எங்கே செல்கிறது நம் மானம்/மனம் ? பகுதி -2

 இப்போவெல்லாம் யாரை பார்த்தாலும் "நீங்க முகப் புத்தகத்திலே இருக்கிறீர்களா? " என்றே கேட்கிறார்கள். மது, மாது, புகை இலை போன்றவற்றை போலவே நாம் சமுக வலைத் தளங்களுக்கு அடிமை ஆகி விட்டோம்.  

முந்தைய பதிவினை படிக்க
எங்கே செல்கிறது நம் மானம்/மனம் ? பகுதி-1

 இத் தளங்கள் மேல்நாட்டினர் அவர்கள் தேவைக்கு என்று உண்டாக்கினர். அவர்கள் பள்ளிப் பருவம் வரையில் தான்  பெற்றோர் படிக்க வைப்பர், பின்னர் அவர்கள் கல்லூரி நாட்களில் பகுதி நேர வேலை பார்ப்பார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட அப்படி செய்தாராம். ஆனால் நம் நிலைமையோ தலைகீழ் " வேலை தேடுறேன், ஒன்னும் சரியாய் அமைய மாட்டேன்குது" இந்த பொன்மொழிகளை பலரிடம் கேட்கலாம்.
                                                            

 நான் தேவை இல்லை என்று சொல்லவில்லை, பயன் படுத்தும் முறையை நம்மில் பலரும் அறியவில்லை. நன்மையை விட தீமை தான்  அதிவேகமாக பரவுகிறது. பெண்களின் புகைப்படங்களை எடுத்து நவீன தொழில் நுட்பம் மூலம் அவமானப் படுத்துதல். "எங்கே போய் சொல்ல?"

சென்ற பதிவிலே உரையாடல்களின் வகைகள் கண்டோம். 

அதனை பற்றி ஒரு என்னுடைய ஒரு கவிதை

         முகப் புத்தகம் 

"சுட்டெலியை முக நூலில்
உன் சுட்டு விரல் முத்தமிட,
இனிதே தொடங்குகிறாய்....
உன் காதல் உரையாடலை,
முகம் தெரியாத ஒருத்தியுடன்....
நினைவிருக்கட்டும்,

அவள் உன் உடன்பிறந்த
சகோதரியாய் கூட இருக்கலாம்....!


உண்மை அறியாதவரை
நீங்கள்,
வாழ்கின்ற மனிதர்கள்,


அறிந்தால்....!
வாழ்கின்ற பிணங்கள்...." 

முகப் புத்தகம் பற்றி  இக்பால் செல்வன் அவர்களின்  கவிதை

"முகம் தொலைத்தவர்கள்
தேடிக் கொண்டிருக்கின்றார்கள்
புதிய முகமூடிகளை
முகநூலில் !!!"

கவிதைகள் உண்மை முகத்தை காட்டும்  கண்ணாடி தானே...

                                           நன்றி                                                                      செழியன்

3 comments:

/// அறிந்தால்....!
வாழ்கின்ற பிணங்கள்...." ///

நிறைய... நிறைய... பிணங்கள்...

//கவிதைகள் உண்மை முகத்தை காட்டும் கண்ணாடி தானே...//

அருமையான வரிகள்...

நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்...

நன்றி தொழிற் களமே, தனபாலன் அண்ணா

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More