எங்கே செல்கிறது நம் மானம்/மனம்...?

  என்ன பதிவுலகமே, தலைப்பை படித்ததும் குழப்பமாய் இருக்கிறதா... குழப்பம் தீர பயணம் செய்யுங்கள் என்னோடு...

இன்றைய இளைஞர்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருக்கிறார்களோ, இல்லையோ சமூக வலைத் தளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். 

சமீபத்தில் டிசிஸ் (TCS) நிறுவனம், 12-18 வயதுள்ள இந்தியாவின் முக்கிய நகரங்களில் படிக்கும் பள்ளி மாணவர்களிடம்,  சமூக  வலைத் தளங்கள் உபயோகிப்பதை குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.

அதில் பலர் அலைபேசி மூலம்  முகப் புத்தகம் அதாங்க FACEBOOK. உபயோகிப்பதே எளிதாக உள்ளது எனவும், அதிலும் 3G சேவையை கொண்டு இயங்கும் ஆண்டிராயடு (ANDROID) அலைபேசிகளை உபயோகிப்பதும் தெரிகிறது. 

 அப்டி என்னதாங்க இருக்கு அங்க, வாங்க பார்க்கலாம்.
 சில மாணவர்கள், பெற்றோர் அழைத்தால் கூட கேட்பதில்லை என்று சொல்வதைக் கேட்டதுண்டு, அது என்னங்க சில மாணவர்கள், நானே அப்படி இருந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை தான் என்று அரசு ஊழியர்களுக்கு ஒரு கணக்கு உண்டு. ஒரு மனிதன தினமும் 8 மணிநேரம் தூங்க  வேணும். இது போலே  ஏன்  சாப்பிடும் போது  கூட,தொடர்ந்து நான் 8 மணி நேரம் உரையாடியதுண்டு ( CHATING), இப்பலாம் அப்டி இல்லிங்கோ...

 உரையாடல்களின் வகைகள் சமூக வலைத் தளங்களில்....

1. கடலை போடுறது ( அப்டின்னா...?)

2. தொழில் விவாதம் (பெரிய ஆள்தான்..)

3. அரட்டை அடித்தல் ( விசுனனு நினைப்பு )

4. வதந்தியை பரப்புதல் (குசும்புத்தனம்)

5. காதல் லீலைகள் (அனுபவம் இல்லிங்கோ)

6. சமூக சேவை ( கேபிள் சங்கர் அண்ணாச்சி..)

7. மனதை அறிதல் ( கலைஞரின் முகப் புத்தகம் )

8. வேலை தேடுதல் ( இங்கயுமா...!!!)

இப்படி பல புதுமைகள்...!? இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பதனை அறியணும்.  

பலர் இளைஞர்கள், மட்டும் தான் இப்டி இருப்பது போலவும், தாங்கள் சத்திய சோதனையின் எழுத்துக்கள்,என்று மார்தட்டி கொள்பவர்களில் சிலரே அரிச்சந்திரனின் வார்த்தைகள், சிலரோ பசுத் தோல் போர்த்திய எ(பு)லிகள் தான் என்பதனை மறந்து விடக் கூடாது.

பல சகானாக்கள்,ஜெயலக்ஷ்மிகள்,லியாகத் அலிகள்  இங்க இருக்கிறார்கள் என்பது ஏனோ புரிவதில்லை இவர்களுக்கு.

கள்ளக் காதலிகளைக் கொன்றவர்கள், அல்லது கள்ளக் காதலிகளுக்காக மனைவியைக் கொன்றவர்கள்  இளைஞர்களா,நடுத்தர வயதினரா? பதில் உங்கள் மனசாட்சியிடம் இருக்கும். 

வழிநடத்த வேண்டியவர்கள், வழி தவறினால், பின்பற்ற வேண்டியன் பின்னே தானே போவான்.

சமூக தளங்களை எப்படி பயன் படுத்த போகிறோம்?

இப்பதிவினை எழுதும் போது  தோன்றிய கவிதை, உண்மையா, இல்லையா சொல்லுங்கள்.

       என் உரிமை
காதலி கண்ணகியாய் 
இருக்க வேண்டும் எனக்கு.
ஆனால்...

நான் கோபிகையருடனும் 
இருப்பேன், 
என் உரிமை அது 

சிந்தியுங்கள்... எங்கே செல்கிறது நம் மானம்/மனம்...?

இங்கே நுனிக் கரும்புதான் இருக்கிறது, சாட்டையடி அடுத்தபதிவில்....

                                                                 நன்றி! 
செழியன்8 comments:

உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் நண்பா...

நல்ல பதிவு...

வாழுத்துக்கள்...

நன்றி ,தொழிற் களமே, காத்திருத்தல் தானே காதலில் சுகம், நான் வாசிக்கும் காதலைத் தான் சொன்னேன்,

ஆனாலும் ரொம்ப குசும்புயா உனக்கு... (சும்மா உல்லுல்லாய்)

காதலி கண்ணகியாய்
இருக்க வேண்டும் எனக்கு.
ஆனால்...


நான் கோபிகையருடனும்
இருப்பேன்,
என் உரிமை அது
கவிதையுடன் அருமையான விளக்கம்

ஹா ஹா தொழிற் களமே

நன்றி தமிழ் ராஜா அவர்களே --

அப்படி போட்டுத் தாக்குங்க...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More