பணம் பணம் பணம் : 2


அண்ணே வணக்கம்ணே !

தொழிற்களம் வலைதளம் மூலமா ரெண்டாவது நாளா உங்களை சந்திக்கிறேன். உங்களையெல்லாம் ரிச்சாக்கத்தான் இந்த தொடர்பதிவு. இதனோட ரீச்சு பிச்சிக்கனும். ஆமாம் சொல்ட்டன். சகட்டுமேனிக்கு டிவிட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் ஷேர் பண்ணுங்க.

ஏன்னா நீங்க பணம் சம்பாதிக்கனும்னா உங்களை சுத்தி இருக்கிறவன்லாம் சம்பாதிச்சிட்டிருக்கனும். சம்பாதிக்க தெரிஞ்சுக்கனும் . கு.ப சம்பாதிக்கனுங்கற துடிப்புல இருக்கனும்.


மேட்டருக்கு போயிரலாமா?

ஈட்டி எட்டின வரை பணம் பாதாளம் வரை - பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை - பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண் வையடா தாண்டவக்கோனே - இப்படி பணத்தோட முக்கியத்துவத்தை சொல்ற பழமொழிகள் -பாட்டுகள் ஏராளம் ஏராளம்.

அன்றாட வாழ்வில் பெரிசா பணத்தேவை இல்லாத அந்த நாட்கள்ளயே -பண்டமாற்று நடைமுறையில இருந்த அந்த காலத்துலயே பணத்துக்கு இவ்ளோ முக்கியத்துவம் இருந்திருக்கு.

இன்னைக்கு காசு பணம் இல்லாம மூச்சா கூட போக முடியாத நிலை. பத்து வருசத்துக்கு மிந்தி ஒரு பாட்டில் தண்ணியை பால் விலை கொடுத்து வாங்கப்போறோம்னு நினைச்சோமா ? இல்லையே !

இன்னைக்கு நாட்ல உள்ள அனேக பிரச்சினைகளுக்கு காரணம் வறுமைதான். சனம் பணத்தை - அதை சம்பாதிக்கிறவுக சைக்காலஜியை - சம்பாதிக்க முடியாதவுக சைக்காலஜியை புரிஞ்சிக்கிட்டா பணத்தை ரெம்ப ஈஸியா சம்பாதிக்கலாம். சம்பாதிச்சதை ஈமு கோழியிலயும் -நாட்டுக்கோழியிலயும் விடாம இழுத்து பிடிச்சுக்கலாம். இதுக்காகத்தான் இந்த தொடர்பதிவு.

பணம் பற்றிய டாக்டரேட் பட்டத்துக்குரிய என் தியரிய இப்பம் படிக்கப்போறிங்க.தந்திருக்கேன். இதை கரீட்டா புரிஞ்சுக்கிட்டிங்கனா பாதிக்கிணறை தாண்டிட்ட மாதிரிதான்.

எல்லா உயிருக்கும் மூலம் அமீபா. ஒரு செல் அங்கஜீவி - அது கொழுத்து செல் காப்பிமூலமா ரெண்டாச்சு - செல் காப்பியிங்ல நடந்த எதிர்பாராத - விபத்து மாதிரியான -தவறு காரணமா புது ஜீவராசிகள் உருவாச்சு - குரங்கு வந்தது - குரங்குலருந்து மனிதன் வந்தான் .

ஒரே உடல் ஒரே உயிரா இருந்த காலத்துல உயிர்களுக்கு தூரம் ,கம்யூனிகேஷன் ட்ரபுள், இன்செக்யூரிட்டி இப்படி எந்த பிரச்சினையும் கிடையாது - ரெண்டாவது உயிர் உருவானதுமே இதெல்லாம் ஸ்டார்ட் ஆயிருச்சு.

ஆனால் ஓருயிர் ஓருடலா இருந்த நினைவுகள் மட்டும் செல் டு செல் காப்பியிங் மூலமா ஒவ்வொரு மனித மூளைலயும் ஃபீட் ஆயிருக்கு. மறுபடி ஓருயிர் ஓருடலாகனும்ங்கற துடிப்பு இருக்கு.

