Latest News

பணம் பணம் பணம் : 13

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

தொழிற்களம் வலை தளம் மூலமா உங்களை 13 ஆவது நாளா சந்திக்கிறேன். கடந்த பதிவுல ஒரு தொழிலை ஆரம்பிக்கிறச்ச  கையில உள்ள காசை செலவு செய்யும் போது / முதலீடு செய்யும் போது அதுல பல கேட்டகிரிகள் இருக்கும்னு  சொன்னேன்.எந்த கேட்டகிரியில எவ்ளோ செலவழிக்கிறதுங்கறது ஒரு வித்தை.

சரத்குமர் படத்துல அவரு டெக்ஸ்டைல் ஆரம்பிப்பாரு. கடை ரெடி,.ஃபர்னிச்சர்ஸ் ரெடி, கல்லா பெட்டி ரெடி.  எம்ப்ளாயிஸ் ரெடி,சில்லறைகளை போட ஸ்டீல் பாத்திரமும் ரெடி.. எல்லாரும் சரக்குக்காக காத்திருப்பாய்ங்க. சரக்கு வரும்.  பகவத்கீதை ஒரு பிரதியை கூரியர்ல அனுப்பின சைஸுல சரக்கு வரும். சரத் பயங்கர மொக்கை ஆயிருவாரு. இது ஜஸ்ட் காமெடி ட்ராக் மட்டுமில்லை. தொழில் அல்லது சேவை மையத்தை துவக்க நினைக்கிறவுகளுக்கு சரிய்யான பாடம் கூட.

வரவு செலவுகள்ள ரெண்டு விதம் இருக்கு. கேப்பிடல் மற்றும் ரெவின்யூ. நீங்க கோழி வளர்த்து முட்டை வியாபாரம் செய்ய  வாங்கினா கோழி வாங்கினா  அது கேப்பிட்டல் எக்ஸ்பென்டிச்சர். அதையே குருமா வச்சு நீங்க/உங்க குடும்பம் மட்டும் திங்க  வாங்கினா  ரெவின்யூ எக்ஸ்பென்டிச்சர். யாவாரத்துல முடிஞ்சவரைக்கும் செலவுகள் எல்லாமே கேப்பிட்டல் எக்ஸ்பென்டிச்சரா இருக்கனும்.

இதுலயும் ரெண்டு விதம் இருக்கு. சில செலவுகள் ரெடிமேட் சீனரி வாங்கி சுவத்துல ஆணியடிச்சு மாட்டின மாதிரி. வேணாம்ன படக்குன்னு கழட்டி எடுத்துக்கிட்டு போயிரலாம். சில செலவுகள் சுவத்துக்கு அடிச்ச  சூப்பர் சிம் மாதிரி திரும்பி வராது.

திரும்பி வாரா செலவுகளை திரும்பி வர்ர செலவுகளா மாத்தனும். முடியாத பட்சம் இந்த திரும்பி வாரா செலவுகளை மேக்சிமம் குறைக்கனும்.

ஒரு ஷோ ரூம்  திறக்கறதுக்கு 3 மாசம் முன்னாடியே கார்ப்பென்டரிங் வேலை ஆரம்பிச்சுருவாய்ங்க. கூரை உயரத்துக்கு அலமாரிங்க அடிச்சிக்கிட்டிருப்பாய்ங்க.இதுல 90% வேலை ப்ளைவுட்ல தான் செய்வாய்ங்க. ப்ளை உட்டோட ப்ளஸ் பாய்ண்ட் என்னடான்னா ஃப்ளெக்சிபிள், படபடன்னு அறுத்து அடிச்சு மாட்டிரலாம். ஆனால் லைஃப் வராது , இதுக்கு பிரைமர் அடிச்சு ,பெயிண்ட் அடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துரும்.

நமக்கு முன் அனுபவம் இல்லாம அசால்ட்டா இருந்தா சுவர் பக்கம் போயிரக்கூடிய பகுதிக்கு பிரைமரோ பெயிண்டோ அடிக்காம விட்டுட்டா கூரையோ,சுவரோ லேசா டேமேஜ் ஆகியிருந்து ,லேசா தண்ணி பட்டா போதும் டோட்டல் ஃபிக்சர்ஸும் கோவிந்தா.

இது மட்டுமில்லை ப்ளை வுட்டுகளை ஷீட் ஷீட்டா வாங்கி அறுத்து தள்ளி அலமாரி ஆக்குவாய்ங்க.ஒன்னோட ஒன்னை இணைக்க சகட்டு மெனிக்கு ஆணியடிச்சு தள்ளிருவாய்ங்க. யாவாரம் பிக் அப் ஆகி மெயின் ரோடுக்கு ஷிஃப்ட்  ஆக. நினைச்சு கழட்ட போனாலோ, இன்னம் வேலைக்காகாதுன்னுட்டு எல்லாத்தையும் கழட்டி வித்துட்டு ஊரை பார்க்க போக  நினைச்சாலோ கண்கவர் அலமாரிகளா நின்ன ப்ளைவுட் குப்பையாத்தான் கைக்கு வரும்.

இதுக்கு மிந்தில்லாம் டிஜிட்டல் போர்டு -ஃப்ளெக்சில்லாம் கிடையாது. ரீப்பர்ல ஃப்ரேம் அடிச்சு ,தகடு வாங்கி அடிச்சு அதுக்கு ப்ரைமர் அடிச்சு பெயின்ட் அடிச்சு அதுக்கப்பாறம் ஆர்ட்டிஸ்ட் போர்டு எழுதனும்.ஆரோ மகராசன் பெயின்டட் தகடு மார்க்கெட்ல  விட்டான்.

