சாதனை மனிதர்கள் (2)


     சமீபத்தில் நான் இணையத்தில் படித்த தகவல் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவிடுகிறேன். அந்தக் காலத்துத் தலைவர்கள் போல் வருமா... ? என்று நம் மக்கள் காந்தியையும், காமராஜரையும் சொல்லிக் கொண்டு இருக்கும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு தலைவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகிறேன்.
  • ·  இவரும் ஒரு நாட்டின் தலைவர் தான்.
  •     அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
  • ·அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
  • ·இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
  • ·படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)
  • · இவரது வங்கி நிலுவை 0
  • ·இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி தன்னுடைய நாட்டின் உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்
  • · அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
  • · பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
  • ·நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம் 
இந்த எளிமையான முறையில் ஆட்சி நடத்துபவர் மதிப்புக்குரிய ஈரான் ஜனாதிபதியான மஹ்மூத் அஹ்மதிநெஜாட். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தலைவர் என்று நான் வியந்தேன். சாதனை மனிதர்களில் இவரைப் பற்றிச் சொல்ல என்ன அவசியம் என்று கேட்கிறீர்களா....?
எளிமையாக வாழ்வது எவ்வளவுப் பெரிய சாதனை. அந்த வகையில் என்னைக் கவர்ந்த சாதனையாளர், தலைவர் மஹ்மூத் அஹ்மதிநெஜாட்

8 comments:

நல்ல பதிவு....

தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...

நல்ல மனிதர் , ஆனா நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினர் எடுபிடி பண்ற அலப்பர தங்க முடியல அண்ணா, பகிர்ந்தமைக்கு நன்றி

நல்ல மனிதர் , ஆனா நம்ம ஊர் சட்டமன்ற உறுப்பினர் எடுபிடி பண்ற அலப்பர தங்க முடியல அண்ணா, பகிர்ந்தமைக்கு நன்றி

என்ன செய்வது நம்முடைய சிந்தனையில் நல்லத் தலைவர்கான விதை இன்னும் விழ வில்லை என்று தான் தோன்றுகிறது.

இப்படியும் ஒருவரா என்ற அதிசயிக்க வைக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் வாழ ஆசைப்படும் நம்மூர் தலைவர்களுக்கு இந்த கட்டுரையை ஒரு நகல் அனுப்புங்கள்!

கருத்துரை இட்ட தமிழ்ச்செல்வி அவர்களுக்கும்,ரஞ்சனியம்மாவிற்கும் நன்றிகள்.

ரஞ்சனியம்மா நீங்கள் சொல்வது போல் நகல் அனுப்பலாம்.நம்மூரில் தலைவர்கள் இருந்தால்... எங்கு தலைவர்கள் இருக்கிறார்கள்

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More