எல்லாம் கரீட்டுதான். ஆனால் இந்த ஓருயிர் ஓருடலா மாற இந்த உடல்தான் தடைங்கற ஒரு தவறான நம்பிக்கை -எண்ணம் - ஃபோபியா ஹ்யூமன் மைண்ட்ல இருக்கு(ங்கறது என் நம்பிக்கை)

இதுக்கப்பாறம் வர்ரதெல்லாம் 100 சதம் சைக்காலஜிங்கோ !

மன்சங்க இன்னா நெல்ல வேலை பண்ணாலும், என்னா கேப்மாரி வேலை பண்ணாலும் அதும்பின்னாடி இருக்கிறது ரெண்டே ரெண்டு ஆசை தானாம்.

ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது. இதை நான் சொல்லலை . சைக்காலஜி சொல்லுது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். அதனால தான் சனங்க செக்ஸுக்கு சரண்டர் ஆயிர்ராய்ங்க. ஏன் எப்படிங்கறவுகளுக்கு பதில் : மேல் மாடிக்கு வேலை கொடுங்க .ரோசிங்க.

மன்சங்களோட எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னாடி இருக்கிறது செக்ஸ் தான். செக்ஸுக்கு பின்னாடி இருக்கிறது கொலை+தற்கொலை வெறி.

ஆனால் பாருங்க நம்ம மதம்,பண்பாடு,கலாசாரம் எல்லாமே செக்ஸை ஏறக்குறைய தடை பண்ணி வச்சிருக்கு.

வாய்க்கால்ல ஓடற தண்ணிய தடை பண்ணா அது தேங்கற மாதிரியே தேங்கி எங்கே கரை பலகீனமா இருக்கோ அங்கே உடைச்சிக்கிட்டு பாஞ்சுரும்.

அதே மாதிரி மனித மனம் செக்ஸ் தடை பண்ணப்பட்டிருக்கறதால அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவை தேடி பிடிச்சுக்குச்சு. அதான் பணம்.

செக்ஸ்ல கிடைக்கிறதெல்லாம் பணத்துலயும் கிடைக்குது. உபரியா செக்ஸும் கிடைக்குது. அதனாலதான் சனம் பணம் பணம்னு லோ லோனு அலையுது

குழந்தைக்கு தாய்ப்பால் மறுக்கப்பட்டா - சூப்பான் -சூப்பான் மறுக்கப்பட்டா விரல் போட்டுக்கற மாதிரிதான் இதெல்லாம்.

அடங்கொய்யால சூப்பான் மேலயாச்சும் சாக்ரின் பூச்சிருக்கும் எச்சில் பட்டா கொஞ்சமேனும் இனிப்பா இருக்கும். விரல்ல என்னங்கனா கீது? எதுக்கு சூப்பனும்? ஜஸ்ட் ..ஒரு ஆல்ட்டர்னேட்டிவ். அவலை நினைச்சு உரலை இடிச்சகதை.

ஓருடல் ஓருயிர் நிலை மாறி பல்லுடல் பல்லுயிரா மாறினாலும் நம்ம உயிர்களெல்லாம் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. (செல் ஃபோன்கள் டவர்களால் இணைக்கப்பட்ட மாதிரி) ஆனால் அகந்தை காரணமா பிரிஞ்சிருக்கம். நோக்கமென்னவோ சக உயிர்களோட இணையறது. ஆனால் நாம செய்றதென்னவோ .. பணம் பணம்னு அலையறதுதான் .ஏற்கெனவே இணைஞ்சிருக்கிற ஒரு சில உயிர்களிடமிருந்தும் பிரிஞ்சுர்ரம் பை.தனமா இல்லே?


பொரிகடலை:

13.பணம் கடவுளை கூட உயர்ந்தது. ஏன்னா கடவுளை பார்க்க முடியாது. பணத்தை கொண்டு கடவுளை பார்க்கலாம். சிறப்பு தரிசனமுங்கோ

14.கடன் வாங்கினா அதுக்கு கட்டவேண்டியது வெறும் வட்டி மட்டுமில்லை.. நம்ம சுதந்திரத்தையும்தான். ஏழுமலையான் மட்டும் குபேரன் கிட்டே கடன் வாங்காம இருந்திருந்தா தாளி நம்ம உதவாக்கரை பிரார்த்தனையையெல்லாம் காது கொடுத்து கேட்க வேண்டிய நிலை வந்திருக்குமா?

