பணம் பணம் பணம் : 5


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்கா !
தொழிற்களம் வலைதளத்தில் 5 ஆவது நாளாக இந்த பணம் பணம் பணம் தொடர்பதிவு தொடருது. இது முடியறதுக்குள்ளாற அட பணம் தானே பாஸு.. அதெல்லாம் சம்பாரிச்சுக்கலாம் உடுங்கற ரேஞ்சுக்கு வந்துருவிங்க.

ஆனால் இன்னைய தேதிக்கு பணத்துக்கு புலிப்பாலுக்கு அலையறதை அதிகமா அலையறோம். புதுசா புரட்டறது ஒரு பக்கம்னா சம்பாரிச்சதை காப்பாத்திக்கிறதே மலையா இருக்கு.

ஏன்? பணம்னா சனம் ஏன் இந்த அளவுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறாய்ங்க. பணம் மரணத்தை மரண பயத்தை துரத்துது (கொஞ்ச நேரத்துக்காச்சும்)

மரணத்தின் நிழல்களை விலக்கி வைக்குது.(கொஞ்ச நேரத்துக்காச்சும்) பணத்தை எப்டி சம்பாரிக்கிறோம்? செத்து சுண்ணாம்பாகி சம்பாரிக்கிறோம். இல்லியே நான் ஏசிலதான் இருக்கேன்னு சொல்றவுக தங்கல் ஈகோவை பலி கொடுத்து சம்பாரிக்கிறாய்ங்க.

குழந்தை எம்ப்டி ஸ்லேட்டா இந்த பூமிக்கு வருது. சுத்தி இருக்கிறவுக தான் அதுக்கு ஒரு செல்ஃப் - ஒரு ஈகோவை உருவாக்கிறாய்ங்க. காலப்போக்குல அந்த குழந்தை அந்த செல்ஃபையும் - ஈகோவையும் தன் உயிர் போல கருத ஆரம்பிச்சுருது.

காசு பண்ணனும்னா நாம உசுராவே எண்ணி - பொக்கிஷமா பாதுகாக்கிற இந்த செல்ஃப் ,ஈகோவை பலி கொடுத்தே ஆகனும்.இதனாலத்தான் காசு உசுருக்கு சமானமா இருக்கு. இதை எவன்னா லவட்டிக்கிட்டு போயிட்டா உசுரே போனாப்ல ஆயிருது. பணம் கைக்கு வந்தா போன உசுரு திரும்பி வந்தாப்ல ஒரு ஃபீல் ஆகுது.

நீங்க உசுரா நினைச்சு காதலிச்ச குட்டி ச்சூ காட்டிட்டு போயிருக்கும். ச்சொம்மா டைம் பாஸுக்குன்னு ஒரு சைட்ல வெயிட்லிஸ்ட்ல போட்டு வச்சிருந்த டிக்கெட்டு " டே .. நெஜம்மாவே உன்னை லவ் பண்றேன்டா"ன்னு கண்ல தண்ணியோட சொல்லுது.

ஏன்?ஏன் ? ஏன் இப்டி நடக்குது? முயற்சி வெற்றி பெற உங்க முயற்சியே தடை ஆயிருது. அதுக்குன்னு முயற்சி பண்ணாம இருக்க முடியுமா? முடியாது. இதுக்கு என்ன தான் தீர்வு? ஒரு விளையாட்டை போல முயற்சி பண்ணனும். அது எப்டின்னு இன்னைக்கு பார்ப்போம்.

சப்ஜெக்டுக்குள்ளாற போறதுக்கு மிந்தி நேத்தைய பதிவுக்கும் இன்னைய பதிவுக்கும் சின்ன லிங்க் கொடுத்துரலாம்:

கடந்த பதிவுல சனங்க மரணத்தின் நிழல்களோடு செய்ற யுத்தத்துக்கு ஆயுதங்கள் தயாரிச்சு வழங்கினா பணம் ஈட்டலாம்னு சொல்லியிருந்தேன். அதே போல சனம் செத்துப்போக தேவையானதை தயாரிச்சு வித்தாலும் பெரும் பணம் ஈட்டலாம். உடனடி உதாரணத்தை சொல்லனும்னா டாஸ்மாக்கு.

