பணம் பணம் பணம்: 6


அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா!!

தொழிற்களம் மூலமா 6 ஆவது நாளா உங்களை சந்திக்கிறேன். உங்கள்ள ஒரு சிலர் ஞா கிழமையே இந்த அத்யாயத்துக்காவ எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் போடலை.ஏன்னா இன்னைக்கு ஒரு அரிய தத்துவத்தை சொல்லனும். சொல்றதுக்கு மிந்தி நாம ஃபாலோ பண்ணியாகனும்ல. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்டைல் இது.(பையன் -வெல்லக்கட்டி எட்செட்ரா -ஞா வந்துருச்சா)

வேலை செய்றது எவ்வளவு முக்கியமோ வேலை செய்யாம இருக்கிறது கூட முக்கியம். எப்பம் வேலை செய்யனும் -எப்பம் வேலை செய்யாம இருக்கனும்னு டிசைட் பண்றது அதை விட முக்கியம். எம்.ஜி.ஆர் எத்தனை படம் பண்ணாரு -சிவாஜி எத்தனை படம் பண்ணாருன்னு பாருங்க..எம்.ஜி.ஆர் ஒவ்வொரு தாட்டியும் நூற்றுக்கணக்கான எம்.எல்.ஏக்களை ஜெயிக்க வச்சு சி.எம் ஆனாரு. ஆனால் சிவாஜியால ஒரு எம்.எல்.ஏவா கூட ஆகமுடியலை.

ஏன்னா உலக அளவில் சிறந்த நடிகனாக இருந்தும் சிவாஜிசாருக்கு இந்த தத்துவம் தெரியலை. நீங்க இதை தெரிஞ்சுக்கிட்டே ஆகனும். இதை எதுக்கு இப்பமே சொல்றேன்னா இந்த தொடர்பதிவு முடியறதுக்குள்ளயே நீங்கல்லாம் பெருசா சம்பாதிக்க ஆரம்பிச்சிருப்பிங்க.

உங்கள்ள பலர் நினைச்சிட்டிருக்கிறதை போல பணம் சம்பாதிக்கிறது ஜஸ்ட் நம்ம தேவைக்காக இல்லை. பணம் சம்பாதிக்கிறது ஒரு கேம். மைண்ட் கேம். அதுலயும் புத்திசாலிகள் மத்த புத்திசாலிகளை விட தாங்கள் புத்திசாலிகள்னு நிரூபிக்க ஆடற கேம். ( விளையாட்டுன்னு சொன்னா அருத்தம் மாறிரும்.அதனாலதேன் மொழிக்கலப்பு ) இதுல ஓய்வும் அந்த கேம்ல ஒரு பாகம். ஓய்வு புத்திசாலியை இன்னம் கொஞ்சம் புத்திசாலியாக்கும். இந்த ஓய்வும் உங்க உழைப்பில் ஒரு பாகமாயிரும்.

வாழ் நாள் எல்லாம் நாமே சம்பாதிச்சுக்கிட்டிருந்தா நாம புத்திசாலிகள் அல்லன்னு அருத்தம். நாம சம்பாதிச்ச பணம் பணத்தை சம்பாதிக்கனும். இன்னைக்கு சேட்டிலைட் விட்டாய்ங்க. ஒரு தாட்டி லாஞ்ச் பண்ணி விட்டுட்டா அதும்பாட்டுக்கு தன் வேலைய பார்க்கனும். அப்பப்போ நாம "அவுட் புட்" என்னனு பார்த்துக்கிடனும்.

பணம் சம்பாதிக்கிறதும் அப்படித்தேன். ஒரு யாவாரத்தை ஆரம்பிச்சு லாஞ்ச் பண்ணி விட்டுட்டா அதும்பாட்டுக்கு ஓடனும். நாம கொஞ்சமா ஓய்வெடுத்துக்கிட்டு புத்துணர்ச்சியோட அதை அடுத்தபடிக்கு கொண்டு போக களம் இறங்கனும்.

கடந்த பதிவுல "அம்மாவால கிடைக்க வேண்டியது கிடைக்காம போனா குழந்தை சீக்கிரமே பெரியவனாயிர்ரான். பொஞ்சாதியால கிடைகக வேண்டியது (சரி வர ) கிடைக்காதவன் சீக்கிரம் பெரியாளாயிர்ரான் "னு பஞ்ச் விட்டிருந்தேன்.

