சாதனை மனிதர்கள் (3)


”ஞானத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமானால் ஏற்கனவே நிரப்பிக் கொண்டதை கீழே கொட்டியாக வேண்டும்.பற்றுதலை துண்டித்துக் கொள்ள வேண்டும்.”
தன் மகன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான் என்று, மகனைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஜானகி நாத்திற்கு கவலை வந்துவிடும்.காரணம் விளையாட்டு மைதானாம் போல் பெரிய வீடு, சொடுக்குப் போட்டுக்கூப்பிட்டால் ஓடி வர வேலையாட்கள்.அன்பான அப்பா,அம்மா,சகோதர,சகோதிரிகள்.வீடு முழுதும் நிரம்பியிருக்கும் உறவினர்கள்.விருப்பம் போல ஓடியாடி விளையாடலாம். எதை வேண்டுமானாலும் எடுத்துப் போட்டு தைரியமாக உடைக்கலாம்.
      ஆனால் ஜானகி நாத்திற்கு தன் மகன் ஏன் பிற குழந்தைகளிடம் ஒட்டுவதில்லை, விளையாடுவதில்லை,சண்டைப் பிடிப்பதில்லை ஏன் இவன் இப்படி இருக்கிறான்…? என்ற கவலை இருந்துக் கொண்டே தான் இருந்தது.
      பள்ளிக்கு சென்றால் நண்பர்கள்,ஆசிரியர்கள் படிப்பு என்று எதுவும் அந்த ஜானகிநாத்தின் மகனை ஈர்க்கவில்லை.
      வீட்டில் ஒரு முறை தாய் பூஜைச் செய்வதைப் பார்த்து மகனும் பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.அது மட்டுமின்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் பற்றியவர்களின் புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினான்.தனியாக அமர்ந்து படித்தவற்றை அடி மாறாமல் சொல்லிப் பார்க்கவும் தொடங்கினான். தந்தையின் கவலை மேலும் அதிகமாகியது.ஆனால் மகனோ எந்த வித கவலையும் இன்றி இருந்தான்.
      ”யாரும் அவனோட சேராதீங்க ! அவன் ஒரு பைத்தியம்”
பள்ளியில் நண்பர்கள் தனக்கு வைத்தப் பெயர் என்றுத் தெரிந்தும், அதைப் பற்றி எதுவும் கவலைபடாமல்,தன் இலட்சிய கனவை நோக்கிப் பயணித்தான் மகன்.ராமகிருஷணரும்,விவேகானந்தரும் அதிகமாக அவனை ஈர்த்தார்கள். ஒரு முறை விடுமுறைக்காக வெளியில் கிராமப் புறங்களைச் சுற்றிப்பார்க்க நேர்கையில் அங்கு கண்ட காட்சிகள் அவன் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
            குடிக்கப் பால் கூடக் கிடைக்காமல் எலும்பும் தோலுமாக கைக்குழந்தைகள்,படிப்பறிவில்லாமல் மக்கள் இருக்கும் இடம்,சுவாசிக்கும் காற்று எதிலும் தூய்மை இல்லை.நோய் வாய்ப்பட்ட மக்கள் வைத்தியம் செய்துக் கொள்ளக் கூட வசதியில்லை.யாரோ முகத்தில் ஓங்கி அறைந்தாற்ப் போல் வலி ஏழ்மையை முதன் முறையாக உணர்ந்துக் கொண்டான் அந்நொடி…
அதன் பிறகு அவன் ஆன்மீகத் தேடலுடன் சமூகச் சிந்தனைத் தேடலும் கலந்துக் கொண்டது.
மக்களின் அவல நிலையைப் போக்கும் முயற்சியில் இறங்கினான். பிற்காலத்தில் தந்தை ஜானகி நாத் பணத்தின் மூலம் சம்பாதித்த பெயரை விட மகன் உலகம் போற்றும் தலைவரில் ஒருராக பெயரெடுத்தார்.
அவர் யாரென்று கேட்கிறீர்களா…?
இந்திய தேசிய ராணுவ இயக்கத்தை முதன் முதலில் தொடங்கியவர். நம் பெருமைக்குரிய தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
நம் தேசத்திற்க்காக இவர் செய்த தன்னலமற்ற காரியங்கள் சொல்லில் அடங்காதவை. தன்னலமற்ற செயல்கள் செய்து தேசத்திற்க்காக உழைக்கும் ஒவ்வொடு ,மனிதரும் சாதனை மனிதர் தான்.
மேலே தோன்றும் முதல் இரண்டு அடிகள் நேதாஜி தன் வாழ்க்கையில் இறுதி வரைக் கடைப்பிடித்தவைகள்.


6 comments:

தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு...

அருமையான வார்த்தை அமைப்பு...

வாழ்த்துக்கள்...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்... அருமை...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

பகிர்வுக்கு நன்றி

அழகான எழுத்து நடை, தொடருங்கள், நன்றி

அருமையான பதிவு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட அனைத்து நட்புள்ளங்களுக்கும் நன்றி

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More