பணம் பணம் பணம் : 3


அண்ணே வணக்கம்ணே !
பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே ,பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்னெல்லாம் ஹைலைட் பண்றாய்ங்களே இந்த நிலை ஏன் வந்தது தெரீமா?

எக்கனாமிக்ஸ்ல டிமாண்ட் அன்ட் சப்ளை தியரி இருக்கு. மார்க்கெட்ல தேவை அதிகமா இருந்து சப்ளை குறைவா இருந்தா விலை சாஸ்தியாகும். உ.ம் தங்கம்.

அதே போல பணத்தேவை எல்லாருக்கும் இருக்கு.ஆனால் இந்தியாவுல நிலவின வர்ணாசிரம கொள்கை காரணமா பஹுஜனங்கள் கல்வி அறிவில்லாம இருந்துட்டாய்ங்க.

போதாக்குறைக்கு தியரி ஆஃப் கர்மா வேற. கொய்யால நீ ஏழையா இருக்கியா இதுக்கு போன ஜென்மத்துல நீ செய்த பாவம் தான் காரணம். நீ தலை கீழே நின்னு ரசத்துல முகம் கழுவினாலும் பணக்காரனாக முடியாதுங்கறது தான் இந்த தியரி.

இந்த ரெண்டு காரணங்களால பணம் சில பேர் கிட்டே மாத்திரம் தேங்கி போச்சு. பெருவாரியான சனம் பணத்துக்கு அல்லாடற நிலை இருக்கு. இதனால தான் பணத்துக்கு இத்தனாம் பெரிய பில்டப்பு.

இந்த 2 காரணங்கள் உங்களுக்கும் தெரிஞ்ச காரணங்களே.ஆனால் இன்னொரு காரணம் இருக்கு வாத்யாரே.. அது இன்னாடான்னா விதவிதமான காரணங்களால பணத்தை விரட்டி விரட்டி கேட்ச் பண்ணி தன் கஸ்டடியில வச்சிருக்கிறவனுக்கு கூட அதை எப்டி நிர்வகிக்கிறதுன்னு தெரியலை.

அடபோங்கய்யா.. கையில பணம் இருந்தா அதை நிர்வாகம் பண்றதா பெரீ மேட்டரு. என் கிட்டே மட்டும் பணம் மாட்டினா ன்னுட்டு நீங்க கருவறது கேட்குது.

மஸ்தா பேருக்கு தெரியாத மேட்டர் இன்னாடான்னா பணம்ங்கறது ரத்தம் மாதிரி.ரத்தம் எப்படி நிற்காம ஓடி - ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனையும்,க்ளூக்கோசையும் கொடுக்குதோ அப்படி பணம் கூட சமூகத்தின் எல்லா வர்கங்களுக்கும் பாய்ந்த படி அவிகளுக்கு உற்சாகத்தை தரனும்.. அப்பத்தேன் பொருளாதாரங்கற செட் அப் ஹெல்த்தியா -ஆக்டிவா இருக்கும்.

ஓடிக்கிட்டிருக்கிற ரத்தத்துக்கு ப்ரஷர் அதிகமானா அதை ஹை பி.பிங்கறோம், ப்ரஷர் குறைஞ்சு போனா லோ ப்ரஷருங்கறோம். சரி ஔயுங்கான ப்ரஷரோட பாயற ரத்தம் கூட எங்கயும் தேங்கிப்போயிரக்கூடாது.ஆவியாயிரக்கூடாது. அது தேங்கிப்போனாலோ - ஆவியாகிபோனாலோ டோட்டல் பாடி எஃபெக்ட் ஆயிரும்.ரத்தம் இப்படி பாயும் போது அது அசுத்தமாகி போகுது.அதை சுத்திகரிக்க ஒரு அமைப்பு இருக்கு.

பண விஷயத்துலயும் இதே தான் நடக்குது. பொருளாதார அமைப்புல அரசு, வங்கிகள் , நிறுவனங்கள், தனிமனிதர்கள் எல்லாருமே பார்ட் ஆஃப் தி பாடி போலத்தான்.