இப்டியாகொத்த ஆளுங்கதேன் 24 மணி நேரம் -365 நாளும் எந்த புதுமையும் இல்லாம - எந்த அக்கறையும் இல்லாம யந்திரத்தனமா செயல் பட்டு தங்களுக்கு கிடைக்காததை மறக்கவே பணம் சம்பாதிச்சுக்கிட்டிருப்பாய்ங்க.

அவிக நோக்கம் பணம் சம்பாதிக்கிறதில்லை. தங்களை + தங்களுக்கு கிடைக்காததை மறக்கறதுதேன். பணம்ங்கறது வாழ்க்கைங்கற வாகனத்துக்கான எரிபொருள். எரிபொருள் நிரப்பிக்கிறதே நம்ம நோக்கமா? போற வழியெல்லாம் இருக்கிற பெட் ரோல் பங்குல எல்லாம் பெட்ரோல் போட்டுக்கிட்டே கிடக்கோமா? இல்லியே .. நாம போகவேண்டிய இடத்துக்கு எவ்ளோ பெட் ரோல் வேணமோ நிரப்பிக்கிறோம். போய்க்கினே இருக்கோம். வண்டி ரிசர்வுக்கு வந்துட்டா கிட்டக்க எங்கனா பெட் ரோல் பங்க் இருந்தா நிரப்பிக்கிறோம்.

நாம சம்பாதிக்கிறதே நம்ம லட்சியத்தை சாதிக்கத்தேன். கனவை நனவாக்கிக்கத்தேன்.ஜஸ்ட் சம்பாதிக்கிறதுக்காகவே சம்பாதிக்கிறது முட்டாத்தனம். இதுல எதையோ மறக்க சம்பாதிக்கிறதுல ஈடுபடுத்திக்கிறது அதை விட அடி முட்டாத்தனம்.

இந்த ரெண்டு கேட்டகிரியில உள்ளவுக தான் எல்லா நேரமும் வெளி நாட்ல பாஸ்போர்ட் தொலைச்ச கணக்கா மூஞ்சை வச்சுக்கிட்டு பறந்து பறந்து சம்பாதிப்பாய்ங்க. இந்த கேட்டகிரி ஆசாமிகள் வெற்றி பெற்றால் சமூகம், பொருளாதாரம் ,வீடு, நாடு எல்லாமே பாதிக்கப்படுது. தோத்துப்போனாலோ சு..த்தம்.

பணம் சம்பாதிக்க நாம செய்ற முயற்சி வெற்றி பெற நம்ம முயற்சியே தடை ஆயிருது. அதுக்குன்னு முயற்சி பண்ணாம இருக்க முடியுமா? முடியாது. இதுக்கு என்ன தான் தீர்வு? ஒரு விளையாட்டை போல முயற்சி பண்ணனும். அது எப்டி?

பணத்தை ரெண்டு கேட்டகிரியா பிரிச்சுக்கனும். ஒன்னு வாழ்க்கை நடத்த தேவையான பணம். இன்னொன்னு பணம் சம்பாதிக்கிற விளையாட்டுக்கான பணம்.

வாழ்க்கை நடத்த தேவையான பணத்தை சம்பாதிக்கறச்ச இந்த தொடர்பதிவையெல்லாம் போட்டு குழப்பிக்காதிங்க. இந்த தொடர்பதிவு வாழ்க்கை நடத்தை தேவையான பணத்தை சம்பாதிக்க வழி சொல்ற பதிவல்ல. ஆனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக்கிட்டு இந்த ட்ராக்லருந்து கழண்டுக்கறேன்.

மின்சார ரயில் ஸ்டேஷன்ல நிக்கறச்ச தேவையான பவர் - அடுத்த ஸ்டேஷனுக்கு பயணிக்கிற நேரத்துல தேவைப்படற பவரை விட மிக மிக குறைச்சலா இருக்கனும். சிஸ்டத்தை ஸ்லீப் மோட்ல போட்ட கணக்கா இருக்கனும்.

ஏன்னா மின்சார ரயில் ஸ்டேஷன்ல நிக்கும் போது பைசா சம்பாதிக்கிறதில்லை. அதனோட பயணம் தான் பைசா தரும்.

