பணம் பணம் பணம்: 4


அண்ணே வணக்கம்ணே !
அக்காவுங்களுக்கு சொல்றதில்லியா வணக்கம்னு விஜாரிக்கிறாய்ங்க. அவிகளுக்கும் வணோக்கம். தொழிற்களம் வலைதளம் மூலம் நாலாவது நாளா "பணம் பணம் பணம்" தொடர் பதிவு இன்னைக்கும் தொடருது.

கடந்த பதிவுல பணம் ரத்தம் மாதிரி..அது தேங்காம ,உறையாம ,ஆவியாகாம , ஒரே அழுத்தத்தோட சமூகத்தின் எல்லா வர்கங்களுக்கு இடையேயும் பிரவகிக்கனும் இல்லின்னா நாஸ்தி. இதை செய்ய நம்மால முடியாது அரசாங்கம்தேன் மனசு வைக்கனும்னு சொல்லியிருந்தேன்.

கு.பட்சம் டாப் 10 பணக்காரவுகளாச்சும் இதை ஃபாலோ பண்ணனும். வயல்ல கரும்பு வெட்டும்போது ஒரு ஜாண் விட்டுட்டு வெட்டுவாய்ங்க . ஏன்னா அப்பத்தேன் அடுத்த வருசம் கரும்பை பார்க்க முடியும்.

காந்தி தாத்தா சொல்வாரு "உன் சொத்துக்கு நீ ஜஸ்ட் ட்ரஸ்டி மட்டும் தான்" நம்ம கைக்கு வர்ர பணம் வெறும் பணம் இல்லை. இந்த ஒட்டு மொத்த பொருளாதார அமைப்புல தமனி,தந்துகின்னு எல்லா ரத்தக்குழாய்க்கும் பாய வேண்டிய ரத்தம். அதை டாஸ்மாக்லயும் , பப்லயும் ஒழிச்சு கட்ட நமக்கு எந்த ரைட்டும் இல்லை.

சரிங்ணா உபதேசம் போதும். இப்பம் பணம் பண்ணனும்.அதுக்கு என்ன வழி? சொல்லிருவம்ல...

இதை தெரிஞ்சுக்கனும்னா சனங்க பணத்தை எப்படி - எதுக்கு செலவழிக்கிறாய்ங்கன்னு தெரிஞ்சுக்கனும். மரணத்தின் நிழல்களோடு யுத்தம் செய்ய செலவழிக்கிறாய்ங்க.

மரணம் தெரியும். அதென்ன மரணத்தின் நிழல்கள்? மரணத்தை ஞா படுத்தறதெல்லாம் மரணத்தின் நிழல்கள் தேன்.

இருட்டு - தனிமை -ஏழ்மை - நிராகரிப்பு -(தன்னை சேர்ந்தவர்களுக்கும் தனக்கும் இடையே உள்ள) தூரம்.,மவுனம் இப்படி நிறைய விசயங்கள் இருக்கு.இந்த விஷயங்களோடு சனம் பிறந்தது முதல் யுத்தம் பண்றாய்ங்க.

இந்த யுத்தத்துல அவிக உபயோகப்படுத்த புதுசு புதுசா ஆயுதங்களை தயார் செய்து கொடுக்கனும். அப்டி கொடுத்தா செமை சில்லறை புரட்டலாம்.

1.இருட்டு :
பல்பு ,சோலார் பல்புலருந்து மெழுகு வர்த்தி வரை (செல் ஃபோன் வாங்கறவன் கூட அதுல டார்ச் இருக்கா பார்த்து வாங்கறான்னா சனம் இருட்டுக்கு எந்த அளவுக்கு அரண்டு போறாய்ங்கன்னு பாருங்க.. ஏன்னா இருட்டு மரணத்தை ஞா படுத்திருது)

2.தனிமை:
செல்ஃபோன், சிம் கார்டுலருந்து செக்ஸ் ராக்கெட் வரை இதுல அடங்கும். மனிதமனம் தனிமையை தவிர்க்கவே பார்க்குது. இன்னொரு உயிர் பக்கத்துல இருந்தா தேன் -அதோட இது இன்டர் ஆக்ட் ஆனாத்தேன் தான் உசுரோட இருக்கிறதை கன்ஃபர்ம் பண்ணிக்குதுங்கோ..

3.ஏழ்மை:
அந்தகால ஃபைனான்ஸ் கம்பெனிகள் ,ஆட்டுக்காரன்,தோட்டக்காரன் முதல் இன்றைய ஈமு கோழிப்பண்ணை ,நாட்டு கோழி பண்ணை எல்லாம் இந்த கேட்டகிரியில தான் வருது.

4.நிரகாரிப்பு:
பெரிய ஆளுன்னா விருது வரும். விருது வருதுன்னா அவன் பெரிய ஆளாத்தான் இருப்பான். இப்டி நீங்க நினைச்சிங்கன்னா நீங்க அய்யோ பாவம்னு அருத்தம்.