15.பணம் நெருப்பு மாதிரி .ரெம்ப எட்ட நின்னா வறுமை குளிர் வாடும். ரெம்ப நெருங்கி நின்னா பொசுங்கிருவம்.

16.எதையாவது சாதிக்க பணம் சம்பாதிச்சா புரிஞ்சிக்கலாம். சம்பாதிக்கறதுக்காகவே சம்பாதிச்சா ?

17.பணம் எப்படிப்பட்ட குரூபியையும் அழகனா /அழகியா மாத்தக்கூடிய ப்யூட்டிஷியன்

18.பணமிருந்தா வெளி மன்சாளுங்க நெருக்கமாவாய்ங்களோ என்னமோ சொந்த மன்சாள் மட்டும் தூரமாயிருவாய்ங்க. ( அப்படி நெருங்கியிருந்தா அது போக்கத்த நாயினு அர்த்தம் ஏதோ ஒரு நா கடிச்சு வைக்கும்)

18.பணம் மூளைய கொண்டு யோசிக்கிற திறமைய தரும். ஆனால் இதயத்தை கொண்டு யோசிக்கிற மனிதாபிமானத்தை மண்ணாக்கிரும்.

19.பணம் இருக்கும்போதும், தொடர்ச்சியா வர்ரப்பயும் அது குறித்த சிந்தனையே இருக்காது. அது குறித்த சிந்தனை இருக்கும் வரை பணம் வராது.

20.மனிதன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் மரணத்துக்கு முடிச்சிட்டு யோசிக்கிறான் ( நினைவிலி மனதில்) உ.ம் இருட்டு,தனிமை, நிராகரிப்பு,அவமானம்,ஏழ்மை,பசி,முதுமை . இதெல்லாம் மரணத்தின் நிழல்கள். இதையெலாம் செயிக்கத்தான் பணம் தேடறான். மரணத்தின் நிழல்களுடனான யுத்தத்துல வேணம்னா பணம் கொஞ்சம் போல தைரியத்தை தரலாம். ஆனால் அது மரணம் பற்றின அச்சத்தைதான் அதிகரிக்குது. அதை எதிர்காலம் குறித்த சிந்தனையா மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு புது புது எல் ஐ சி பாலிசியா போடறோம்

21.எல்லார்க்கிட்டயும் பணம் இருக்கு. சிலர் கிட்ட பணமா இல்லை. ஆனால் பணமா மாத்தக்கூடிய எத்தனையோ சமாசாரம் ஒவ்வொரு மன்சன் கிட்டயும் இருக்கு. அதை ஐடென்டிஃபை பண்ணிக்கிட்ட ஏழை பணக்காரன் ஆகிறான்.

22.பணம் பலர் விஷயத்தில் தலை முடியெல்லாம் கொட்டிப்போன பின் கிடைக்கு சீப்பாய் இருக்கிறது

23.பணம் ஜஸ்ட் ஒரு கருவி. அதை நாமதான் உபயோகிக்கனும். சனம் பணத்தின் கையில கருவியாயிர்ரதுதான் சோகம்.


( இதான் ரூட்டு ..இதை நாளைக்கும் தொடரலாம்

4 comments:

ஒன்னு மட்டும் சொல்லிக்க விரும்பறேன், என் எதிர்பார்ப்பை ரொம்ப தூண்டறிங்க,
புதுசா ஏதும் சொல்லாம அரைச்ச மாவையே அரைச்சிங்கன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

வாங்க கதிர் ராத் அவர்களே !
நான் ஒன்னே ஒன்னை சொல்லிர்ரன். நாம சொல்றது ஒரு சில மடிசஞ்சிகளுக்கு மொக்கையா அன்சைன்டிஃபிக்கா கூட தோனலாம்.

ஆனால் அரைச்ச மாவு பிசினஸ் மட்டும் நம்ம கிட்டே கடியாது. இதெல்லாம் என்னாங்கறிங்க?

அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்..

பொரி கடலை : அருமை !
மிக்க நன்றி !

வாங்க திருமலை பாபு!
கருத்துரைக்கு நன்றி.

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More