சிலரது தலை முடி சுருளாகவும் சிலரது தலை முடி நேராகவும் இருக்கக் காரணம் என்ன?சிலரது தலை முடி இயற்கையாகவே சுருளாக அமைந்து விடுகிறது. சுருள் முடி பார்க்க கவர்ச்சி ஆக இருப்பதால் நேரான முடியுள்ள சிலரும் சலூனுக்கு சென்று சுருள் முடி போல செய்து சொல்வதை நாம் பார்க்கிறோம். ஏன் இப்படி சிலரது தலை முடி சுருளாகவும் சிலரது தலை முடி நேராகவும் அமையக் காரணம் தான் என்ன? நமது தலை முடி இயற்கையாகவே பல மாறுபட்ட வகை உள்ளது. கேரட்டின் என்ற புரதத்தால் ஆனது அது. இந்தக் கேரட்டின் சுருள் வடிவில் அமையும் போது முடியும் சுருள் தன்மையை பெறுகிறது. இந்த கேரடினில் கந்தக அணுக்கள் உள்ளன. இந்த கந்தக அணுக்களின் எண்ணிக்கையும் ஒன்றுடன் ஒன்றான இணைப்பும் நல்ல இறுக்கமான சுருள் அமைப்பு உருவாகிறது.  இப்படித்தான் முடி சுருள் தன்மையை பெறுகிறது

சுருள் முடி அமைய மரபணுக்களும் காரணம். சில குடும்பங்களில் கந்தக அணு இணைப்புக்கள் முடிக்குள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் சில குடும்பத்தினர் ஒரே விதமான முடி அமைப்பை பெற்றிருப்பதை காணலாம். அண்மைக் கால ஆய்வில் முடி வேர் மற்றும், முடி தண்டின் அமைப்பும் முடியின் அமைப்பை நிர்ணயிப்பதை கண்டறிந்து உள்ளனர். முடி வேரின் அடிப்பாகம் ஒரு சுருள் அமைப்புடன் இருக்கும் போது முடி சுருளாகவும் எந்த சுருளும் இல்லாத போது முடி நேராக அமைவதும் தெரிய வந்துள்ளது

சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் முடியை நன்கு உலர்த்தி பேணுதல் அவசியம். ஆல்கஹால் மற்றும் ரசாயனம் கலந்த முடி அழகு சாதன பொருட்களை பயன் படுத்தாதிருப்பது நலம்

1 comments:

இவ்வளவு இருக்கா இதுல ? அப்பசிலருக்கு முடியே இல்லாமல் அல்லது இருந்து என் தலைபோல ஆக காரணம் என்ன ?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More