இதே போல இந்த பதிவை படிக்கிற நம்மாளுங்க பெயின்டட் ப்ளைவுட்டை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தா அள்ளலாம். இதை வாங்கி உபயோகிச்சா 3 மாச வேலை ரெண்டு மாசத்துல முடிஞ்சுரும். கூலி மிச்சம், வாடகை மிச்சம். ஒரு மாசம் மிந்தியே காசை பார்க்க ஆரம்பிச்சுரலாம்.

அலமாரிகளை ஆணியால இணைச்சா பிரிக்கும் போது குப்பை ஆயிரும். நெட்,போல்ட் உபயோகிச்சா சேதாரம் குறையும். ஆக நம்ம முதலீடு சுவத்துல மாட்டின சீனரி மாதிரி இருக்கனுமே தவிர சுவத்துக்கு அடிச்ச சூப்பர் சிம்மா இருக்கப்படாது.

சிலர் கடையோ /சேவை மையமோ ஆரம்பிச்ச மறு நாளே புலம்ப ஆரம்பிச்சுருவாய்ங்க. "என்னமோ நினைச்சேன் பாஸ்.. நான்  நினைச்ச அளவுக்கு இல்லை" " தப்பு பண்ணிட்டனோன்னு தோனுது. இந்த மாசம் வாடகை ,கரண்ட் பில்லாச்சும் கட்ட முடியுதோ இல்லியோ"ம்பாய்ங்க.

ஒரு படம் மொத நாள்ளயே பிக் அப் ஆயிரும். ஒரு படம் ஃபர்ஸ்ட் வீக்ல பிக் அப் ஆகும். ஒரு சில படம் நாலு வாரத்துக்கு அப்பாறம் பிக் அப் ஆகி சில்வர் ஜூப்ளி பண்ணும்.

முதலீடு கட்டம் முடிஞ்சு போச்சு இனி போட்ட முதலை எடுக்கனும்னு மொத நாளே தவிக்கிறவுக சிக்கிரமே துவண்டு போயிருவாய்ங்க. நாம மொத ஆறு மாசத்துக்கு கடை/சர்வீஸ் சென்டர்ல இருந்து பத்து பைசா தேவையில்லைன்னு சொல்ற ரேஞ்சுல ரிசர்வ் ஃபண்ட் மெயின்டெய்ன் பண்ணியிருக்கனும்.

இது மட்டுமில்லிங்கண்ணா..சில கேஸ்ல திறப்பு விழாவுக்கு வாரம் இருக்கும் போது "செலவு சகட்டுமேனிக்கு  இழுத்து விட்டுருச்சு .. . மேற்கொண்டு பெரிய ரூபா ஒன்னிருந்தாதான் வேலைக்காகும்"னு  கடனுக்கு அலைஞ்சுக்கிட்டிருப்பாய்ங்க. இதுவும் தப்பு.

திட்டமிடறது எவ்ளோ முக்கியமோ அதை அமலாக்கும் போது சமயத்துக்கு ஏத்தாப்ல மாத்திக்கவும் தெரியனும்.ஏற்கெனவே சொன்னாப்ல கெட்டதை நினைச்சு தயாரா இருக்கனும்.

பத்துரூவால முடிச்சுரலாம் சார்னு கணக்கப்பிள்ளை/காண்ட்ராக்டர்  சொல்லலாம்.ஆனால் கையில உபரியா ரெண்டு ரூவா வச்சிருக்கனும். கு.பட்சம் ஃபோன் போட்டா தினத்தந்தி பேப்பர் சுத்தி கொடுத்தனுப்பறாப்ல ஒரு ஏற்பாடு இருக்கனும்.

திறப்பு விழாவுக்கு பத்து நாள் இருக்கிறச்ச தான் உங்களோட  நேரடி  மேற்பார்வை அவசியம் தேவை. அந்த நேரம் பார்த்து காசு பத்தலின்னு நீங்க கடனுக்கு அலைஞ்சுக்கிட்டிருந்தா மொத்த வேலையும் நாறிரும்.

ஒரு கிணறு இருக்கு.கிணத்துல 40 ஆடியில தண்ணியிருக்கு. உங்க கிட்டே 39 அடி கயிறு இருந்தா கூட வீண் தான். அட 40 அடி கயிறே வச்சுக்கிட்டு போறிங்க. உங்க நேரம் தண்ணி வத்தியிருக்கு.மேற்கொண்டு நாலடி கயிறு இருந்தா தான் தண்ணி கிடைக்கும்னு வைங்க. மறுபடி கவுத்துக்கு அலையப் படாது. அதனால ஒரு  கயிறு வாங்கும் போதே அஞ்சடி கூடுதலா வாங்கிரனும்.

நீங்க ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூம் ஆரம்பிச்சிங்க. மொத 3 மாசம் லாபத்தை எதிர்ப்பார்க்காம கையிலருந்தே செலவழிச்சுக்கிட்டிருக்கிங்க. இடையில ஒரு மாசம் இருக்கு. அதை சமாளிச்சாச்சுன்னா பொங்கல் சீசன் ஆரம்பிச்சிரும். என்ன செய்யறது? அதுக்கும் ஒரு ஏற்பாடு இருக்கனும். இதையெல்லாம் ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரிக்கிற சமயத்துலயே ப்ராஜக்டுல சேர்த்து ஒர்க் அவுட் பண்ணி வைக்கனும்.

அடுத்த பதிவுல லேபர் ,விளம்பரம்ங்கற ரெண்டு விஷயத்தை பார்ப்போம். ஏன்னா இந்த 2 மேட்டர்ல பல்பு வாங்காத பார்ட்டியே கிடையாது.


Follow by Email

Recent Post