வாழ்க்கைய நடத்த தேவையான பணம் தெண்டம் (நான் ப்ரொடக்டிவ்). மிஞ்சிப்போனா உங்களை உங்கள் பண வேட்டைக்கு தயார் பண்ணும் அவ்ளதான். ( பண வேட்டைக்கு புறப்படறதா இருந்தா)

கிடைக்க வேண்டியது கிடைக்காதவன் அதை மறக்க பண வேட்டைக்கு புறப்படறான்.அது காட்டடி . வாத்யார் படத்துல அவரு கத்திச்சண்டை போடறதை பார்த்திருப்பிங்க. விளை........யாடுவாரு.முகத்துல புன்முறுவல் கூட அப்டியே இருக்கும். ஒரு படத்துலன்னா ஈரோயின் கிட்டே "சற்று விளையாடிவிட்டு வருகிறேன்"னே சொல்ட்டு கோதாவுல இறங்குவாரு.இதுவே நம்பியார்,அசோகன் மாதிரி வில்லனுங்க கத்திச்சண்டை போடறச்ச அவிக முகம் அஷ்ட கோணலா மாறும். சண்டையில தோத்துப்போயிருவாய்ங்க.

அதனால நீங்க கிடைக்க வேண்டியது கிடைக்காத இந்த வேட்டைக்கு வந்திங்களான்னு வெரிஃபை பண்ணிக்கங்க. இது நெஜம் தான்னா கிடைக்க வேண்டியதை கிடைக்க செய்றது எப்படி? கிடைக்காட்டாலும் மேனேஜ் பண்றது எப்படி?ங்கற மேட்டர் எல்லாம் இந்த தொடர்ல கொண்டு வந்தா வேணம்னே செக்ஸை நுழைக்கிறான்னு கெட்ட பேர் வரும். அதனால நீங்க இங்கே அழுத்தி மேட்டரை ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

இல்லையா கிடைக்காதது என்னைக்கும் கிடைக்காதுங்கற தெளிவை ஏற்படுத்திக்குங்க. முக்கியமா பணத்துல ,பணத்தால கிடைக்காதுன்னு தெளிவு படுத்திக்கங்க. அவலை நினைச்சு உரலை இடிச்ச கதையா பண வேட்டைக்கு வந்திருக்கம்ங்கற தெளிவோட செயல்பட துவங்குங்க. உங்களை அடிச்சுக்க ஆளே இருக்காது.

இப்பம் கிடைச்சவுக கிடைச்சதை தாண்டி ரோசிக்கிறது எப்படி - சகட்டுமேனிக்கு பைசா சம்பாதிக்கிறது எப்படின்னு நாளைக்கு சொல்றேன்?


3 comments:

அண்ணாச்சி பதிவெல்லாம் நல்லாத்தான் பதியுறீங்க ஆனா ரொம்ப குழப்பமா இருக்கே? தெளிவாக சொன்னால் நாங்களும் முயற்சி செய்வோம்..

நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்...

அண்ணே ..
ஆருனா வாசகர் இந்த கமெண்டை போட்டிருந்தா குழப்பமா இருக்கேன்னா நீங்க ரோசிக்க ஆரம்பிச்சிட்டிங்கன்னு சொல்லி அடிச்சி விட்டிருக்கலாம்.

நீங்க சொல்றிங்கன்னா நெஜமாலுமே குழப்பம் இருக்கலாம்.

தவிர்க்கிறேன்.

mikaum payanulla thagaval!

முகநூலுக்கு போட்டியாக வளர்க்கூடிய வாய்ப்புள்ளது என்று கருதப்படும் ஒரு தளம் இது ! இதில் சேரும் ஒவ்வொருவருக்கும் 1 வர்சுவல் ஷேர் ஐயும் தருகிறது ! முகநூல் போலன்றி கூகிள் போல வரும் வருமானத்தில் நமக்கும் பங்கு தருவது என்ற நோக்கத்தில் உருவாகி வருகிறது இந்த சோசியல் நெட்வொர்க் ! தற்போது அழைப்பின் மூலம் மட்டுமே சேரமுடியும் !

சேர: http://www.zurker.in/i-304957-cynwwrawql

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More