இந்த பணம்ங்கற ரத்தம் அம்பானியை நோக்கி பாயும் போது மட்டும் ஹை ப்ரசரோட பாயுது. உபரியா பாயுது. அம்பானி என்ன பண்றாரு? வெட்டியா செலவழிச்சு வானுயர்ந்த மாளிகை கட்டறாரு. டாட்டா மாதிரி கம்பெனிங்க ராடியா மாதிரி ப்ரோக்கருங்களுக்கு கொட்டி கொடுக்கிறாய்ங்க.

அதே நேரம் இந்த பணம் ஒரு குப்பனையோ ,சுப்பனையோ நோக்கி பாயும் போது மட்டும் ப்ரசர் ரெம்ப லோவாயிருது.

பணம்ங்கறது பணம் தான். அது மார்க்கெட் முழுக்க சுத்தி வரனும். இதுல உங்க பணம் என் பணம்னு வித்யாசம்லாம் கிடையாது.

இங்கே என்ன நடக்குதுன்னா.. அரசு லாஜிக்கே இல்லாத நிர்வாக செலவுங்கற பேர்ல அதை தீர்த்து கட்டிருது. வங்கிகள்னா லாஜிக் பார்க்காம சகட்டுமேனிக்கு ப்ராஞ்ச் ஓப்பன் பண்ணி நிர்வாக செலவுகளை ரெட்டிப்பாக்கிக்கிராய்ங்க, இதுல வாராக்கடன், வட்டி தள்ளுபடில்லாம் வேற வருது.

இந்த குப்பன் ,சுப்பன் மேட்டர்ல என்னடா ஆகுதுன்னா அவன் கைக்கு வந்த பணம் வாடகை,பவர் பில், நாடார் கடை ப்ரொவிஷன் பில்லுன்னு ஆவியாயிருது.

ஆக பணம்ங்கறது சில பேர் கிட்டே மட்டும் இருக்கிறதாலயும் -அவிகளுக்கும் மணி மேனேஜ்மென்ட் பெருசா தெரியாததாலயும் ,பஹுஜனங்கள் போதிய கல்வியறிவில்லாததால , தியரி ஆஃப் கர்மா மாதிரி இழவுகளின் காரணமா பணம் பண்றதுல ஆர்வம் காட்டறதில்ல - பணம் பண்றதை ஒரு பாவ காரியமா நினைக்கிறாய்ங்க.

அதே சமயம் தங்கள் கைக்கு வந்த காசை மல்ட்டிப்ளை பண்ணனுங்கற இன்ஸ்டிங்ட் இல்லாம அன் ப்ரொடக்டிவ் மேட்டர்ல கரியாக்கிர்ராய்ங்க( உ.ம் கண்ணாலம், சீமந்தம் , சாவு ,காரியம்) . டாட்டா,பிர்லா,அம்பானி,வாடியா மாதிரி ஆட்கள் ஓடிவந்த பணத்தை அணை கட்டி தேக்கிர்ராய்ங்க. பஹுஜனங்கள் காவிரி டெல்டா விவசாயிகள் மாதிரி வாயில வவுத்துல அடிச்சிக்கிறாய்ங்க.

இதையெல்லாம் சொல்ல வந்தது சனம் ஏன் பணத்துக்கு இப்படி அலையுது -பணத்துக்கு ஏன் இத்தனை மதிப்புன்னு உங்களுக்கு உணர்த்தத்தான்.

இந்த இழவையெல்லாம் மாத்த நம்மால முடியாதுதான்.ஆனால் இந்த மேட்டர்லாம் நமக்கு தெரியாம பணம் பண்ண முடியாதுங்கண்ணா.அதுக்குத்தேன் இந்த மொக்கை.

நாம பணம் பண்ணனும்னா சனம் 24 மணி நேரம் -365 நாள் என்ன பண்றாய்ங்க - அவிக காசு பணம் சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு -சம்பாரிச்ச காசை எப்படி செலவழிக்கிறாய்ங்கன்னு தெரியனும். இந்த ப்ளூ ப்ரிண்ட் கையில இருந்தா நாமளும் நாலு காசை புரட்ட முடியும்.

