பணம் பணம் பணம் : 1


அண்ணே வணக்கம்ணே !
தொழிற்களம் வலைதளத்தின் மூலமா உங்களை ஒரு புது இமேஜோட சந்திக்கிறேன். ( நம்மை ஆத்தரா இன்வைட் பண்ணியிருக்காய்ங்க)

தெலுங்குல ஒரு பழமொழி "கோட்டி வித்யலு கூட்டி கொரக்கே" அதாவது கோடிக்கணக்கான வித்தைங்க இருந்தாலும் அதெல்லாம் புவ்வாவுக்காகத்தான்னு சொல்றாய்ங்க.

இன்னைக்கு கையில வித்தைய வச்சிருக்கிறவன்லாம் வெறும் புவ்வாவுக்காகத்தானா சம்பாதிக்கிறான் ? ஊஹூம். நம்மில் பணம் இல்லாதவுக இருக்கலாமே தவிர பணத்தேவை இல்லாதவுக இல்லை. எல்லாருமே பணம் பண்ணத்தான் நினைக்கிறோம். சிலருக்கு மட்டும் சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது. பலர் பல்பு வாங்கிர்ரோம்.

ஏன் இப்படி? காரணம் சிம்பிள் . பணத்தை பற்றிய புரிதல் இல்லை.


பொரி கடலை:

1.பணம் ரத்தம் போன்றது.அது சமுதாயம் என்ற உடலில் தங்கு தடையின்றி சுற்றிவரவேண்டும். அது உறைந்தாலோ, சுண்டினாலோபிரச்சினைதான்.

2.பணம் எப்படிப்பட்ட முட்டாளையும் அறிவாளியாக்கக்கூடிய அற்புத மூலிகை. எனவே முட்டாள்களுக்கே பணம் அதிகம் தேவைப்படுகிறது

3.பணம் ஊமையை பேச வைக்கும். குருடனை பார்க்க வைக்கும்.முடவனையும் நமக்காய் கைத்தட்ட வைக்கும். நொண்டியை கூட நமக்காய் ஓடிவரவைக்கும்

4.பணம்.. எந்த மொழியினருக்கும் புரியக்கூடிய உலகப்பொதுமொழி.

5. மனிதன் ஒரு ஈ பணம் தேன் நிறைந்த பாத்திரம். .அதன் உதட்டின் மேல் நின்று லேசாய் உறிஞ்சினால் பிரச்சினையில்லை. அதில் குதித்தால் இறக்கை நனைந்து ஒட்டி சாக வேண்டியதுதான்.

6 பணம் ஆக்சிஜனை விட மதிப்பு மிகுந்தது. பணத்தை கொண்டு ஆக்சிஜனையும் வாங்கலாமே..

7.பணத்தை கொண்டு காலம்,தூரத்தை வெல்ல முடிவது மனித குலத்தின் அதிர்ஷ்டம். ஆனால் அதே பணத்தை கொண்டு தான் இதயங்களையும் வெல்ல முடியும் என்பது துரதிர்ஷ்டம்.

8.பணம்...அதற்கான தேவையுடன் அதை ஈட்ட முனைபவனுக்கு கானல் நீர். அதற்கான தேவையின்றி முயல்பவனுக்கு ஆற்று நீர்

9. பணத்துக்கு ஈகோ அதிகம். எவன் தன் ஈகோவுக்காக அதை செலவழிக்கிறானோ அவனிடமிருந்து கழண்டு கொள்ளும்.

10 பணம் சுய கவுரவத்துடன் வாழ வகை செய்யும்.ஆனால் அதை ஈட்ட பலி கொடுக்க வேண்டியதும் சுய கவுரவத்தைதான்.

11. பணம் .. குறைவாக இருந்தால் வெளிச்சம் தரும் வீட்டு விளக்கு அளவுக்கு அதிகமானால் வீட்டை சாம்பலாக்கும் காட்டுத்தீ

12.பணம் புல்லெட் போன்றது. ட்ரிக்கரை அழுத்திய பின் அதன் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். வெடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கியை விட குறி வைக்கப்பட்ட துப்பாக்கிக்கே ஆணையிடும் அதிகாரம் அதிகம்

8 comments:

நல்ல அறிமுகத்துடன் துங்கியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்!!

பணத்தை பற்றி நல்ல விளக்கம் அருமை

வாங்க ராஜா !
வரவுக்கும் மறுமொழிக்கும் நன்றி. வெறுமனே விளக்கம் கொடுத்துட்டு கழண்டுக்கறதா இல்லை. பணத்துக்கு படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சு அல்லாரையும் ரிச் ஆக்கிருவம்ல.

முன்னுரையிலேயே ஆர்வத்தைத் தூண்டி விட்டுடீங்க!

பணம் என்றால் சும்மாவா?

தொடருங்கள். பாராட்டுக்கள்!

ரஞ்சனி நாராயணன் அவர்களே,
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
(உஸ்.. அப்பாடா இன்னம் 25 அத்யாயம் போடற அளவுக்கு பூஸ்ட் கிடைச்சாச்சு -கமெண்ட்ஸ் ஆர் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி)

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி !

ungal athiyayum muyumayum padika aarvamaga ullean.....

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More