வாக்காளரைப் பதிவு செய்வதற்கான பொதுவிதிகள் – 2


வாக்காளரை பதிவு செய்வதற்கான பொதுவிதிகளின் முந்தைய பாகத்தை படிக்க http://tk.makkalsanthai.com/2012/09/1.html


சாதாரண வசிப்பிடம் என்ற பொதுவான கொள்கைக்கு விதிவிலக்குகள்

  1. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமியற்றுவோர் என்ற தங்களுடைய நடவடிக்கைகள் தொடர்பாக, அவர்களுடைய வழக்கமான வசிப்பிடத்திலிருந்து  அப்பால் இருப்பதை கருத்தில் கொள்ளாமல் அவர்களுடைய  சொந்த தொகுதிகளில் , பதிவு செய்யப்படுவதற்கு உரிமையுடையவர்கள் ஆவர், (1950 – ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20 (1பி) பிரிவு இணைப்பு 1.2)
  2. சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஏனைய சட்டப்படியான காவலில் இருப்பவர்கள், மருத்துவமனைகள், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள், புகலிடம் ஆகியவற்றில் தங்கியிருப்போர் அத்தகைய நிறுவனங்கள் அமைந்துள்ள தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படகூடாது.(1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20(2) ஆம் பிரிவு – (இணைப்பு 1.2)
  3. மாணவரில்லம் அலலது உணவுச் சாலை அல்லது தங்கும் விடுதி ஒன்றில் ஏறத்தாழ தொடர்ந்து வசிப்பவரும், குறுகிய கால அளவிற்கு தங்களுடைய வழக்கமான வீட்டிற்கு அல்லது இடத்திற்கு திரும்பிச் செல்கிறவர்களும், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யத் தகுதியுள்ளவர்களுமாகிய மாணவர்கள், மாணவரில்லம் இல்லது உணவுச்சாலை அல்லது தங்கும் விடுதி அமைந்துள்ள இடத்தில் சாதாரணமாக வசிப்பவர் என்று கருதப்படுவர், இருப்பினும் அவர்களுடைய பெற்றோர் வசிக்கிற இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவர்களுடைய பெயரை இருத்திவைக்க வேண்டுமென்று விரும்பினால், அத்தகைய விருப்புரிமையைப் பெற்றிருப்பர்.

2 comments:

பலருக்கும் பயன் தரும் பகிர்வு... நன்றி...

குடிமகன் அறிய வேண்டிய ஒன்று நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More