்த பொறுப்பு வகித்தவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
  • நிலக்கரி ஊழல் தொடர்பான விவகாரத்தில் CBI -மத்திய புலனாய்வு துறை சில நிறுவனங்கள் மீது FIR பதிவு செய்துள்ளது .
  • நேற்று டெல்லியில் நடைபெற்ற வருமான வரி துறை ஆணையர்கள் ,இயக்குனர்கள் மாநாட்டிற்கு பின் நிருபர்களிடம் பேட்டியளித்த நிதியமைச்சர் உயர்திரு .ப .சிதம்பரம் அளித்த செய்தி குறிப்பில் " உள்நாட்டின் உற்பத்தி மீதான வரி விதிப்பை உயர்த்த வேண்டும் " என அறிவித்துள்ளார் .தற்போது உள்ள 10.1 % லிருந்து  12 % மாக உயர்த்தபட்டாலும் " குறைந்த வரி விதிக்கும் நாடு இந்தியா தான் "என தெரிவித்துள்ளார் .
  • மேலும்  வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் ,அதிகமானோரை வருமான வரி செலுத்த வகைபடுத்தவும் ,வருமான வரிகள் மூலம் வரும்  வருவாயை உயர்த்தவும் திட்டமிட பட்டுள்ளதாகவும் ,இதன் மூலம் அரசுக்கு ரூ.30,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துளார் .
  • வரும் நாட்களின் STATE BANK OF INDIA ( SBI ) மற்றும்  BHARTHI AIRTEL நிறுவன பங்குகள் மேல் நோக்கி செல்ல வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் . 
                                      

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5305 STAYED ABOVE 5320 TARGETS ,,5335 ,,5352,5370,,

THEN 5390,,5421,,

SUPPORT LEVELS 5270,,5260 .,,,


SELL BELOW 5250 STAYED WITH VOLUME -5237,TARGETS 5226,5217,,5206,,


THEN 5190,,5167,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


5 comments:

வாழ்த்துக்கள், புதுமையான முயற்சி, நன்றி

வாங்க சார்... இனி அனைவரும் பங்கு வர்த்தகத்தை தெரிந்து கொள்வார்கள்... வாழ்த்துக்கள்...

நல்ல தொடக்கம் சக்தி,,,

தொழிற்களத்தில் பங்குகள் பற்றி வாசிக்கும் அனைவருக்கும் பயனுள்ள சரியான தகவல்களை உடனுக்குடன் அளியுங்கள்,,

நன்றி!!

கமாடிட்டி பங்குகள் குறித்தும் தகவல் கூறினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

மிக்க நன்றி நண்பர்களே ,
உங்கள் ஆதரவை தொடருங்கள் .commodity பற்றி வரும் நாட்களில் தொடர்வோம்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More