பணம் பண்றதுக்கு இருக்கிறதெல்லாம் இந்த வழிகள் தான்

1.நீங்க செத்துப்போக ரெடியாயிரனும் -

எம்.ஜி.ஆர் எல்லா சொத்தையும் அடகுவச்சு நாடோடி மன்னன் படம் எடுத்துக்கிட்டிருந்தாராம்.அப்பம் ரிப்பொர்ட்டருக்கு :" என்ன தலீவா ஏன் இப்படி?"ன்னு கேட்டாய்ங்களாம். அதுக்கு வாத்தியாரு.. படம் ஹிட்டானா நான் மன்னன். ஃபெயில் ஆனா நாடோடின்னாராம். அந்த ரேஞ்சுல கமிட்மென்ட் இருக்கனும்.

செத்துப்போறதுன்னா மண்டைய போட்டுர்ரதில்லை. ஃபிசிக்கலா உங்களை நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கனும். உங்க ஈகோவை பொலி போடனும். அப்பத்தேன் வெற்றி.அப்பத்தேன் பைசா.


2.அடுத்தவங்களை கொல்ல தயாரா இருக்கனும்.

ஃபேக்டரிக்கு புதுசா ஒரு மிஷினரி வருது. இஞ்சினியர்,வேலையாட்கள் எல்லாம் காலையிலருந்து மாலை வரை அசெம்பிள் பண்றாய்ங்க மேற்கொண்டு சின்ன சின்ன சரிபார்ப்புகள் ,வெலைகள் இருக்கு. இந்த நிலையில மிச்சத்தை .. நாளைக்கு பார்த்துக்கலாம்னு போயிர்ராய்ங்க.

நீங்க தேன் எம்.டி. மெஷினரி மேன்யுவலை வச்சுக்கிட்டு இன்டர்னெட்டை குடைஞ்சு - என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணி ஒர்க் ஆவுட் பண்ணிர்ரிங்க.

மறு நாள் இஞ்சினியர் -வேலையாட்கள் எல்லாம் வர்ராய்ங்க.அவிக வரும்போதே மிஷின் ஓடிக்கிட்டிருக்கு.ப்ரொடக்சன் நடந்துக்கிட்டிருக்குன்னு வைங்க.என்ன ஆகும்?

பய புள்ளைக செத்துப்போயிருவாய்ங்க ! இப்படி அடுத்தவங்களை கொல்ல தயாரா இருக்கனும்.


3.உங்களை சேர்ந்தவுகளுக்கும் - உலகத்துக்கும் சாகவும் -சாகடிக்கவும் நீங்க இன்ஸ்பிரேஷனா இருக்கனும். அதுக்கு அவிகளை ப்ரிப்பேர் பண்ணனும். அதுக்கு தேவையான வழி வகைகளை, கூட்ஸை மார்க்கெட்டுக்கு கொண்டு வரனும்.

இந்த அலைவரிசைக்கு உங்க மைண்டை ட்யூன் பண்ணனும்.அப்பத்தேன் "காசு மேல காசு வந்து"னுட்டு பாடமுடியும்.

கொல்லவும் கொல்லப்படவும் அனேகவழிகள் இருக்கு.அதுல தலையாயது செக்ஸ். அம்மாவால கிடைக்க வேண்டியது கிடைக்காம போனா குழந்தை சீக்கிரமே பெரியவனாயிர்ரான். ( சைக்கிக் பிரச்சினைகள் இருக்கும் அது வேற கதை)

பொஞ்சாதியால கிடைகக வேண்டியது (சரி வர ) கிடைக்காதவன் சீக்கிரம் பெரியாளாயிர்ரான் (பெரியாளான பிறவு அதே விளையாட்டுல ரெண்டாவது இன்னிங்ஸ்ல கோதாவுல இறங்கிர்ரான். இது வேற கதை)

"பாறைகள் இல்லையேல் ஓடைக்கில்லை சங்கீதம்"னு வைரமுத்து சொல்லுவாரு. ஒரு சாதாரணனா தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதவன் தான் சாதிக்க துடிக்கிறான். சம்பாதிக்க துடிக்கிறான். அவனோட ஜீன்,வளர்ப்பு சூழல்,கல்வியை பொருத்து அவனோட அஜெண்டா இருக்கும். (பாசிட்டிவ் ஆர் நெகட்டிவ்)

கிடைக்க வேண்டியது கிடைக்காம ஃபீல்டுக்கு வர்ரவன் இறுக்கமா ,நெர்வசா இருப்பான். நிறைய உணர்ச்சி வசப்படுவான். இவன் செயிக்க எத்தனை சதவீதம் வாய்ப்பிருக்கோ தோத்துப்போகவும் அத்தனை சதவீதம் வாய்ப்பு இருக்கு.