உட்டாலக்கடி விருதுலருந்து சோப்பு டப்பா பரிசு வரை சனத்தை ஈர்க்க காரணம் இங்கன எல்லாருமே தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலின்னு தான் நினைக்கிறான். ஒரு சின்ன அங்கீகாரத்துக்காக என்ன வேணம்னா செய்ய துடிக்கிறான்.

5.தூரம்:
ரூட் பஸ்ஸுல அம்பது ரூவாய்க்கு போக முடியும்.ஆனால் ட்ராவல்ஸ் பஸ்ஸுல ரூ.300ன்னா கூட பாஞ்சு ஏறிர்ரான்.ஏன்னா தன்னை சேர்ந்தவர்களுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரம் -அந்த தூரத்தை கடப்பதற்கான நேரம் மரணமே போல அவனை பயமுறுத்துது..

6.மவுனம்:
ஐ ஃபோன்,எஃப்.எம் ,சான்ட் பாக்ஸ் இதெல்லாம் என்னா பண்ணுதுங்கறிங்க உங்க மவுனத்தை கொல்லுது..மவுனம் மரணம் போன்றது..

இந்த தொடரை படிக்கிற நீங்க எல்லாம் என்னை விட அறிவாளிங்கன்னு தெரியும். அதனாலதேன் ச்சொம்மா அப்டி புள்ளி வச்சுக்கிட்டு போறேன். கோலம் ..நீங்க போட்டுருவிங்க தானே..மெற்சொன்ன 6 கேட்டகிரியில 60 ஆயிரம் தொழில்களை அடக்கிர்ர கப்பாசிட்டி உங்களுக்கு இருக்குதுண்ணே.. ஆளுக்கு ஒரு கேட்டகிரி எடுத்துக்கிட்டு தலா 10 தொழிலை எழுதுங்க.. என் அசெஸ்மென்ட் கரீட்டுன்னு ப்ரூஃப் பண்ணுங்கண்ணே..

இந்த 6 கேட்டகிரியில உள்ள தொழில் - ஆனால் அது அவுட் டேட்டடா இருக்கப்படாது- ஏற்கெனவே பழந்தின்னு கொட்டை போட்டவன் அதை செய்துக்கிட்டிருக்ககூடாது.செய்துக்கிட்டே இருந்தாலும் தாளி பெரும்போக்குல வேலைக்காரவுக பொறுப்புல விட்டுட்டு சொதப்பிக்கிட்டு இருக்கனும்.

அப்படியா கொத்த தொழிலை -உங்க வயசு -ஆர்வம் - முதல் - சர்க்கிளுக்கு ஏத்த தொழிலை சின்னதா துவங்கிட்டா கூட எங்கயோ போயிருவிங்க.

ஆனால் கான்செப்டை மறக்க கூடாது.. நீங்க மரணத்தின் நிழல்களோடு ஃபைட் பண்ணிக்கிட்டிருக்கிற சனத்துக்கு கையில ஒரு ஆயுதத்தை தந்துரனும். அது மொன்னையா இருக்கப்படாது. அரதப்பழசா இருக்கக்கூடாது. புதுசா ரோசிக்கனும்.ஆமாம் சொல்ட்டேன். இதையெல்லாம் பின் வரும் நாட்கள்ள விபரமா பார்க்கத்தான் போறோம்..

காசு சம்பாதிக்க இன்னொரு வழியும் இருக்குங்ணா .அது சனங்க தங்களை தாங்கள் கொல்ல நாம உதவனும்.. இப்பம் ஸ்டார்ட் பண்ணதுமே 100 கி.மீ வேகத்தை தொடற ரேஸ் பைக்கெல்லாம் இருக்கே அது என்னாத்துக்காம் ? சாகத்தேன்.

ஆனால் நீ சாக நாங்க உதவறோம்னு சொல்லமுடியாது .. பாலிஷ்டா .. உங்க பக்கத்து வீட்டுக்காரனை பொறாமையில சாகறாப்ல பண்ணுங்கன்னு கூவி விக்கலாம்..

இந்த ட்ராக்கை நாளைக்கு பார்த்துருவம்.. உங்க கமெண்ட் தான் இந்த தொடர் பதிவின் போக்கையே தீர்மானிக்க போகுது.

சினாப்ஸிஸ் எழுதி வச்சுக்கிட்டு இந்த தொடரை ஆரம்பிக்கலை.. உங்க ரெஸ்பான்ஸை பொருத்து வண்டி புதுப்புது ரூட்டை பிடிச்சு பறக்கும்.ஓகேவா..2 comments:

தம்பி ரூட் சரியா இருந்தா, குழப்பம் எதுக்கு...

நீங்க பாட்டுக்கு போய்ட்டே இருக்க வேண்டியது தான்...

ரைட்...ரைட்...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்...

அண்ணே !
நீங்களே ரூட் க்ளியர் பண்ணப்பாறம் என்ன இருக்கு.. ரை ரைட் !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More