Latest News

பணம் பணம் பணம் : 16

அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !
தொழிற்களம் வலைதளம் மூலம் 16 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். கடந்த 2 பதிவுகளில் விளம்பரம், லேபர் பிரச்சினைகளை பற்றி தொட்டு காட்டினேன்.

இந்த தொடர்பதிவின் ஆரம்பத்தில் பணத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்த சில அத்யாயங்களை விரயமாக்கினாலும் , பிறகு  பணவேட்டையில வரக்கூடிய சிக்கல்களை எல்லாம் சுட்டிக்காட்டி -அதற்கான தீர்வுகளையும் பட்டியலிட்டுக்கிட்டு வரேன்.

இதுல உன்னிப்பா கவனிச்சா எல்லாத்துக்கும் அடிப்படை "கவனித்தல்" மற்றும்  "முடிவெடுத்தல்"

இந்த ரெண்டு கப்பாசிட்டி இருந்தா பைசா பண்றது ஜுஜுபி. பணம் எல்லார்க்கிட்டேயும் இருக்கு. சிலர் கிட்டே பணமாவே இருக்கு. சிலர் கிட்டே வேறு வடிவத்துல இருக்கு. அதை பைசாவ மாத்தறதுக்கு தேவை  "கவனித்தல்" மற்றும்  "முடிவெடுத்தல்"

கவனிக்கிறது ஒரு கலை. ஒரு காலத்துல  டிவில  செய்தி வாசிக்கிறதுல  ஒரு  பெண்மணிக்கு பெத்த பேரு. ஆனால் தாய்க்குலம் அந்த பெண்மணி என்ன சேலை உடுத்தியிருக்காய்ங்கன்னு பார்க்கவே செய்திகள்  பார்ப்பாய்ங்க. - இது தேவையா?

சுஜாதா சிறுகதையில "சிட்சை" எதுவுமில்லாம சுயம்புவா வீணை வாசிக்க கத்துக்கிட்ட கணவன் வாசிச்சு காட்டுவான். கண் சிமிட்டாம இதை "கவனிக்கிற" மனைவி "உங்களுக்கு லேசா மாறு கண்"இருக்கும்பா.

இதான் உங்க  கவனித்தல் இதான் உங்க அவதானிப்புன்னா டப்பா டான்ஸ் ஆடிரும்.

அடுத்த தகுதி முடிவெடுத்தல்..

ஒருத்தன் வைன்ல தண்ணி கலந்து அடிச்சான்.போதை ஏறுச்சு. பிராந்தியில தண்ணி கலந்து அடிச்சான் ..அதே போதை . ஜின்ல தண்ணி கலந்து அடிச்சான் கிர்ருன்னு ஏறுச்சு.

ஒடனே முடிவுக்கு வந்தான். தண்ணி போதை தரும் திரவம். கொய்யால இதான் உங்க முடிவெடுக்கும் திறன்னா டங்குவார் அறுந்துரும்.

நாளைக்கு இந்த கவனித்தல் & முடிவெடுத்தல் பற்றி ஆழமா பார்ப்போம்.

கடந்த 15 நாளா இந்த தொடர்ல தொடர்ந்து கனமான விஷயங்கள படிச்சு கொஞ்சம் அசந்து போயிருப்பிங்க. அதனால இன்னைக்கு டிட் பிட்ஸ் மாதிரி சில விஷயங்கள தரேன்.

இதுல ஒவ்வொரு விஷயமும் ரெம்ப முக்கியம். இன்னைக்கு பண வேட்டையில தோத்து அனத்திக்கிட்டிருக்கிறவுகள்ள ஒவ்வொருத்தரும் -இதுல உள்ள ஒரே ஒரு  விஷயம் தெரியாம/ அல்லது மறந்து போயி தான் தோத்திருப்பாய்ங்க.( ஹி ஹி நானும் தேன்)

* பணம் முட்டாளையும் ஞானியாக காட்டக்கூடிய மூலிகை. ( ஜஸ்ட் காட்டக்கூடுமே தவிர ஞானியா ஆக்கிராதுங்கோ - நான் ஞானின்னு நம்பிட்டா பொளப்பு நாறிரும்)

*பணம் குருடனையும் பார்க்க செய்யும் .செவிடனையும் கேட்க செய்யும்.முடவனையும் கை நீட்ட செய்யும்.நொண்டியையும் உங்களை   நோக்கி வரச்செய்யும். ஊமையையும் உங்களை பற்றி பேசச்செய்யும்.

*பணம் .. உலகபொதுமொழி

*பணம் ..நம் உயிர்வாழ்தலுக்கு அவசியமான ஆக்சிஜனை விட சக்தி படைத்தது.ஏன்னா பணத்தை வச்சு ஆக்சிஜனையும் வாங்கலாம்.

* பணத்தால் காலத்தை -தூரத்தை வெல்ல முடியும்ங்கறது அதிர்ஷ்டம். அதே பணத்தால் மனித மனங்களையும் .வாங்க வேண்டி இருப்பது துரதிர்ஷ்டம்.

*பணம் ..அடிப்படை தேவைக்காக அரக்க பரக்க தேடுபவனுக்கு கானல் நீர் - தேவைகள் தீர்ந்து சதுரங்கமே போல் வியூகம் வகுத்து தேடுபவனுக்கு காட்டாறு.

*பணத்துக்கு சுயமரியாதை அதிகம். அதை அவமானப்படுத்துபவனை நாடி வருவதே இல்லை.

*பணம் சுயமரியாதையுடன் வாழச்செய்யும். ஆனால் அதை பெற பல நேரங்களில் உங்கள் சுயமரியாதையை செலவழிக்கவேண்டி வரும்.

*பணமும் புல்லெட் போன்றதே. ட்ரிக்கர அழுத்தின பிறகு புல்லட் மீதான கட்டுப்பாட்டை இழந்துர்ரம்.

*பணம் கடவுளை விட சக்தி வாய்ந்தது. பணத்தால் சில சமயம் கடவுளையும் வாங்க முடிகிறது..

*என்னைக்கோ ஒரு நாள் எனக்கு பணம் வரும்னா உங்க வாழ்க்கை வானம் பார்த்த பூமி.

*பண வேட்டையே சுக வாழ்வுக்காகத்தான். வேட்டையில வென்ற  பிறகு வாழ்ந்தா போச்சுன்னு நினைச்சா  வாழ்க்கையே போச்சு.

*பணம்  விலை உயர்ந்த இம்போர்ட்டட் சென்டை விட சக்தி வாய்ந்தது . நம் உடல்  நாற்றத்தை கட்டுப்படுத்தும்.

நாளைக்கு கவனித்தல் மற்றும் முடிவெடுத்தலை பற்றி விரிவாக  பார்ப்போம். உடுங்க ஜூட்டு..Follow by Email

Recent Post