சனம் 24 மணி நேரம் -365 நாள் என்ன பண்றாய்ங்க?

ஸ்தூலமா அவிக என்ன செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற இன்ஸ்டிங்ட் ரெண்டுதேன். ஒன்னு கொல்லனும் - அடுத்தது கொல்லப்படனும்.

அவிக காசு பணம் சம்பாதிக்க என்னெல்லாம் செய்யவேண்டியிருக்கு?

தங்களை தாங்கள் கொன்னுக்கவேண்டியிருக்கு.

மேனேஜர்: ஏன்யா.. ஒன்னை எல்லாம் எவன்யா வேலைக்கு வந்து தாலியறுக்க சொன்னான்.. பேசாம மாடு மேய்க்க போயிருக்கலாம்யா நீ

ஊழியர்: (தலை சொறிந்தபடி) ஹி ஹி.. இந்த தடவை தப்பாயிருச்சு சார்.. இனி தப்பே நடக்காம பார்த்துக்கறேன்

சம்பாரிச்ச காசை எப்படி செலவழிக்கிறாய்ங்க?

ஊழியர் : ( சரக்கடித்தபடியே) கொய்யால.. அவன் மேனேஜராம். மயிராம். இவனை ஒரு தாட்டி எம்.டி. என்னா மாதிரி கழுவி கழுவி ஊத்தினாரு தெரீமா.. அப்படியே மூஞ்சி பழங்கஞ்சி மாதிரி ஆயிருச்சு..

ஆக சம்பாரிக்கனும்னா நம்மை நாம பலி கொடுக்கனும். சம்பாரிச்சுட்டா அடுத்தவனை பலி போடலாம். இதான் பிரதான சூத்திரம்.

இதை கேட்ச் பண்ணிட்டிங்கனா லட்சம் கோடில்லாம் ஜூஜுபி.. இதை பற்றி இன்னம் கொஞ்சம் டீட்டெய்லா அடுத்த பதிவுல பார்ப்போம்.. உடுங்க ஜூட்டு..


4 comments:

அன்னாத்தே பதிவெல்லாம் நன்னாதக்கீது...

ஒன்னு ரெண்டு வார்த்தைய வுட்டுகின்னு போட்டிருக்கிலாம்ல...

நீ சொன்னா சரியாதான் இருக்கும் அன்னாத்தே...

ஜகா வாங்கிக்கிறேன்...

அண்ணே !
எழுதறதுல ரெண்டு விதம் இருக்கு. ஒன்னு நான் சொல்றது வேதம். நீ கேள்வி கேட்கப்படாதுன்னுட்டு சொல்லிக்கினே போறது.

இன்னொரு மெத்தட் படிக்கிறவுக பார்வையில அவிகளுக்கு எந்த எந்த இடத்துல டவுட் வரும்னு கெஸ் பண்ணி அவிகளை கன்வின்ஸ் பண்ணிக்கினே போறது.

நம்முது ரெண்டாவது ஸ்டைல். கொஞ்சம் நை நைனு இருந்தாலும் செகண்ட் ஸ்டைல் தான் பெட்டர்.

ஆயிரம் முறை யோசனை செய்து முடிவு செய் ...(சொல்றத கேட்டு நடக்க )
ஆனால் முடிவு செய்த பின்பு ஒரு முறை கூட யோசிக்காதே !!!
அப்டீன்னு யாரோ சொல்லி இருக்காங்க ...

அண்ணனோட மேட்டர் ல நம்ம வழி இதுதான் ....
(தாங்கள் இந்த கருத்தை எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை -
காரணம் இதுதான் உண்மை ...)

வாங்க திருமலை பாபு !
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

ஐ நூறு ரூவா நோட்டை கொடுத்தா எப்டி அலார்ட்டா பார்த்து வாங்கறமோ அப்டி தான் கருத்துக்களையும் ஒவ்வொரு தாட்டியும் உரசிப்பார்த்து வாங்கிக்கனும்.

கடவுளே இறங்கி வந்து சொன்னாலும்..(இதுல நாம எதுல கணக்கு..ஃப்ரீயா உடுங்க)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More