பதிவின் இடையில முயற்சியே தடையாயிருது -முயற்சியை ஒரு விளையாட்டாய் செய்தா வெற்றி நிச்சயம்னு ஒரு பாய்ண்டை சொல்லியிருந்தேன். இது எப்ப சாத்தியம்னா..

கிடைக்கவேண்டியதெல்லாம் - இன் டைம் - இன் ப்ராப்பர் மேனர் கிடைச்சிருந்தா -செக்ஸுக்கு பிறகும் உங்களில் படைப்பு சக்தி உபரியா இருந்தா அப்பம் உங்க முயற்சியெலாம் விளையாட்டு போல இருக்கும். வெற்றி நிச்சயம்.

வித விதமான ஃபோபியாக்களோட ,மனமுடிச்சுகளோட ,எங்கயோ விட்டதை பிடிச்சுரலாம்ங்கற ஃபீலோட பொருளீட்ட துவங்கறவுக நிலை ரெம்ப பரிதாபம். இந்த மாதிரி கேரக்டர்களாலதான் ஒட்டு மொத்த பொருளாதாரமே நாறிருது..

கிடைக்க வேண்டியதை கிடைக்க செய்றது எப்படி? கிடைக்காட்டாலும் மேனேஜ் பண்றது எப்படி? கிடைச்சதை தாண்டி ரோசிக்கிறது எப்படி? கிடைக்காதது என்னைக்கும் கிடைக்காதுங்கற தெளிவை ஏற்படுத்திக்கிறது எப்படி?

நாமும் பொருளீட்டி - சமுதாயத்தையும் பொருளீட்ட வச்சு கொல்லுதல் -கொல்லப்படுதல்ங்கற செக்கு வாழ்க்கையிலருந்து வெளிய வர்ரது எப்படிங்கற விஷயத்தை எல்லாம் இந்த தொடர்ல பார்க்கத்தான் போறோம்.

எச்சரிக்கை:

உங்களை அறிவாளிங்க - புள்ளி வச்சா கோலம் போடுவிங்க- கோடு போட்டா ரோடு போடுவிங்கன்னு தூக்கோ தூக்குன்னு தூக்கி எளுதினாலும் நோ கமெண்ட்ஸ்..

போவட்டும் கோலத்தை மனசுல போட்டு பார்த்திட்டிங்க போல.இல்லாட்டி கிளிச்சிருப்பிங்களே.. ஓகே .. அடுத்த அத்யாயத்துல நாளைக்கு சந்திப்போம்.. உடுங்க ஜூட்டு..

4 comments:

மிக அருமை.தொடரட்டும்.ஒரு வேண்டுகோள்.மொழி கலப்பு இல்லாமல்
எழுதுக

ஐயா,
மொழி கலப்பு ? கரெக்ட் நீங்க சொல்ற அளவுக்கு ஓவராயிருச்சு.

இனி தமிழ் மக்கள் தமிழே போல உபயோகிக்கும் வார்த்தைகளை தவிர மொழிக்கலப்பு இருக்காது.

வழிகாட்டுதலுக்கு நன்றி.

இல்ல சார் நீங்க சொன்னது அனைத்தும் நிசமாலுமே கரெக்ட்.
செருப்பக கழட்டி அடிக்கறது சொல்லுவாங்கள்ள அது இதுதான்.மற்றவங்கெல்லா வார்த்தை ஜாலம் பண்ணி எழுதி இருப்பார்கள்.தாங்கள் யாதார்த்தத்தை எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள்.“வாழ்க வளமுடன்.“கொச்சின் தேவதாஸ்

வாங்க தேவதாஸ்!
வரவுக்கும் -கருத்துரைக்கும்- பாராட்டுக்கும் நன்றி. சப்ஜெக்டை டைல்யூட் பண்றேனோன்னு ஒரு சந்தேகம் இப்பவும் இருக்கு.

ஒரு 25 வருசம் கழிச்சாவது சனம் நம்ம எழுத்தை புரிஞ்சுக்குவாய்ங்கன்னு நினைச்சு எழுதினேன்.

இன்னைக்கே புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More