இனி மென்பொருள்களை நிறுவ (இன்ஸ்டால்) கசக்காது

     ஒவ்வொரு நாளும் கணினி உலகில் மென்பொருள்கள் புதிதாக வந்த வண்ணம் உள்ளன.சில மென்பொருள்கள் எளிதில் கிடைத்துவிடும்.ஆனால் சிலவற்றை தரவிரக்கம் செய்வது போதும் போதும் என்றகிவிடுகின்றன.மேலும்,கணினியில் எதாவுது சிக்கல் ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது மீண்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.இயங்குதளத்தை  கூட மீண்டும் நிறுவுவது மிக எளிது.ஆனால் அனைத்து மென்பொருளையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை எளிதாக்க புதியதாக ஒரு மென்பொருள் வந்துள்ளது.


     எந்தந்த மென்பொருளை நிறுவ வேண்டுமோ அவற்றை ஒட்டு மொத்தமாக தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் கணினியில் நிறுவி விடலாம். நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த நினிடே (Ninite) தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும் பாலான மென்பொருள் பட்டியலிடபட்டிருக்கும்.  .


     உங்களுக்கு தேவையான மென் பொருளை தேர்ந்தெடுத்து கொண்டு கெட் இன்ச்ட்டல்ளீர்(Get Installer) என்பதை கிளிக் செய்யுது மென்பொருள் தரவிரக்கபட்டு கணினியில் நிறுவப்பட்டு விடும் .இது முற்றிலும் இலவசமான மென்பொருள். பயன்பெறுவீர்...!


2 comments:

பயனுள்ள தகவலுக்கு நன்றி...

நல்ல பயன்னுள்ள பதிவு.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More